செய்திகள் :

கல்வி உதவித்தொகை வழங்குவதாக மாணவர்களிடம் சைபர் மோசடி - வேலூரில் இவ்வளவு புகார்களா?

post image

வேலூர் மாவட்டத்தில், பள்ளி - கல்லூரி மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோர்களைக் குறி வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபா்கள் செல்போன் மூலம் தொடா்பு கொண்டு ``அரசு சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதனைப் பெறுவதற்கு தங்களின் வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும். எனவே, உடனடியாக விண்ணப்பப் பதிவு செய்ய வேண்டும்" என ஆசைவாா்த்தை கூறி வருகின்றனர்.

தொடா்ந்து, பதிவு கட்டணம், ஆவண சரிபாா்ப்புக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, க்யூ.ஆா் கோடு ஒன்றை அனுப்பி பொதுமக்களிடமிருந்து இணையவழியில் கட்டணம் வசூலித்துள்ளனா். பணத்தை செலுத்திய பின்னா் சம்பந்தப்பட்ட நபா்களின் செல்போன் எண்கள் துண்டிக்கப்படுவதுடன், அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து மொத்தத் தொகையும் திருடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் புகார்களை அளித்து வருகின்றனர்.

இவ்வாறு கடந்த ஒரே மாதத்தில் மட்டும் ரூ.20 லட்சம் வரை மோசடி நடைபெற்றுள்ளதாக 30-க்கும் மேற்பட்டோா் புகாா் தெரிவித்துள்ளனர். இந்த புகாா்களை சைபா் கிரைம் போலீஸாா் பதிவு செய்ததுடன், மோசடி தொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சைபர் மோசடி

இது குறித்து வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கூறியதாவது, ``வேலூர் மாவட்டத்தில் இலவச கல்வி, கல்வி உதவித்தொகை, ஸ்காலர்ஷிப் என்கிற பெயரில் மாணவர்களைக் குறிவைக்கும் சைபர் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த வகை மோசடி தொடா்பாக நாள்தோறும் புகாா்கள் வந்தவண்ணம் உள்ளன. தற்போது பள்ளி நிா்வாகத்தில் இருந்து பேசுவதாகக் கூறி பெற்றோா்களை நம்பவைத்து ஏமாற்றும் புதிய உத்திகளையும் மோசடி கும்பல் கையாளத் தொடங்கியுள்ளது. எனவே, கல்வி உதவித்தொகை தொடா்பாக வரும் அடையாளம் தெரியாத மற்றும் சந்தேகத்துக்கிடமான தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், இணையதள இணைப்புகளை பொதுமக்கள் ஒருபோதும் நம்ப வேண்டாம்.

தங்களது வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொல் மற்றும் ஓ.டி.பி போன்ற ரகசியத் தகவல்களை யாருடனும் பகிரக் கூடாது. இத்தகைய மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகவும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளவும். அரசு கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு பதிவு செய்ய பணம் செலுத்த வேண்டியதில்லை. தெரியாத லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம். இத்தகைய தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அரசு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் தொடர்பு கொள்ளுங்கள். உண்மையான கல்வி உதவித்தொகை திட்டங்கள் பற்றிய தகவல்களை அரசின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் மட்டுமே சரிபார்க்க வேண்டும். அறியாமை ஆபத்தை அழைக்கும்" என்கின்றனர் எச்சரிக்கையாக.

``ஸ்டாலின் பேசியதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை" - எம்.பி கார்த்தி சிதம்பரம்

சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், ``தமிழக முதல்வர் வி... மேலும் பார்க்க

ஊட்டி: "பஸ் ஃப்ரீ-தான் ஆனா; பஸ் ஸ்டாண்டு டாய்லெட்டுக்கு 10 ரூபாய்" - குமுறும் பெண்கள்

சுற்றுலா மையமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவில் பொதுக்கழிப்பறைகள் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. ஊட்டி, குன்னூர் போன்ற நகரங்களில் நகராட்சி மற்றும் போக்குவரத்துக் கழகம் மூல... மேலும் பார்க்க

மின் கசிவுக்கு 2 குழந்தைகள் பலி: ``6 மாதத்துக்கு முன்பே புகார் அளித்தும்..." - சீமான் காட்டம்

அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்–லதா தம்பதியின் 10 வயது மகள் நிறைமதி மற்றும் 6 வயது மகன் பால பிரவீன், செப்டம்பர் 30-ம் தேதி காலை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மி... மேலும் பார்க்க

`தெருக்கோடியில் இருக்கிறது கட்சி!’ - அதிமுகவில் அடுத்த விக்கெட்; தவெகவுக்குத் தாவிய முன்னாள் எம்எல்ஏ

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011, 2016 தேர்தல்களில் அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக இருந்த முருகுமாறன், அக்கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தவர்... மேலும் பார்க்க

`நீங்க கண்டிப்பா வரணும்..!' - உயிர்களைக் காப்பாற்றிய இந்திய கேப்டனை இஸ்ரேலுக்கு அழைத்த நெதன்யாகு!

ஃப்ளைதுபாய் (Flydubai) விமானத்தில் ஏற்பட்ட திடீர் தாக்குதலில் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை, அடுத்த ஆண்டு நடைபெறும் இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்க அந்த நாட்டுப் ப... மேலும் பார்க்க

தூத்துக்குடி: வல்லநாடு ஆற்றுப் பாலத்தில் 21வது முறையாக விழுந்த ஓட்டை; சீரமைப்பு பணிகளில் மெத்தனம்!

நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு கடந்த 20.11.2012 அன்று போக்குவரத்து தொடங்கியது. வல்லநாடு தாமிரபரணி ஆற்றங்கரையின் குறுக்கே 400 மீட்டர் தொலைவில் ப... மேலும் பார்க்க