செய்திகள் :

'குண்டுக்கட்டாக கைது செய்யும் போலீஸ்;நடுத்தெருவில் அமர்ந்த செவிலியர்கள்!' -எக்மோரில் என்ன நடக்கிறது?

post image

தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் பொறுப்பில் இருக்கும் செவிலியர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராடி வந்தனர். மாலை நேரத்தை கடந்தும் போராட்டம் தொடந்ததால் போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்

சமவேலைக்கு சம ஊதியம் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேட்பட்ட செவிலியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று காலை முதல் போராடி வந்தனர். தங்களின் கோரிக்கைகளை அரசு மதித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரி வந்தனர். முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜூம் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை செவிலியர்களின் பிரதிநிதிகளை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த காவல்துறை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு கூட்டி செல்லாமல் காவல்துறை அவர்களை மண்டபத்தில் அடைத்து வைத்திருப்பதாக செவிலியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றவர்களை விடுவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என செவிலியர்கள் கூறவே, காவல்துறை போராட்ட இடத்தின் மின் இணைப்பை துண்டித்து பந்தல்களை அகற்றியது. தொடர்ந்து கலைந்து செல்லாவிடில் கைது செய்வோம் என்றும் எச்சரித்தனர்.

செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்

இதைத்தொடர்ந்து இரவு 8:30 மணியளவில் காவல்துறையினர் குண்டுக்கட்டாக செவிலியர்களை கைது செய்து பேருந்தில் அடைக்க தொடங்கினர். ஆயிரத்துக்கும் மேட்பட்ட செவிலியர்கள் இருந்ததால் கைது செய்ய வந்த பேருந்துகளை மறித்து மற்ற செவிலியர்கள் சாலையில் அமர்ந்துவிட்டனர். இதனால் போலீஸூக்கும் செவிலியர் குழுவுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல்துறையினரால் போராடிய செவிலியர்களை கட்டுப்படுத்த முடியாததால் கைது நடவடிக்கையை கைவிட்டனர். இப்போது செவிலியர்கள் அத்தனை பேரும் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வெளியே சாலையை மறித்து அமர்ந்திருக்கின்றனர்.

``முதல்வர் விஜய் சென்ற மாட்டுவண்டியை ஓட்டிச் சென்றவர் யார்?" - ஆர்.எஸ்.பாரதி கேள்வி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது தமிழ்நாடு காவல்துறை அவசர அவசரமாக வழக்குப் பதிவு செய்து வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்... மேலும் பார்க்க

தவெக: 'மெழுகுவர்த்தி சண்டை இல்ல; கௌரவச் சண்டை?' - சர்ச்சையான நவல்பட்டு விஜி; பின்னணி என்ன?

திருச்சியில் நடந்த அரசு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு முன்பாக எம்.பி கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கு ஏற்றியதால், தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி கோபமடைந்திருந்தார். அமைச்சர் ரமேஷ் அவரைச் சமா... மேலும் பார்க்க

மாணவி கண்முன்னே கொல்லப்பட்ட தந்தை: ``சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது CM Sir" - வானதி சீனிவாசன்

திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜா. சினிமா தியேட்டர் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரின் 17 வயது மகளை, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருதலையாகக் காதலித்து வற்புறுத்தியுள்ளார். காதலை ஏ... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: ``பணம் கொடுத்தோம் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?" - அமைச்சர் கீர்த்தனா கேள்வி

தமிழ்நாட்டின் இடைத்தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளான திமுக - அதிமுக தேர்தல் பிரசாரத்தில் தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகள் தவெக வாக்குக்கு பணம் க... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: `50 ஆண்டு போராட்டம்’ - கோயிலின் பூட்டை உடைத்து தலித் மக்களை வழிபட வைத்த பெண் எஸ்.பி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்துக்கு அருகிலிருக்கிறது குரால் கிராமம். அங்கு தனிநபர் ஒருவரின் நிலத்தில் பழமையான ஸ்ரீ கலியுக சீனுவாசப் பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. அந்தக் கோயிலுக்கு, தலித் மக்... மேலும் பார்க்க

பாமாயில் கொள்முதல் விவகாரம்: ``ரூ.600 கோடிக்கு மேல் ஊழல்" - உதயநிதி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பைக், கடந்த காலங்களைக் காட்டிலும் குறைவான விலையில் கொள்முதல் செய்து ரூ.187 கோடியை தவெக அரசு மிச்சம் பிடித்திருப்பதாக குடிமைப... மேலும் பார்க்க