`நீங்க கண்டிப்பா வரணும்..!' - உயிர்களைக் காப்பாற்றிய இந்திய கேப்டனை இஸ்ரேலுக்கு ...
Janhvi Kapoor: ``பாலியல் அத்துமீறலுக்குச் சமமானது... சும்மா விடக் கூடாது" - நடிகர் விஜய் தேவரகொண்டா
AI தொழிற்நுட்பம் எந்தளவு வசதிகளைக் கொடுக்கிறதோ அதே அளவு இடைஞ்சல்களையும், மன உளைச்சலையும் கொடுக்கிறது. சமீபகாலமாக Deepfake தொழிற்நுட்பம் மூலம் நடிகளைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனாவின் Deepfake வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி விவாதமானது. அதைத் தொடர்ந்து, முன்னணி திரைப் பிரபலங்களான ஆலியா பட், தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப், ஷாலினி பாண்டே, பாலிவுட் நடிகர்கள் ஆமிர் கான், ரன்வீர் சிங் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் இந்த டீப்ஃபேக் போலி வீடியோக்களால் பாதிக்கப்பட்டனர்.

அந்த வரிசையில் தற்போது நடிகை ஜான்வி கபூர் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு தெலுங்கு திரையுலகிலிருந்து கடுமையான எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன. நடிகர் என்.டி.ஆர், சிரஞ்சீவி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களையும், எச்சரிக்கையையும் பதிவு செய்திருந்தனர். அந்த வரிசையில் நடிகர் விஜய் தேவரகொண்டா தன் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவர் எக்ஸ் பக்கத்தில், ``மனிதத்தன்மையின் மிக மோசமான கீழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.
இதற்குப் பின்னால் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சும்மா விடக்கூடாது.
அவர்களுக்குச் சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கி, இனி யாராவது இதுபோல செய்ய நினைக்கவே பயப்படும் அளவுக்கு ஒரு முன்மாதிரியான பாடத்தைப் புகட்ட வேண்டும். இதை நாம் அப்படியே கடந்து சென்றுவிடக் கூடாது. மனிதர்களாகிய நாம் எப்போது மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அளவுக்குக் இரக்கமற்றவர்களாக மாறினோம்? இங்கே என்ன மாதிரியான வளர்ப்புமுறை நடக்கிறது? ஒருவரை ஒருவர் இழிவுபடுத்துவதில் இன்பம் காணும் எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்குமோ, வேலைவாய்ப்புகளைப் பறித்துவிடுமோ என்று உலகமே அஞ்சி விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த அறிவிலிகள் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இப்படிப்பட்ட கேவலமான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இது டிஜிட்டல் வடிவில் செய்யப்படும் ஒரு பாலியல் அத்துமீறலுக்குச் சமமானது. சட்டமும் காவல் துறையும் இதுபோன்ற செயல்களை மிகவும் தீவிரமான குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அநீதிக்கு எதிராகத் துணிச்சலாகக் குரல் கொடுத்து நிற்கும் ஒட்டுமொத்தக் குழுவிற்கும் எனது முழுமையான ஆதரவு என்றும் உண்டு."
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...



















