செய்திகள் :

'பனையூரில் ஆனந்த் நடத்திய நள்ளிரவு கூட்டம்!' - காரணம் தவெக உட்கட்சி பஞ்சாயத்துகள்?

post image

தவெகவின் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் பனையூரில் நேற்று நள்ளிரவில் நிர்வாகிகள் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார். அத்தனை அவசரமாக நள்ளிரவில் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறதென பனையூர் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம்.

CM Vijay
CM Vijay

கரூர், வேலூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை ஆனந்த் நேற்று நள்ளிரவில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக நம்மிடையே பேசிய பனையூர் வட்டாரத்தினர், 'அமைச்சர் நள்ளிரவில் திட்டமிட்டு கூட்டம் நடத்தவில்லை.

உட்கட்சி பஞ்சாயத்துகள் விஸ்வரூபமெடுத்திருக்கும் சில மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளை தலைமை சார்பில் நேரில் வருமாறு அழைத்திருந்தனர். அதன்படி 6 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பனையூருக்கு வந்திருந்தனர். அதேநேரத்தில் அமைச்சர் ஆனந்துக்கு நேற்று எக்கச்சக்கமான நிகழ்ச்சிகள் இருந்தது. ஈ.சி.ஆரில் எம்.எல்.ஏக்கள் பயிற்சிக் கூட்டத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. மதுராந்தகம் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவுக்கு செல்ல வேண்டியிருந்தது.

இதற்கிடையில் மதிய வேளையில் கொஞ்ச நேரம் பனையூர் அலுவலகத்துக்கு வந்து சில நிர்வாகிகளை சந்தித்தார். மீதமிருப்பவர்களை காத்திருக்க சொன்னார். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நள்ளிரவில் வந்து அவர்களை சந்தித்தார்.

புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த்

அதிகாலை 4 மணி வரை இந்த சந்திப்புகள் நீண்டது என்கிறார். எப்படியும் இன்னும் 6 மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் லோக்கல் உட்கட்சிப் பூசல்களை பேசி தீர்க்க தலைமை முடிவெடுத்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் மா.செக்களின் உள்ளடியால் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள், மாற்றுக்கட்சியினரின் வருகையால் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள் போன்றோரை அழைத்துப் பேசி சமாதானப்படுத்துகிறார்கள். அடுத்தடுத்த நாட்களில் மற்ற மாவட்ட நிர்வாகிகளை அழைத்துப் பேசவும் திட்டமிட்டிருக்கிறார்கள்' என்றனர்.

சென்னை இளைஞர் வெட்டிக்கொலை: "தவெக ஆட்சி இருக்கும்வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை"- ஸ்டாலின் கண்டனம்

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் மைத்ரேயன். இன்று காலை அடையாறு இந்திரா நகர் வாட்டர் டேங்க் அருகே மைத்ரேயனை வழிமறித்த கும்பல் ஒன்று ஆயுதங்களால் தாக்கி இருக்கிறது. மைத்ரேயனைக் கொலை செய்துவிட்டு 3 பேர் தப... மேலும் பார்க்க

ஈரான்: "போரும் இல்லாத, அமைதியும் இல்லாத நிலை.." - முடிவுக்கு கொண்டுவர மொஜ்தபாவுடன் அதிகாரிகள் ஆலோசனை

நவம்பர் 3 ஆம் தேதிக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு அறிவித்திருந்தார். ட்ரம்ப் சொன்ன தேதி நெருங்கிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் இரு நாடுகளுக்கு இடையே... மேலும் பார்க்க

"ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்புதான் காரணமா?" - தவெக அமைச்சருக்கு அன்புமணி கண்டனம்

திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடுதான் காரணம் என்று அமைச்சர் வி.கே. இராஜிவ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சரின் இ... மேலும் பார்க்க

பத்திரிக்கையாளர்களை புகைப்படம் எடுத்த விஐடி துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம்!

விஐடி துணைத் தலைவரும் வேலூர் சர்வதேசப் பள்ளி (VIS) சென்னையின் தலைவருமான முனைவர் ஜி.வி.செல்வத்துக்கு பிறந்த நாள் விழா 26.10.2026 அன்று வேலூரில் நடைபெற்றது. பிறந்த நாளினையொட்டி வேலூரில் மருத்துவ முகாம்க... மேலும் பார்க்க

JIO: தாத்தா திருபாய் பற்றிய பேசிய அனந்த் அம்பானி; கண்கலங்கிய முகேஷ் அம்பானி; வீடியோ வைரல்

பங்குசந்தையில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகள் இன்று காலை பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தலைமையில் அவரின் மகன் ஆகாஷ் அம்பானி, மகள் இஷா அம்பானி இதனைத் தொடங்கி வைத்திர... மேலும் பார்க்க

முதல்வர் விஜய் பற்றி சர்ச்சை கருத்து - தப்பிஓடிய வேலூர் திமுக கவுன்சிலர் விழுப்புரத்தில் சிக்கினார்!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று முன்தினம் அதிரடியாக கைது ச... மேலும் பார்க்க