செய்திகள் :

`தெருக்கோடியில் இருக்கிறது கட்சி!’ - அதிமுகவில் அடுத்த விக்கெட்; தவெகவுக்குத் தாவிய முன்னாள் எம்எல்ஏ

post image

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011, 2016 தேர்தல்களில் அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக இருந்த முருகுமாறன், அக்கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தவர். அந்த இரண்டு தேர்தல்களிலும் வி.சி.க.வின் தலைவர் திருமாவளவன், மற்றும் ரவிக்குமாரை தோற்கடித்து வெற்றிபெற்ற முருகுமாறன், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி அ.தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பியிருக்கும் கடிதத்தில், `அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவலியோடு என்னை முழுமையாக விடுவித்துக் கொள்கின்றேன்.

எடப்பாடி பழனிசாமி

ஒரு நல்ல தலைவர் என்பவர், தான் தலைமையேற்றுள்ள இயக்கத்தின் அனைத்துத் தொண்டர்களையும் தாயன்பு கொண்டு அரவணைக்க வேண்டும். தலைவருக்கு துன்பம் என்றால் தொண்டர்கள் கண்ணீர் சிந்த வேண்டும். தொண்டர்களுக்கு துன்பம், துயரம் என்றால் தலைவரின் கரங்கள் கண்ணீர் துடைக்க வேண்டும்.

அப்படிப்பட்ட உன்னத தலைவர்கள்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதாவும். ஆனால் அவர்கள் கட்டிக்காத்த கழகம், இன்று தடம் மாறி இடம் மாறிச் செல்கிறது. வேட்பாளர் தேர்வில் முன்பெல்லாம், `கழகத்திற்காக என்ன செய்தீர்கள்? எத்தனை முறை சிறை சென்றீர்கள்? உங்கள் வெற்றி வாய்ப்பு பற்றி சொல்லுங்கள்….' என்று கேள்வி கேட்ட தலைவர்கள் பயணித்த கழகம் அ.தி.மு.க.

ஆனால் இன்று, `உங்களிடம் எத்தனை கோடிகள் இருக்கிறது? எங்களுக்கு இத்தனை கோடிகள் வேண்டும் என்று கேட்கும்' நிலைமைக்குச் சென்று விட்டது கழகம். கொள்கை வழி நடந்த தலைவர்கள் கட்டிக்காத்த கழகம் இன்று கொள்கையை இழந்து கோடிகளில் தவழ்கின்றது.

கோடிகள் இருந்தால் யார் வேண்டுமானாலும் வேட்பாளர்கள் ஆகலாம், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளாக ஆகலாம் என்ற நிலையில்தான் இன்று அ.தி.மு.க இருக்கிறது. கட்சிக்கு உண்மையாக உழைத்தவர்கள் துரோகத்தால் வீழ்த்தப்படுகிறார்கள். எளியவர்களை, வறியவர்களை வேட்பாளர்களாக்கி, இந்தியாவில் மூன்றாவது பேரியக்கமாக கழகத்தை உருவாக்கி நம்மிடம் ஒப்படைத்தார் புரட்சித் தலைவி அம்மா.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா

ஆனால் இன்று கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்களை மட்டும் வேட்பாளர்களாக தேர்வு செய்ததால், தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக கடைக் கோடியில் இருக்கிறது கழகம். உழைத்தவர்களை விட்டுவிட்டு கிடைத்தவர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்தால் களத்தில் வெற்றி பெறமுடியாது. இனி நம் கழகத்தில் கோடிகள் இல்லாத, கொள்கை உரம் கொண்ட ஏழை எளியவர்கள், உண்மையாக உழைப்பவர்கள் அரசியல் அதிகாரம் பெற முடியாது.

கொள்கை நிலை தடுமாறி, தி.மு.கவுடன் உறவு கொண்டு ஆட்சி அமைக்கச் சென்றது நம் தலைமை. அதனால் வேண்டாத பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்தது. இராணுவ கட்டுப்பாடான நமது இயக்கம், தலைமையின் தவறான வழிகாட்டுதலால் இரண்டாகப் பிரிந்து சட்டமன்றத்தில் வாக்களித்த துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

எனவே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் பொற்கால ஆட்சியை இனி நம்மால் எப்படி அமைக்க முடியும்? துரோகம் எப்போதும் வெற்றி பெறாது. அதிலும் பச்சைத் துரோகம் ஒருபோதும் வெற்றி பெறாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் என்னிடம் இரவு பகலாக வேலைகளை வாங்கிக் கொண்டு, 2026 தேர்தலில் 100% வெற்றிபெற்றிருக்க வேண்டிய என்னுடைய சொந்தத் தொகுதியான காட்டுமன்னார்கோயில் தொகுதியை, எனக்கு ஒதுக்காமல் தலைமை செய்த துரோகத்தை என் நெஞ்சம் மறக்க மறுக்கிறது.

