செய்திகள் :

"துரோக அமைப்புடன் சேர்ந்து செயல்பட முடியாது; திமுக தனித்தே போராடும்" - யாரைச் சொல்கிறார் RS பாரதி?

post image

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்தும், பா.ஜ.க அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும் இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறிய திமுக, தனித்து செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ``தேர்தல் ஆணையரை எதிர்த்து டெல்லியில் இந்தியாக் கூட்டணியின் போராட்டம் நடைபெறுகிறது. தி.மு.க தனது நிலைப்பாட்டில் மிகவும் தெளிவாக உள்ளது.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

உச்ச நீதிமன்றத்தில் இதற்காக தி.மு.க தனியாகவே வழக்குகளைத் தொடர்ந்து வாதாடி வருகிறது. காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் சேர்ந்து தி.மு.க எந்த வேலையையும் செய்யாது என்பதில் உறுதியாக உள்ளது.

காங்கிரஸ் கட்சியை ஒரு துரோக அமைப்பாகக் கருதுவதால், அவர்களுடன் இணைந்து செயல்பட முடியாது. தவெக இந்திய கூட்டணியில் இணைந்ததால் திமுக தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது என்று மாணிக்கம் தாகூர் கூறியிருக்கிறார்.

நாளுக்கு நாள் மாறிப் பேசும் அவரது பேச்சுக்களுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. சமீபத்தில் முடிவடைந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவைப் பொறுத்தவரை, தி.மு.க கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'தமிழக எழுச்சிக் கழகம்!' - கட்சி தொடங்குகிறாரா தனுஷ்? - விவரம் என்ன?

நடிகர் தனுஷ் தமிழக எழுச்சிக் கழகம் என புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சில ஊடகங்களில் வெளியான இந்த செய்தி இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. தனுஷ்இது ச... மேலும் பார்க்க

பழனி மட நில மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது; சூடுபிடிக்கும் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரின் முக்கியப் பகுதியான பூங்கா சாலையில் அருள்மிகு தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் மற்றும் நிலங்கள் உள்ளன.இந்நிலையில்,... மேலும் பார்க்க

EVM குற்றச்சாட்டு: ``பிரகாஷ் ராஜ் திரையில் என்ன கேரக்டரோ... நிஜத்திலும் அப்படியே!" - நயினார் சாடல்!

நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் நேற்று செய்தியாளர் சந்திப்பில், 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர... மேலும் பார்க்க

'ஞானேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற தேர்தல்களை ரத்து செய்து, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்!'- சீமான்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்வதோடு, அவரது தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்து, நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி... மேலும் பார்க்க

'இதுதான் உண்மை; மாத்திரை உறை விவகாரத்தில் மலிவான அரசியல் செய்கிறது திமுக' - அமைச்சர் அருண்ராஜ்

கோவை மற்றும் கரூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரை உறைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுவது சா்ச்சையைய... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் 'இந்தி' சர்ச்சை; உடனடியாக மாற்றப்பட்ட கவர்; பின்னணி என்ன?

கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். கோவையில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்களும் அதிகளவில் சிகிச்ச... மேலும் பார்க்க