செய்திகள் :

சென்னை இளைஞர் வெட்டிக்கொலை: "தவெக ஆட்சி இருக்கும்வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை"- ஸ்டாலின் கண்டனம்

post image

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் மைத்ரேயன். இன்று காலை அடையாறு இந்திரா நகர் வாட்டர் டேங்க் அருகே மைத்ரேயனை வழிமறித்த கும்பல் ஒன்று ஆயுதங்களால் தாக்கி இருக்கிறது.

மைத்ரேயனைக் கொலை செய்துவிட்டு 3 பேர் தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

crime
crime

தகவலறிந்து வந்த அடையாறு போலீசார், மைத்ரேயனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

கொலை செய்த 3 பேரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை!

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்குப் பயமில்லை.

த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்; அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் அட்மிஷன்- பெட்கள் அதிகரிக்கப்படுமா?

தமிழ்நாட்டில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தால் தாய்மார்கள் பலரும் தற்போது பிரசவத்துக்கு அரசு மருத்துவமனைக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.இதனால் அரசு மருத்துவமனைகளின் பிரசவ... மேலும் பார்க்க

வேலூர் திமுக மாவட்டச் செயலாளர், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் ரெய்டு; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

தி.மு.க வேலூர் தெற்கு மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமாரின் காட்பாடி வீட்டில் இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன... மேலும் பார்க்க

'முதலமைச்சர் வந்தா நைட்டு வரை காத்திருக்கணுமா?' - ஆவேசமான மேயர் பிரியா

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, 'முதல்வரின் கூட்டங்கள் குறித்து தனக்கு சொல்லப்படுவதே இல்லை' என ஆவேசமடைந்தார்... மேலும் பார்க்க

“பாசிசத்தில் பா.ஜ.க-வையே தவெக மிஞ்சுகிறது!” - முனைவர் கலையரசன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் காட்டம்!

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் பிரபல பொருளாதார நிபுணரும், 'The Dravidian Model' நூலின் ஆசிரியர்களில் ஒருவருமான கலையரசன், நேற்று அதிகாலை 5 மணியளவில் போலீசா... மேலும் பார்க்க

இஸ்ரேல் தேர்தல் இழுபறி: பெரும்பான்மை இல்லை! அரபுக் கட்சிகளின் ஆதரவை நிராகரிப்பது ஏன்? |Full Detail

இஸ்ரேலில் நேற்று முன்தினம் (அக்டோபர் 27) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஹமாஸ் தாக்குதல், ஈரான் போருக்குப் பின் நடக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இது.இஸ்ரேலின் தற்... மேலும் பார்க்க

'கோணல் மூஞ்சி முதல்வர்; தூங்கு மூஞ்சி அரசு!' - மாமன்றத்தில் கொந்தளித்த திமுக கவுன்சிலர்!

சென்னை ரிப்பன் பில்டிங்கில் இந்த மாதத்திற்கான மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் அதியமான் முதல்வர் விஜய்யை 'கோணல் மூஞ்சி' முதல்வர் என கடுமையாக விமர்சித்திருக... மேலும் பார்க்க