செய்திகள் :

``ஸ்டாலின் பேசியதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை" - எம்.பி கார்த்தி சிதம்பரம்

post image

சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், ``தமிழக முதல்வர் விஜய் திடீரென பிரசாரத்தின் போது டிராக்டர் ஓட்டுவது, பொதுமக்களுடன் அமர்ந்து தேநீர் அருந்துவது மற்றும் வயல்வெளிகளில் இறங்கிப் பேசுவது என ஒரு பிரசாரத்திற்கு என்ன தேவையோ அதை நன்கு அறிந்து செயல்படுகின்ற ஒரு நல்ல பழுத்த, மூத்த அரசியல்வாதியாக செயல்படுகிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

நான் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதையும் ஏற்க முடியாது. அதேவேளையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இந்தியில் பெயர் பலகைகள் வைப்பதில் தவறில்லை. ஆங்கிலம் மற்றும் தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்கள் எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைப் பார்த்து அதற்கு ஏற்ப வசதி செய்து கொடுக்கலாம். உதாரணமாக, வாரணாசி காசி கோயிலுக்குத் தமிழகத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் செல்வதால், அவர்களின் வசதிக்காக அங்கு தமிழில் பெயர் பலகை வைத்துள்ளார்கள். எனவே, இதைச் சர்ச்சையாக்காமல் ஒரு வசதியாகப் பார்க்க வேண்டும்.

தமிழக அரசியல் மேடைகளிலும் சட்டமன்றத்திலும் நக்கல், நையாண்டிகள் நடப்பது இயல்பான ஒன்றுதான். இருப்பினும், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உருவக் கேலி செய்வதைத் தவிர்த்திருக்கலாம். அதேநேரத்தில், அதை ஒரு பெரிய சர்ச்சையாக்க வேண்டிய அவசியமும் இல்லை" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"எங்கள் மீது வழக்குகளைத் தொடருங்கள், அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்"- சிஜேபி நிறுவனர் அபிஜித்

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பிலான சர்ச்சை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காள... மேலும் பார்க்க

``தோல்வி பயத்தின் காரணமாகவே வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கின்றனர்" - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

சுதந்திர போராட்டத் தியாகி கொடிகாத்த குமரன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருடன் களம் கண்ட சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சத்தியமூர்த்... மேலும் பார்க்க

ஊட்டி: "பஸ் ஃப்ரீ-தான் ஆனா; பஸ் ஸ்டாண்டு டாய்லெட்டுக்கு 10 ரூபாய்" - குமுறும் பெண்கள்

சுற்றுலா மையமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவில் பொதுக்கழிப்பறைகள் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. ஊட்டி, குன்னூர் போன்ற நகரங்களில் நகராட்சி மற்றும் போக்குவரத்துக் கழகம் மூல... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை வழங்குவதாக மாணவர்களிடம் சைபர் மோசடி - வேலூரில் இவ்வளவு புகார்களா?

வேலூர் மாவட்டத்தில், பள்ளி - கல்லூரி மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோர்களைக் குறி வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபா்கள் செல்போன் மூலம் தொடா்பு கொண்டு ``அரசு சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது... மேலும் பார்க்க

மின் கசிவுக்கு 2 குழந்தைகள் பலி: ``6 மாதத்துக்கு முன்பே புகார் அளித்தும்..." - சீமான் காட்டம்

அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்–லதா தம்பதியின் 10 வயது மகள் நிறைமதி மற்றும் 6 வயது மகன் பால பிரவீன், செப்டம்பர் 30-ம் தேதி காலை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மி... மேலும் பார்க்க

`தெருக்கோடியில் இருக்கிறது கட்சி!’ - அதிமுகவில் அடுத்த விக்கெட்; தவெகவுக்குத் தாவிய முன்னாள் எம்எல்ஏ

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011, 2016 தேர்தல்களில் அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக இருந்த முருகுமாறன், அக்கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தவர்... மேலும் பார்க்க