செய்திகள் :

'எஸ்ஐஆர் பாஜக-விற்கு சாதகமானது என்றால், தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது?' - வானதி சீனிவாசன் கேள்வி

post image

கோவை கணபதி பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க ஆந்திர மாநில பொறுப்பாளரும், முன்னாள் தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நாங்கள் தூய சக்தி, தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரப் போகிறோம் என்று சொன்னவர்கள், அ.தி.மு.க வில் இருந்து ஜெயித்த எம்.எல்.ஏ க்களை வாங்கி, அவர்களையே வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். இதனால் மக்களின் கோடிக்கணக்கான பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடைத் தேர்தல்கள் புதிதாக ஆட்சி அமைத்து இருக்கக் கூடிய கட்சியால் நடந்து கொண்டு உள்ளது.

நான் எந்த தொகுதிக்கும் போகாமல் ஜெயித்தேன். நான் பிரபலமான மக்கள் தலைவன், மக்களுக்கு என் மீது அவ்வளவு மரியாதை இருக்கிறது என்று, சொல்லக்கூடிய மாநிலத்தின் முதல்வர் விஜய் இன்று ஒவ்வொரு கிராமத்தையும் விடாமல் செல்கின்ற மாதிரி ரோடு ஷோ செய்கிறார். இத்தனை முறை ஒவ்வொரு ஊராக ரோடு ஷோ சென்றுதான் ஜெயிக்க முடியும் என்கிற நிலைமைக்கு வந்து இருக்கிறீர்கள் என்று சொன்னால், உங்களுடைய ஆட்சியினுடைய தரம் மக்களுக்கு நன்றாக தெரிகிறது என்று தான் அர்த்தம். மின்வெட்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மின்வெட்டு இல்லாத மாவட்டங்களை கிடையாது. சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இண்டி கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைந்து எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக ஆதரவு கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள், இதுபோன்ற கோமாளித்தனமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. எஸ்.ஐ.ஆர் மோசமாக உள்ளது. தப்பாக இருந்தது சொன்னால் த.வெ.க ஆட்சிக்கு எப்படி வந்தது? எஸ்.ஐ.ஆர் பி.ஜே.பி-க்கு சாதகமாக திட்டமிட்டு நடத்தியது என்று சொன்னால், அவர்கள் எப்படி ஆட்சிக்கு வந்தார்கள்? இதனால் நாங்கள் பிரயோஜனம் அடைந்திருக்கிறோம் என்று சொன்னால், எஸ்.ஐ.ஆர்-க்கு பின்பு வந்த அனைத்து தேர்தல்களிலும் பி.ஜே.பி தான் ஜெயித்து இருக்க வேண்டும். கேரளாவில் காங்கிரஸ் எப்படி ஜெயித்தது ? த.வெ.க எப்படி தமிழகத்தில் ஜெயித்தது? இதெல்லாம் மக்களை முட்டாள் ஆக்குவதற்கும், பி.ஜே.பி மீது குறை கூறுவதற்கும் நடத்துகின்ற நாடகம். எஸ்.ஐ.ஆருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் த.வெ.க, காங்கிரஸ் எந்தெந்த வாக்காளர்கள் விடுபட்டு உள்ளார்கள் என்ற லிஸ்ட்டை கொடுங்கள்.

த.வெ.க அரசு அமைந்ததில் இருந்து கிறிஸ்தவ அதிகாரிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கிறிஸ்தவ நபர்கள் தான் மிகவும் செல்வாக்கு உள்ள நபர்களாக அங்கு வளர்க்கப்படுகின்றனர். அதற்கு என்ன பதில்? மதவாத சக்தி என்றால் அவர்களுக்கு வராதா ? செக்யூலிசம்,   செக்யூலிசத்தை எல்லா பக்கமும் காட்டுங்கள். மதவாத சக்தி என்று பாரதிய ஜனதாவை குற்றம் சாட்டும் ஆதவ் அர்ஜுனாவிற்கு, கிறிஸ்தவ அதிகாரிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா? இந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதை தி.மு.க தலைவர்கள் தொடர்ச்சியாக செய்து கொண்டு இருக்கின்றனர். யாராக இருந்தாலும், நாகரிகத்தோடு, அரசியல் நாகரீகத்தோடு தங்களது விமர்சனத்தை வைக்க வேண்டும். பெரும் போராட்டத்திற்கு பிறகு அரசியலுக்கு வரும் பெண்களை மூத்த தலைவர் உருவ கேலி செய்யக் கூடாது. இது கண்டிக்கப்பட வேண்டியது” என்றார்.

“இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது தான் வழக்கம்..!” – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

திண்டுக்கல்லில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, “ சாதாரணமாகவே தேர்தல் வரலாற்றில், ஆளுங்கட்சியாக இருக்கிறவர்களுக்கு வ... மேலும் பார்க்க

தற்கொலைக் குறிப்பில் பெயர்; `CEC ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை'- கேரள அரசு உத்தரவு!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார்.தற்போதைய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 2006-ம் ஆண்டு கேரள பொதுப்பணித்... மேலும் பார்க்க

"எங்கள் மீது வழக்குகளைத் தொடருங்கள், அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்"- சிஜேபி நிறுவனர் அபிஜித்

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பிலான சர்ச்சை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காள... மேலும் பார்க்க

``தோல்வி பயத்தின் காரணமாகவே வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கின்றனர்" - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

சுதந்திர போராட்டத் தியாகி கொடிகாத்த குமரன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருடன் களம் கண்ட சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சத்தியமூர்த்... மேலும் பார்க்க

``ஸ்டாலின் பேசியதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை" - எம்.பி கார்த்தி சிதம்பரம்

சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், ``தமிழக முதல்வர் வி... மேலும் பார்க்க

ஊட்டி: "பஸ் ஃப்ரீ-தான் ஆனா; பஸ் ஸ்டாண்டு டாய்லெட்டுக்கு 10 ரூபாய்" - குமுறும் பெண்கள்

சுற்றுலா மையமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவில் பொதுக்கழிப்பறைகள் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. ஊட்டி, குன்னூர் போன்ற நகரங்களில் நகராட்சி மற்றும் போக்குவரத்துக் கழகம் மூல... மேலும் பார்க்க