செய்திகள் :

ஜந்தர் மந்தர்: பெண் செய்தியாளர்களுக்கு பாலியல் தொல்லை? டெல்லி காவல்துறைக்கு வலுக்கும் கண்டனம்

post image

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது, பெண் செய்தியாளர்கள் மூவருக்குக் காவல்துறையினர் பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட செய்தியாளர்களில் ஒருவர் கூறுகையில், ``தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அப்போது, காவல்துறையினரின் நடவடிக்கையைப் படம் பிடித்துக்கொண்டிருந்தேன். அப்போது உதவி ஆணையர் (ஏசிபி) அந்தஸ்தில் உள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் எனக்கு பாலியல் தொல்லை அளித்தார்.

ஞானேஷ் குமார்

அந்த அதிகாரி தவறான முறையில் நடந்து கொண்டார். என்னிடமிருந்து எதிர்ப்பு எழுந்தபோது என்னைத் தள்ளிவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உடனடியாகக் காவல் நிலையம் சென்றோம். ஆனால் எங்கள் புகாரைப் பதிவு செய்யக் காவல்துறை தாமதித்தது." என்றார்.

இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த காவல்துறை, ``செய்தியாளரின் புகாரை பெறப்பட்டது. அனைத்தும் நியாயமான விசாரணைக்காகக் கிரைம் பிராஞ்ச் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இதனிடையே, பெண் செய்தியாளர்களுக்கு நேர்ந்த இந்த அநீதிக்கு இந்தியப் பத்திரிகை கவுன்சில் (பிசிஐ), ``ஜனநாயக நாட்டில் இத்தகைய நடத்தையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் தலைநகரின் மையப்பகுதியிலேயே பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது, இந்தியாவில் ஊடக சுதந்திரத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

செய்தியாளர்கள் எவ்வித பயமுமின்றி சுதந்திரமாகப் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளரின் புகார் மீது டெல்லி காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கடும் கண்டனத்தையும் அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இச்சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், ``டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுவதால், இதற்கு அமித் ஷா பதிலளிக்க வேண்டும். ஜந்தர் மந்தரில் பெண் செய்தியாளரிடம் காவல் அதிகாரி முறைகேடாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்ய வலியுறுத்தி நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் மணி கணக்கில் போராடி வருகின்றனர். புகாரைப் பதிவு செய்வது காவல்துறையின் அடிப்படை கடமை இல்லையா? அதைக்கூட அவர்கள் செய்யவில்லை

சனிக்கிழமை ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். செய்தியாளர்களின் கேமராக்கள் பறிக்கப்பட்டு, அவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தலைநகரில் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினரே பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகப் பதிலளிக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் எம்.பி பிரியாங்கா காந்தி, ``ஜந்தர் மந்தரில் செய்திகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். பல பத்திரிகையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தும், இது தொடர்பாக எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்படவில்லை.

பிரியாங்கா காந்தி
பிரியாங்கா காந்தி

உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களும், காவல்துறையினர் தங்களிடம் மிகவும் கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டுகின்றனர். பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினரே பெண்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றனர்.

கல்லூரி மாணவிகள் முதல் பத்திரிகையாளர்கள் வரை, பெண்கள் எல்லா இடங்களிலும் பாதுகாப்பற்ற சூழலையே எதிர்கொள்கின்றனர். மோடி அவர்களே, அமித் ஷா அவர்களே, பெண்களை நடத்துவதற்கு இதுதான் சரியான முறையா? இல்லையென்றால், ஏன் இது குறித்து நீங்கள் கவனம் செலுத்தவில்லை?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

”என் குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் தரவில்லை” - போதையில் செவிலியர், உறவினர்களை தாக்கிய தந்தை!

கும்பகோணம், பட்டீஸ்வரம் அருகே உள்ள முழையூர், பகுதியை சேர்ந்த தம்பதி மதன்(28)– வனிதா. இவர்களுக்கு, கடந்த 16ம் தேதி, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார ... மேலும் பார்க்க

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவல் அதிகாரி?

டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளர்களை தொடக்கூடாத இடத்தில் தொட்டு போலீஸார் பாலியல் அத்துமீறலில்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு பகிரப்பட்ட கடற்படை தகவல்கள்; கோவையில் சிக்கிய மாலுமி! - பின்னணி என்ன ?

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி என்பவர், இந்தியக் கடற்படையில் விசாகப்பட்டினத்தைத் தளமாகக் கொண்ட கிழக்கு கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றி வருகின்றார். இவர் கோவை ரெட் பில்ட்ஸ் பகுதியி... மேலும் பார்க்க

”வேலியே பயிரை மேய்ந்ததா..?”- திருட்டு நகை பறிமுதல் விவகாரத்தில் 4 போலீஸார் ஆயுதப்படைக்கு மாற்றம்!

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தநாடு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை கண்காணித்து, குற்றவாளிகளை விரைவாக கைது செய்வதற்காக, திருவோணம் போலீஸ் எஸ்.ஐ குமரவேல் தலைமையில் ஏட்டு தர... மேலும் பார்க்க

Flydubai: 'கத்தியால் அல்ல' - இந்திய விமானி எப்படித் தாக்கப்பட்டார்? UAE சொல்வது என்ன?

ஃபிளைதுபாய் சம்பவத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஓமனைச் சேர்ந்த விமானியான ஹமாம் அல்ஹமாமி கத்தியால் குத்தினார் என்று முன்பு கூறப்பட்டது. விமானத்திற்குள் அதுவும் காக்பிட்டிற்குள் எப்படிக் கத்தி அனும... மேலும் பார்க்க

கடனை அடைக்க நண்பர்களுடன் சேர்ந்து கடத்தல் நாடகம்! - தந்தையிடம் ரூ.90 லட்சம் பறிக்க முயன்ற மகன்

பெங்களூருவை சேர்ந்தவர் மணீஷ். சில நிதி பரிவர்த்தனைகளுக்காக கடக் செல்வதாக கூறி விட்டு மணீஷ் பெங்களூரில் உள்ள தனது வீட்டை விட்டு இரவு 11.40 மணிக்கு வெளியேறினார். மேலும் காலையில் மீண்டும் அழைப்பதாக தனது ... மேலும் பார்க்க