செய்திகள் :

``தோல்வி பயத்தின் காரணமாகவே வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கின்றனர்" - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

post image

சுதந்திர போராட்டத் தியாகி கொடிகாத்த குமரன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருடன் களம் கண்ட சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், ``மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்கள் போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள். எங்கள் survey முடிவுகளும் அதை உறுதி செய்கின்றன.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

தோல்வி பயத்தின் காரணமாகவே முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வீதி வீதியாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் முடிவதற்கு முன்பாகவே எதிர்க்கட்சியினர் புலம்பத் தொடங்கிவிட்டனர். 'வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை' என்ற புதிய அரசியலை முதல்வர் விஜய் முன்வைத்துள்ளார். மக்களைத் தெருத் தெருவாகப் போய் நேரடியாகச் சந்திக்கும் அவருடைய இந்த பிரசார முறை மிக முக்கியமானது மற்றும் பாராட்டத்தக்கது.

இதை 'தோல்வி பயம்' என்று சொல்வது தவறான புரிதலாகும். இடைத்தேர்தலில் தவெக பணம் கொடுக்கிறது என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுவது தவறான தகவல். திமுகவைப் பொறுத்தவரை பொய் பிரசாரம் செய்வதிலும், பண விநியோகம் செய்வதிலும் திட்டமிட்டு செயல்படக் கூடியவர்கள். தவெக-வை தேவையில்லாமல் கலங்கப்படுத்த நினைக்கிறார்கள். தவெக தற்போது 'இந்தியா' கூட்டணியில் இணைந்துள்ளது. அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்கும் அடுத்தகட்டப் போராட்டங்களிலும் தவெக தலைவர் விஜய் பங்கேற்பார். தவெகவின் வருகை திமுகவுக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"எங்கள் மீது வழக்குகளைத் தொடருங்கள், அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்"- சிஜேபி நிறுவனர் அபிஜித்

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பிலான சர்ச்சை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காள... மேலும் பார்க்க

``ஸ்டாலின் பேசியதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை" - எம்.பி கார்த்தி சிதம்பரம்

சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், ``தமிழக முதல்வர் வி... மேலும் பார்க்க

ஊட்டி: "பஸ் ஃப்ரீ-தான் ஆனா; பஸ் ஸ்டாண்டு டாய்லெட்டுக்கு 10 ரூபாய்" - குமுறும் பெண்கள்

சுற்றுலா மையமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவில் பொதுக்கழிப்பறைகள் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. ஊட்டி, குன்னூர் போன்ற நகரங்களில் நகராட்சி மற்றும் போக்குவரத்துக் கழகம் மூல... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை வழங்குவதாக மாணவர்களிடம் சைபர் மோசடி - வேலூரில் இவ்வளவு புகார்களா?

வேலூர் மாவட்டத்தில், பள்ளி - கல்லூரி மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோர்களைக் குறி வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபா்கள் செல்போன் மூலம் தொடா்பு கொண்டு ``அரசு சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது... மேலும் பார்க்க

மின் கசிவுக்கு 2 குழந்தைகள் பலி: ``6 மாதத்துக்கு முன்பே புகார் அளித்தும்..." - சீமான் காட்டம்

அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்–லதா தம்பதியின் 10 வயது மகள் நிறைமதி மற்றும் 6 வயது மகன் பால பிரவீன், செப்டம்பர் 30-ம் தேதி காலை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மி... மேலும் பார்க்க

`தெருக்கோடியில் இருக்கிறது கட்சி!’ - அதிமுகவில் அடுத்த விக்கெட்; தவெகவுக்குத் தாவிய முன்னாள் எம்எல்ஏ

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011, 2016 தேர்தல்களில் அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக இருந்த முருகுமாறன், அக்கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தவர்... மேலும் பார்க்க