செய்திகள் :

ஜோக்ஸ்..! - 1

post image
ஜோக்ஸ்..!

“மன்னர் அப்டேட்டா சிந்திக்கிறாரா?”

“ஆமா. போரில் புறமுதுகிட்டு ஓடிவருவதை ‘ரோடு ஷோ’ன்னு அழைக்கும்படி உத்தரவு போட்டுட்டார்!”

- எஸ்.முகம்மது யூசுப்

“ஞாபகமறதிக்குத்தான் மருந்து குடுத்தேனே, மறுபடியும் ஏன் வந்து நிக்கிறீங்க?”

“ஒரு நாளைக்கு எத்தனை வேளை சாப்பிடணும்னு நீங்க சொன்னதை மறந்துட்டேன் டாக்டர்!”

- எம்.ஏ.ஆதம்

“தலைவரோட பேச்சுல எப்பவும் ரெண்டு விஷயத்துக்கு நடுவுலதான் போட்டியே!”

“அடடே... எந்த ரெண்டைச் சொல்ற?”

“ஒண்ணு உளறல்; இன்னொண்ணு உதறல்!”

- சு.அருண் பிரகாஷ்

“இடைத்தேர்தல்ல நின்னு என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க?”

“அரசியல்வாதிகளோட பட்டப்பெயரெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்!”


- கி.பாலமுருகன்

ஜோக்ஸ்..! - 2

“நம் கட்சி, வரலாற்றுல நிச்சயம் இடம்பெறும்னு சொல்றியேய்யா... எந்த வகையில?”“அவைக்குறிப்பிலிருந்தே அதிகம் நீக்கப்பட்டது நம் கட்சி எம்.எல்.ஏ-க்களோட பேச்சுகள்தான் என்கிற வகையிலதான் தலைவரே!”- சு.அருண் பிரகா... மேலும் பார்க்க

ஜோக்ஸ்..!

ஜோக்ஸ்..!“நம்ம தலைவருக்கு சந்தேகம் ஜாஸ்தின்னு எப்படிச் சொல்றே?”“எதுக்காக மக்கள் நம்மை ஜெயிக்க வெச்சாங்கன்னு தெரிஞ்சுக்க ரகசியமா குழு அமைச்சிருக்காராம்!”- என்.கே.பாலசுப்ரமணியன்ஜோக்ஸ்..!“சிஸ்டர் ஏதாச்சு... மேலும் பார்க்க

ஜோக்ஸ்..! - 1

ஜோக்ஸ்..!“என்னய்யா... நான் பேசலாம்னு இருந்த பாயின்ட்ஸையெல்லாம், எனக்கு முன்னாடி நம்ம கட்சிக்காரங்களே பேசிட்டாங்க?!““நீங்க பாயின்ட்ஸ் எடுத்த அதே ‘சாட்ஜிபிடி’லதான், அவங்களும் எடுத்திருக்காங்க தலைவரே!“- ... மேலும் பார்க்க

ஜோக்ஸ்..! - 2

ஜோக்ஸ்..!“கொஞ்ச நாளா தூக்கமே இல்லை!”“டாக்டரைப் பார்க்க வேண்டியதுதானே?”“பார்த்தேன்... ‘கரன்ட் பிரச்னைக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது’ன்னு சொல்லிட்டார்!”- சு.அருண் பிரகாஷ்ஜோக்ஸ்..!“டாக்டர் கொஞ்ச நாளா என... மேலும் பார்க்க