செய்திகள் :

“இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது தான் வழக்கம்..!” – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

post image

திண்டுக்கல்லில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, “ சாதாரணமாகவே தேர்தல் வரலாற்றில், ஆளுங்கட்சியாக இருக்கிறவர்களுக்கு வாக்களிப்பதன் மூலமாகத்தான் நம்முடைய தொகுதி நன்மை பெறும் என்கின்ற அந்த அடிப்படையில் தான் இதுவரைக்கும் வெற்றி வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.

ஏனென்றால் ஆளுங்கட்சியிலே ஒரு கட்சி இருக்கிற போது, வேறு கட்சிக்கு வாக்களிக்காமல் ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால், அது நமக்கு தொகுதிக்கு பயன்படும் என்று மக்கள் ஒருவேளை சிந்திக்கக்கூடிய நிலைமை தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து இருந்து வருவதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.

பேரவைத் தலைவர் என்கின்ற முறையில், வினாக்கள் விடைகள் நேரம் என்பதற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் கேள்விகளுக்கு விடையளிப்பதற்காக அந்தந்த துறைகளுக்கு அந்த கேள்விகளை அனுப்பி வைத்து பதில் பெறுவது வழக்கம். அது அவையிலும் அளிக்கலாம்.  அடுத்த கட்டமாக கொஞ்சம் காலதாமதமானால் அந்த விடைகளை எந்த உறுப்பினர் கேட்டாரோ, அந்த உறுப்பினருக்கும் பதில் அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. 

இந்த முறை புதிதாக மென்ஷன் செய்யுங்கள் என்று, அதாவது பதிவு செய்யுங்கள், நிறைய உறுப்பினர்கள் பேச வைக்க வேண்டும் என்று விரும்பினேன். பல தொகுதியிலிருந்து வருகின்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அந்த வாய்ப்பு முன்னாலே மறுக்கப்பட்டது என்ற செய்தி எனக்கு அவையிலேயே தெரிவிக்கப்பட்டது.

சட்டமன்றம்
சட்டமன்றம்

நிறைய பேருக்கு வாய்ப்பளிக்கிற போது, புதிதாக பேச விரும்புகின்றவர்கள் தங்கள் தொகுதிகளைப் பற்றிய கேள்விகளை யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென்று எழுப்புகிறார்கள். அப்படி கேள்வி எழுப்புகிற போது அமைச்சர் பெருமக்களுக்கு உடனடியாக அந்த துறையை சார்ந்த அதிகாரிகளை அவையிலிருந்தே தொடர்பு கொண்டு, உடனடியாக பதில் பெறுவதிலே சில சிரமங்கள் இருந்தது. 

​ஆனாலும் பல அமைச்சர்கள் அந்தந்த கேள்விகளுக்கு உடனடியாக அவை முடிவதற்கு முன்பாகவே பதிலை பெற்று, அவையிலேயே சொன்னதையெல்லாம் நீங்கள் விரிவான அறிக்கையின் மூலமாகவும், கேள்விக்கு பதிலளிப்பதன் மூலமும் பல அமைச்சர்கள் பதில் சொன்னதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

மீதி பதிவு என்கின்ற முறையில் எல்லா உறுப்பினர்களுக்கும் சமமாக வாய்ப்பளிக்கப்பட்டு, குறிப்பாக எதிர்க்கட்சியை சார்ந்த உறுப்பினர்களுக்கு மிக அதிகமான நேரத்தை ஒதுக்கி பதிவு செய்ய, மென்ஷன் செய்யுங்கள் என்று சொல்லி ஒரு புதிய அணுகுமுறை, இதுவரை சட்டசபை வரலாற்றில் இல்லாத ஒரு புதிய நிலையை நாம் உருவாக்கினோம், அனைவருடைய ஒத்துழைப்போடு.​ அந்த வகையில் பதிவு செய்தவர்களுக்குரிய பதில் உடனே பெற முடியவில்லை.

ஆனால் அதற்குரிய பதிலை அந்தந்த துறையை சார்ந்த அமைச்சர் பெருமக்கள் யார் அவையிலே பதிவு செய்தார்களோ, மென்ஷன் செய்தார்களோ அவர்களுக்கு அந்த பதிலை அனுப்பி வைக்கிற அந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சட்டமன்றம்

எனவே இந்த 15% ,20% என்பது அல்ல, அனைத்து உறுப்பினர்களுடைய கேள்விகளுக்கும் பதில் அளிக்கின்ற நிலையில் தான் அரசு இருக்கிறது என்பதை தொடர்ந்து அவர்கள் துறையின் சார்பாக பதில் எழுதுகிற போது அனைவருக்கும் அது தெரியவரும்.

