செய்திகள் :

`தீவிரவாதிகளுடன் தொடர்பு' - மும்பையில் 5 முதியோர்களை டிஜிட்டல் கைது செய்து ரூ.2.3 கோடி பறிப்பு

post image

சைபர் குற்றவாளிகள் முதியோர்கள் மற்றும் பெண்களை பணமோசடி, போதைப்பொருள் குற்றச்சாட்டு, தீவிரவாதிகளுடன் தொடர்பு என ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி மிரட்டி அல்லது டிஜிட்டலில் கைது செய்து ஆன்லைனில் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதனை தடுக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் பெரிய அளவில் பயனளிக்காமல் இருக்கிறது.

மும்பையில் வெறும் 20 நாட்களில் 5 முதியோர்களை சைபர் குற்றவாளிகள் மிரட்டி டிஜிட்டலில் கைது செய்து ரூ.2.3 கோடியை பறித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் 61 வயது முதல் 86 வயது வரை ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆவர். இவர்களிடம் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், தீவிரவாதிகள் உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி இருப்பதாகவும், பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறி மிரட்டி அவர்களை டிஜிட்டலில் கைது செய்து அவர்களது வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை தங்களது வங்கி கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்ய வைத்துள்ளனர்.

இது குறித்து சைபர் பிரிவு துணை போலீஸ் கமிஷனர் பஜ்ரங் பன்சோடே கூறுகையில், ''தொலைபேசி மூலம் அல்லது வீடியோ கால் மூலம் எந்த வித கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை'' என்று தெரிவித்தார்.

ஆசிரியையிடம் ரூ.89 லட்சம் பறிப்பு

மும்பை சுன்னாப்பட்டியை சேர்ந்த 61 வயது ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு சைபர் கிரிமினல்கள் போன் செய்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு பேசினார்கள். தன்னை சந்திரபான் சிங் என்று அறிமுகம் செய்து கொண்ட அந்த நபர், பெண் ஆசிரியையின் ஆதார் கார்டு இணைக்கப்பட்ட ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில் ரூ. 2.55 கோடி மோசடிப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகக் கூறினார். இதற்காக அந்த ஆசிரியைக்கு போலி தேசிய புலனாவு முகமை, இந்திய ரிசர்வ் வங்கி ஆவணங்களை அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த ஆசிரியை தனது பெயரில் இருந்த வைப்பு தொகையை எடுத்து அவர்கள் சொன்ன வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.

இதே போன்று தன்னிடம் இருந்த தங்கத்தை விற்று ரூ. 3.7 லட்சமும், கடன் வாங்கி ரூ. 23 லட்சம் என மொத்தம் ரூ. 89 லட்சத்தை டிரான்ஸ்பர் செய்தார். பயங்கரவாதி ஆசிப் பௌஜிக்கு நிதியுதவி செய்வதாகக் குற்றம் சாட்டி ஆசிரியைை டிஜிட்டலில் கைது செய்து ரூ. 89 லட்சத்தை பறித்துள்ளனர். இது தொடர்பாக இம்மாதம் ஒன்றாம் தேதிதான் ஆசிரியை போலீஸில் புகார் செய்தார்.

இதே போன்று மலாடு (மேற்கு) பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் கடந்த மாதம் 14ம் தேதி சைபர் பிரிவு போலீஸில் கொடுத்திள்ள புகாரில், ஐபிஎஸ் அதிகாரி விஸ்வாஸ் நங்கரே பாட்டீல் என்று கூறிக்கொண்ட ஒருவர், அவரது டெபிட் கார்டு கோடிக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனைகளில் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், தீவிரவாதிகளுக்கு நிதியளித்ததற்காக தேசிய புலனாய்வு முகமை கைது வாரண்ட் பிறப்பித்து இருப்பதாகவும் கூறினார். மற்றொருவர், நாசிக் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சந்தீப் ராவ் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர்கள் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அவரது கணக்குகள் மற்றும் சொத்துக்கள் குறித்த விவரங்களையும், தகவல்களையும் கேட்டு, அவரிடமிருந்து ரூ. 89.8 லட்சத்தை மோசடி செய்துள்ளனர்.

இதே போன்று மும்பை முலுண்ட் பகுதியை சேர்ந்த 69 வயது முதியவரிடம் ரூ.12 லட்சமும், காந்திவலியை சேர்ந்த 86 வயது முதியவரை 6 வாரம் டிஜிட்டலில் கைது செய்து ரூ.25 லட்சமும், பவாய் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவரிடம் ரூ.11 லட்சத்தையும் பறித்துள்ளனர். இவை அனைத்தும் கடந்த மாதம் 10ம் தேதியில் இருந்து இம்மாதம் ஒன்றாம் தேதிக்குள் நடந்துள்ளது. இது குறித்து சைபர் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி: ஒருதலைக்காதல்; சிறுமியின் அப்பா கொலை - போலீஸார் மீது குற்றம் சாட்டும் உறவினர்கள்

திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜா (46). இவர் சினிமா தியேட்டரில் வேலை செய்து வந்தார. இவரின் மனைவி துர்கா இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகள் உள்ளனர். ராஜாவின் ஒரு மகளுக்கு 17 வயதாகுகிறது. அவர் அ... மேலும் பார்க்க

அண்டை வீட்டு வாலிபருடன் பேசிய 14 வயது மகள்; பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - வீடியோ எடுத்த கொடூர தாய்

குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகில் உள்ள அஞ்சார் என்ற கிராமத்தை சேர்ந்த 14 வயது மைனர் பெண்ணை அவரது சொந்த தந்தையே வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்ட ... மேலும் பார்க்க

ஜந்தர் மந்தர்: பெண் செய்தியாளர்களுக்கு பாலியல் தொல்லை? டெல்லி காவல்துறைக்கு வலுக்கும் கண்டனம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது, பெண் செய்தியாளர்கள் மூவருக்குக் காவல்துறையினர் பாலியல் தொல்லை அளித்ததா... மேலும் பார்க்க

”என் குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் தரவில்லை” - போதையில் செவிலியர், உறவினர்களை தாக்கிய தந்தை!

கும்பகோணம், பட்டீஸ்வரம் அருகே உள்ள முழையூர், பகுதியை சேர்ந்த தம்பதி மதன்(28)– வனிதா. இவர்களுக்கு, கடந்த 16ம் தேதி, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார ... மேலும் பார்க்க

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவல் அதிகாரி?

டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளர்களை தொடக்கூடாத இடத்தில் தொட்டு போலீஸார் பாலியல் அத்துமீறலில்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு பகிரப்பட்ட கடற்படை தகவல்கள்; கோவையில் சிக்கிய மாலுமி! - பின்னணி என்ன ?

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி என்பவர், இந்தியக் கடற்படையில் விசாகப்பட்டினத்தைத் தளமாகக் கொண்ட கிழக்கு கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றி வருகின்றார். இவர் கோவை ரெட் பில்ட்ஸ் பகுதியி... மேலும் பார்க்க