செய்திகள் :

தூத்துக்குடி: வல்லநாடு ஆற்றுப் பாலத்தில் 21வது முறையாக விழுந்த ஓட்டை; சீரமைப்பு பணிகளில் மெத்தனம்!

post image

நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு கடந்த 20.11.2012 அன்று போக்குவரத்து தொடங்கியது. வல்லநாடு தாமிரபரணி ஆற்றங்கரையின் குறுக்கே 400 மீட்டர் தொலைவில் பாலமும் அமைக்கப்பட்டது. இந்த சாலையில் தினமும் ஆயிரக் கணக்கான கனரக வாகனங்கள் தூத்துக்குடி துறைமுகம், பல்வேறு தொழிற்சாலைகளுக்குச் சென்று வருகிறது. வெளி மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களும் இந்த சாலை வழியேதான் சென்று வருகின்றன.

சீரமைப்பு பணிகள்

இந்த பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது முதல் தொடர்ந்து பழுதாகி வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. அதன் பின்னரும் தொடர்ந்து பாலத்தில் பழுது ஏற்பட்டு வந்தது. சீரமைப்பு பணிகள் மேற்கொண்டும் மீண்டும் பழுதானது. இதுகுறித்து தூத்துக்குடி எம்.பி., கனிமொழி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து கடந்த 25.09.2022-ல் ரூ.13.22 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. பாலத்தின் இரு புறங்களையும் பலப்படுத்தும் பணிகள் நடந்து வந்தன.

இந்தப் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்த நிலையில், 6 மாதத்திற்குள் மீண்டும் பழுதானது. பாலத்தின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிலையில் 21வது முறையாக மீண்டும் சேதமானதால் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளது. இதனால், போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றி விடப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

சீரமைப்பு பணிகள்

இது குறித்து சமூக ஆர்வலர்களிடம் பேசினோம், “பாலம் கட்டப்பட்ட காலத்தில் இருந்து இரு பாலங்களிலும் முறையாக ஒரே நேரத்தில் போக்குவரத்து நடைபெறவில்லை. ஒரு பாலத்தில் பழுது ஏற்பட்டால் அதை சீரமைப்பதும், மற்றொரு பாலத்தில் மட்டும் போக்குவரத்தை அனுமதிப்பதுமாக இருந்து வருகிறது.  கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் இந்த பாலத்தில் நடந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றனர்.

`நீங்க கண்டிப்பா வரணும்..!' - உயிர்களைக் காப்பாற்றிய இந்திய கேப்டனை இஸ்ரேலுக்கு அழைத்த நெதன்யாகு!

ஃப்ளைதுபாய் (Flydubai) விமானத்தில் ஏற்பட்ட திடீர் தாக்குதலில் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை, அடுத்த ஆண்டு நடைபெறும் இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்க அந்த நாட்டுப் ப... மேலும் பார்க்க

"தோத்தாங்குளி கட்சிகள்தான் தங்கள் தோல்விக்கு SIR-ஐ காரணம் சொல்கின்றன" - நடிகை கஸ்தூரி கிண்டல்

இடைத்தேர்தல் பிரசாரம் உச்சம் எட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசியல் சூழல்கள் குறித்தான கேள்விகளை பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை கஸ்தூரி முன்வைத்தோம்..."விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி எப்படியிருக்கிறது?... மேலும் பார்க்க

"கூட்டணி அந்தந்த அரசியல் சூழ்நிலைக்கு தக்கவாறு மாறுபடும்"- எடப்பாடி பழனிசாமி கூறியதென்ன?

மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கனிதா சம்பத்தை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (அக்.3) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: "வீடு கட்டித் தந்தும் வீடில்லாத நிலை" - கொடப்பட்டணம் இருளர்களின் கோரிக்கை என்ன?

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கொடப்பட்டணத்தில் உள்ள இருளர் குடியிருப்பு ஊரக வளர்ச்சித்துறையின் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தில் வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியில், வீடுகளை முழுதாகக் கட்ட... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்? - `ராஜினாமா' முடிவில் கவுன்சிலர் ஸ்ரீலேகா!

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் தலைநகரான திருவனந்தபுரத்தை பா.ஜ.க கைப்பற்றியது. இதற்கிடையே பா.ஜ.க தலைமை தன்னை தொடர்ந்து ஏமாற்றி வருவதாகக் குற்றம்சா... மேலும் பார்க்க

"ஜெயிச்சாலும் தோத்தாலும் கரை வேட்டியைக் கட்டிக்கிட்டு கெத்தா நடப்போம்" - விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிக்கு வரும் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிய இருக்கும் நிலையில் தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின... மேலும் பார்க்க