எந்த கட்சியும் நான் ஒரு சார்பாக நடந்து கொள்கிறேன் என குற்றச்சாட்டு வைத்ததாக எனக்கு தெரியவில்லை.  அப்படி செய்கிற நிலைமை சட்டமன்றத்தில் இல்லை என்பதை நான் தெரிவிக்கிறேன். மிகச் சிறந்த ஜனநாயக முறையில் தான் இந்த முதல் கூட்டத்தொடர் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. அப்படிப்பட்ட குறைகள் அவையிலும் தெரிவிக்கப்படவில்லை, வெளியிலும் தெரிவிக்கப்படவில்லை.

என்னை பாராட்டியதாகத்தான் செய்திகள் வந்திருக்கிறது. அதுதான் என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அப்படி எதுவும் குறை இருந்து அதை குறிப்பிட்டு சொன்னால் அதை திருத்திக் கொள்வதற்கும் வாய்ப்பளிப்பதற்கும் வசதியாக இருக்கும்.

எந்த துண்டும் வரவில்லை, எந்த சீட்டும் வரவில்லை. எந்த துண்டுக்கும் சீட்டுக்கும் அடிபணிபவன் நான் அல்ல. விதிக்கு மட்டும்தான் நான் அடிபணிவேன். உறுப்பினர்களுடைய குரலுக்கு மட்டும்தான் நான் செவிமடுப்பேன். 

​துண்டுச் சீட்டு என்பது உதாரணத்திற்கு மிசா வழக்கு பற்றி முதலமைச்சர் நிறைய பேசினார். அது பற்றிய குறிப்புகள் ஏற்கனவே இந்த அவையிலே கூறப்பட்டிருந்தது. அப்படி கூறப்பட்டிருந்தால், பேசப்பட்டிருந்தால், குறிப்புகள் இருந்தால் அவையெல்லாம் எடுத்து எனக்கு தர வேண்டும் என்று முதலமைச்சர் பேசி முடித்தவுடனே நான் சொல்லி அனுப்பினேன்.​ அந்த குறிப்புச் சீட்டுதான் கையில் வந்தது.

ஜே.சி.டி. பிரபாகர்
ஜே.சி.டி. பிரபாகர்

இந்தந்த ஆண்டுகளில் இதே அவையில் இதே மிசாவைப் பற்றி யார் எப்படி கைது செய்யப்பட்டார்கள், எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்று விவாதங்கள் எல்லாம் நடந்திருக்கிறது, அது இவ்வளவு மணி நேரம் நடந்திருக்கிறது என்ற குறிப்பு எனக்கு வந்தது. அந்த குறிப்புதான் கையிலே வந்ததே தவிர, யாரும் அவையிலே யார் பேச வேண்டும், பேசக்கூடாது என்பதற்கான உத்தரவை யாரும் எனக்கு பிறப்பிக்கவில்லை, பிறப்பிக்கவும் மாட்டார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக எம்எல்ஏ பதவி நீக்கம் பற்றி இப்போதும் தீர்ப்பு வந்திருக்கிறது, அடுத்த கட்டமாக மேல் முறையீட்டில் நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவணங்கும் நிலையில் தான் இந்த அவை இருக்கிறது.  சட்டமன்ற விதிகளுக்கு உட்பட்டு தான், எனது அதிகார வரம்பிற்கு உட்பட்டு தான் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தற்கொலைக் குறிப்பில் பெயர்; `CEC ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை'- கேரள அரசு உத்தரவு!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார்.தற்போதைய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 2006-ம் ஆண்டு கேரள பொதுப்பணித்... மேலும் பார்க்க

"எங்கள் மீது வழக்குகளைத் தொடருங்கள், அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்"- சிஜேபி நிறுவனர் அபிஜித்

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பிலான சர்ச்சை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காள... மேலும் பார்க்க

``தோல்வி பயத்தின் காரணமாகவே வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கின்றனர்" - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

சுதந்திர போராட்டத் தியாகி கொடிகாத்த குமரன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருடன் களம் கண்ட சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சத்தியமூர்த்... மேலும் பார்க்க

``ஸ்டாலின் பேசியதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை" - எம்.பி கார்த்தி சிதம்பரம்

சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், ``தமிழக முதல்வர் வி... மேலும் பார்க்க

ஊட்டி: "பஸ் ஃப்ரீ-தான் ஆனா; பஸ் ஸ்டாண்டு டாய்லெட்டுக்கு 10 ரூபாய்" - குமுறும் பெண்கள்

சுற்றுலா மையமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவில் பொதுக்கழிப்பறைகள் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. ஊட்டி, குன்னூர் போன்ற நகரங்களில் நகராட்சி மற்றும் போக்குவரத்துக் கழகம் மூல... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை வழங்குவதாக மாணவர்களிடம் சைபர் மோசடி - வேலூரில் இவ்வளவு புகார்களா?

வேலூர் மாவட்டத்தில், பள்ளி - கல்லூரி மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோர்களைக் குறி வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபா்கள் செல்போன் மூலம் தொடா்பு கொண்டு ``அரசு சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது... மேலும் பார்க்க