செய்திகள் :

பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு பகிரப்பட்ட கடற்படை தகவல்கள்; கோவையில் சிக்கிய மாலுமி! - பின்னணி என்ன ?

post image

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி என்பவர், இந்தியக் கடற்படையில் விசாகப்பட்டினத்தைத் தளமாகக் கொண்ட கிழக்கு கடற்படையில்  மாலுமியாகப் பணியாற்றி வருகின்றார். இவர் கோவை ரெட் பில்ட்ஸ் பகுதியில் உள்ள ஐ.என்.எஸ். அக்ரானியில் நடைபெறும்  மேலாண்மை மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த ஒரு வாரமாக தங்கி இருந்தார். இதனிடையே பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவுத்துறை அதிகாரிக்கு, இந்திய கடற்படை ரகசிய பாதுகாப்புத் தகவல்களை பிரதீப் முகர்ஜி கசிய விட்டு இருப்பதாக ஆந்திரப் பிரதேச காவல் துறையில் பயங்கரவாதக் குழுக்கள், எல்லை தாண்டிய உளவு மற்றும் உயர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விசாரிக்கும் கவுண்டர் இன்டெலிஜென்ஸ்  சிறப்பு உளவு பிரிவு போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

மேலும், சமூக ஊடகங்களில் பாகிஸ்தானிய பெண் உளவாளியிடம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்துடன் தொடர்புடைய தகவல்களை பகிரந்துள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஆந்திர மாநில  சி.ஐ. சிறப்பு பிரிவு போலீசார் இது குறித்த தகவல்களை தெரிவித்து, அவரை கைது செய்ய இந்திய கடற்படை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர். இதனையடுத்து ஆந்திராவில் இருந்து நேற்று காலை கோவை வந்த சிறப்பு குழு  கோவை ஐ.என்.எஸ் அக்ரானியில் வைத்து, இந்திய கடற்படை மாலுமி பிரதீப் முகர்ஜியை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆந்திரா மாநிலம் விஜயவாடாவிற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”வேலியே பயிரை மேய்ந்ததா..?”- திருட்டு நகை பறிமுதல் விவகாரத்தில் 4 போலீஸார் ஆயுதப்படைக்கு மாற்றம்!

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தநாடு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை கண்காணித்து, குற்றவாளிகளை விரைவாக கைது செய்வதற்காக, திருவோணம் போலீஸ் எஸ்.ஐ குமரவேல் தலைமையில் ஏட்டு தர... மேலும் பார்க்க

Flydubai: 'கத்தியால் அல்ல' - இந்திய விமானி எப்படித் தாக்கப்பட்டார்? UAE சொல்வது என்ன?

ஃபிளைதுபாய் சம்பவத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஓமனைச் சேர்ந்த விமானியான ஹமாம் அல்ஹமாமி கத்தியால் குத்தினார் என்று முன்பு கூறப்பட்டது. விமானத்திற்குள் அதுவும் காக்பிட்டிற்குள் எப்படிக் கத்தி அனும... மேலும் பார்க்க

கடனை அடைக்க நண்பர்களுடன் சேர்ந்து கடத்தல் நாடகம்! - தந்தையிடம் ரூ.90 லட்சம் பறிக்க முயன்ற மகன்

பெங்களூருவை சேர்ந்தவர் மணீஷ். சில நிதி பரிவர்த்தனைகளுக்காக கடக் செல்வதாக கூறி விட்டு மணீஷ் பெங்களூரில் உள்ள தனது வீட்டை விட்டு இரவு 11.40 மணிக்கு வெளியேறினார். மேலும் காலையில் மீண்டும் அழைப்பதாக தனது ... மேலும் பார்க்க

நாத்தனார்களின் திருமணம் மீறிய தொடர்பு; கர்ப்பிணி கொடூரக் கொலை - மாமியார் உட்பட சிக்கிய 6 பேர்

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (35). நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டுவரும் இவருக்கு, 21 வயதான சந்தியா என்பவருடன் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்து மு... மேலும் பார்க்க

உ.பி: பெண்ணாக மாற அறுவை சிகிசைக்கு விரும்பிய மகன் - எதிர்த்த தாயை அடித்து கொன்ற மகன்! | அதிர்ச்சி

பிறப்பால் சிலருக்கு ஹான்மோன் சிக்கல்கள் இருப்பது வழக்கம். அது போன்ற ஹார்மோன் சிக்கல் இருப்பவர்கள் ஆணாக இருப்பவர்களுக்கு பெண்களுக்கான குணமும், பெண்ணாக இருப்பவர்களுக்கு ஆண்களுக்கான குணமும், நடவடிக்கைகளு... மேலும் பார்க்க

ஆண் நண்பருடன் ஹோட்டலுக்கு சென்ற மருத்துவ கல்லூரி மாணவி - பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி

தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் கோமதி ஸ்ரீஜனா என்ற பெண் குழந்தைகள் மருத்துவத்தில் முதுகலைப் படிப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீஜனாவைத் தொடர்பு... மேலும் பார்க்க