மாற்றுக் கட்சிகள் என்னை அழைத்தபோதும், அவற்றை மறுத்து கழகத்தில் உறுதியாக நின்றேன். ஆனால் தலைமை என் உழைப்பை உதாசீனப்படுத்தியது. மாற்றான் தாய் மனப்பான்மையோடு வேட்பாளர்களை நடத்தியதுடன், வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பாகுபாட்டுடன், நிதிப் பங்களிப்பு செய்தது.

அப்படி இருக்கும்போது எதை நம்பி உங்களுடன் பயணிப்பது? மாண்புமிகு அம்மா அவர்கள் மறைவிற்குப் பிறகு, மாற்று கட்சியில் இருந்து கோடிகள் என்னைப் பலமுறை பலமுறை முத்தமிட்டது. ஆனால் அவற்றைப் புறந்தள்ளி கொள்கை வழி நின்று கழகத்தின் மாண்பை காத்த உண்மைத் தொண்டன் நான். மதியாதார் வாசல் மிதியாதே என்ற முதுமொழியை நெஞ்சில் நிறுத்துகின்றேன்.

மாணவப் பருவம் முதல் நகமும் சதையுமாக, உடலும் உயிருமாக பயணித்துப் பணியாற்றிய இப்பேரியக்கத்தில் இருந்து விலக வேண்டிய சூழலை தலைமை எனக்கு ஏற்படுத்தியதை எண்ணி மனம் வலிக்கிறது. அ.தி.மு.க என்னை வளர்த்த கட்சி. நான் வளர்த்த கட்சி என்ற நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்து நிற்கும். ஒரு பேரியக்கத்தின் தலைவர் எப்பொழுதும் தவறான முடிவின் பின்னே செல்கின்றார்' என்று குறிப்பிட்டிருக்கிறார். அதேவேகத்தில் த.வெ.க-வின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைத்துக் கொண்டார் முருகுமாறன்.

கல்வி உதவித்தொகை வழங்குவதாக மாணவர்களிடம் சைபர் மோசடி - வேலூரில் இவ்வளவு புகார்களா?

வேலூர் மாவட்டத்தில், பள்ளி - கல்லூரி மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோர்களைக் குறி வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபா்கள் செல்போன் மூலம் தொடா்பு கொண்டு ``அரசு சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது... மேலும் பார்க்க

மின் கசிவுக்கு 2 குழந்தைகள் பலி: ``6 மாதத்துக்கு முன்பே புகார் அளித்தும்..." - சீமான் காட்டம்

அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்–லதா தம்பதியின் 10 வயது மகள் நிறைமதி மற்றும் 6 வயது மகன் பால பிரவீன், செப்டம்பர் 30-ம் தேதி காலை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மி... மேலும் பார்க்க

`நீங்க கண்டிப்பா வரணும்..!' - உயிர்களைக் காப்பாற்றிய இந்திய கேப்டனை இஸ்ரேலுக்கு அழைத்த நெதன்யாகு!

ஃப்ளைதுபாய் (Flydubai) விமானத்தில் ஏற்பட்ட திடீர் தாக்குதலில் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை, அடுத்த ஆண்டு நடைபெறும் இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்க அந்த நாட்டுப் ப... மேலும் பார்க்க

தூத்துக்குடி: வல்லநாடு ஆற்றுப் பாலத்தில் 21வது முறையாக விழுந்த ஓட்டை; சீரமைப்பு பணிகளில் மெத்தனம்!

நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு கடந்த 20.11.2012 அன்று போக்குவரத்து தொடங்கியது. வல்லநாடு தாமிரபரணி ஆற்றங்கரையின் குறுக்கே 400 மீட்டர் தொலைவில் ப... மேலும் பார்க்க

"தோத்தாங்குளி கட்சிகள்தான் தங்கள் தோல்விக்கு SIR-ஐ காரணம் சொல்கின்றன" - நடிகை கஸ்தூரி கிண்டல்

இடைத்தேர்தல் பிரசாரம் உச்சம் எட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசியல் சூழல்கள் குறித்தான கேள்விகளை பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை கஸ்தூரி முன்வைத்தோம்..."விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி எப்படியிருக்கிறது?... மேலும் பார்க்க

"கூட்டணி அந்தந்த அரசியல் சூழ்நிலைக்கு தக்கவாறு மாறுபடும்"- எடப்பாடி பழனிசாமி கூறியதென்ன?

மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கனிதா சம்பத்தை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (அக்.3) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய ... மேலும் பார்க்க