செய்திகள் :

ஊக்க மருந்து சர்ச்சை... ஆசிய போட்டியில் விளையாட தடை: 3 முறை தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் தற்கொலை!

post image

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் நீரஜ் யாதவ். மாற்றுத்திறனாளியான இவர் வட்டு மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில் கலந்து கொண்டு வந்தார். ஆசிய அளவில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் டெல்லியில் வசித்து வந்தார். இன்று துரதிஷ்டவசமாக தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 7 வயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட நீரஜ் 2018ம் ஆண்டு நடந்த ஜகார்த்தா ஆசிய பாரா விளையாட்டு மற்றும் 2022ம் ஆண்டு நடந்த ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். ஹாங்சோவில் நடந்த வட்டு எறிதலில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

அவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியை இந்திய பாரா தடகள பயிற்சியாளர் எஸ் சத்தியநாராயணா உறுதிப்படுத்தினார். நீரஜ் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இருப்பதாக சத்யநாராயணா கூறினார். மேலும் வீரர்கள் இது போன்ற முடிவுகளை எடுக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

ஊக்கமருந்து பயன்படுத்தியது தொடர்பான புகாரின் பேரில் இந்த மாதத் தொடக்கத்தில் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் நீரஜ் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனால் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதால், நீரஜ் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பாரா-தடகளப் போட்டிகளுக்கு மாறுவதற்கு முன்பு, அவர் 2005 முதல் 2012 வரை சக்கர நாற்காலி டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்.

2023ம் ஆண்டு அக்டோபரில், பெங்களூருவில் உள்ள எஸ்.ஏ.ஐ (SAI) மையத்தில், தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (NADA) சேகரித்த போட்டிக்கு அப்பாற்பட்ட மாதிரியில், நீரஜ் யாதவ் ஊக்க மருந்து பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இந்தியாவிற்கு ஆசிய பாரா விளையாட்டுப்போட்டியில் கிடைத்த இரண்டு தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது.

இருப்பினும், விசாரணை முழுவதும் நீரஜ் தான் குற்றமற்றவர் என்று வாதிட்டார். மாதிரியில் மாசு கலந்திருக்கலாம் அல்லது பரிசோதனைச் செயல்பாட்டில் குளறுபடி நடந்திருக்கலாம் என்று அவர் கூறினார். மேலும், அந்த மாதிரியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த டிஎன்ஏ (DNA) பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

`நகைக்கடைகள் மட்டுமல்ல, நடைபாதையும் தங்கம்தான்...' துபாயின் அடுத்த பிரமாண்ட திட்டம்!

சுற்றுலாப் பயணிகளைக் கவரப் புதிய திட்டம்; இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்க ஏற்பாடு!தங்க நகைகள், பிரமாண்டக் கட்டடங்கள் என உலகையே வியக்கவைக்கும் துபாய், இப்போது மற்றொரு வித்தியாசமான திட்டத்துடன் கவனம் ஈர... மேலும் பார்க்க

கர்நாடகா சட்டமேலவை தேர்தல்: 4 இடங்களையும் பா.ஜ.க கூட்டணியிடம் இழந்த காங்கிரஸ்!

கர்நாடகா, பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமேலவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்தது. இதில் கர்நாடகாவில் 4 இடங்களுக்கு இத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வ... மேலும் பார்க்க

15 ஆண்டுகளில் 38 கொலைகள்... அதிர வைக்கும் நரமாமிச குற்றச்சாட்டு - உகாண்டாவை உலுக்கிய இளைஞரின் கைது!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், 2010 முதல் 2025 வரை 38 பேரைக் கொன்று அவர்களின் உடல்களைச் சாப்பிட்டதாகக் குற்றம்சாட்டப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ராணுவத் தளபதி மூஹூசி கைனெருகாபா அக்டோப... மேலும் பார்க்க

Man Vs. Wild: ``வீகன் உணவுக்கு மாறியதால் பலவீனமடைந்தேன்" - சாகச வீரர் பியர் கிரில்ஸ்

பிரபல சாகச வீரரும், Man Vs Wild நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ்பெற்றவருமான பியர் கிரில்ஸ் (Bear Grylls) வீகன் உணவு மூலம்தான் பலவீனமடைந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ... மேலும் பார்க்க

`ஆமீர் தான் முதல் இலக்கு; அவரை நெருங்க முடியாததால் டைகரைக் குறிவைத்தோம்'- வெளியான அதிர்ச்சி தகவல்கள்

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கடந்த வாரம் மும்பை ஜுகு பகுதியில் 3 பேர் கொண்ட கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்த் தப்பினார். இத்தாக்குதல் தொடர்பாக இதுவரை துப்பாக்கிச்... மேலும் பார்க்க

கொலை மோசடி வழக்கிலிருந்து தப்பிக்க நூதன யோசனை; AI பயன்படுத்தி தனக்கு தானே இறுதிச்சடங்கு நடத்திய நபர்

கொலை வழக்கில் இருந்து தப்பிக்க சிலர் தலைமறைவாக வாழ்வர். சிலர் தங்களது அடையாளத்தை மாற்றிக்கொண்டு வேறு பெயர்களில் வாழ்வது வழக்கம். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கொலைக் குற்றவாளியும் அது போன்ற ஒரு வேலை... மேலும் பார்க்க