செய்திகள் :

ஈரான்: "போரும் இல்லாத, அமைதியும் இல்லாத நிலை.." - முடிவுக்கு கொண்டுவர மொஜ்தபாவுடன் அதிகாரிகள் ஆலோசனை

post image

நவம்பர் 3 ஆம் தேதிக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு அறிவித்திருந்தார். ட்ரம்ப் சொன்ன தேதி நெருங்கிவிட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் இரு நாடுகளுக்கு இடையேயும் பேச்சுவார்த்தை நடைபெறும்... சமாதான உடன்படிக்கை எட்டப்படும் என்று நினைத்தால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஈரான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது அமெரிக்கா. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று கூறுகிறது அது.

ஈரானோ தங்களுடைய நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றினால்தான் பேச்சுவார்த்தை... சமாதானம் எல்லாம் என்று சொல்லி வருகிறது.

ஈரான், அமெரிக்கா
ஈரான், அமெரிக்கா

இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 27), ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி, உச்சத் தேசியப் பாதுகாப்புக் கவுன்சிலின் செயலாளர் மேஜர் ஜெனரல் டாக்டர் மொஹ்சென் ரெசாயி சந்திப்பு நடந்துள்ளது.

இது தேசியப் பாதுகாப்பு தொடர்பான உயர் மன்றக் கூட்டம் ஆகும்.

ஈரானின் பாதுகாப்பு குறித்து...

ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான முழுமையான கட்டுப்பாட்டைத் தக்கவைப்பதன் மூலம் தேசிய மற்றும் பிராந்தியப் பாதுகாப்பை உறுதி செய்வது, நீடித்த பரஸ்பர நலன்களின் அடிப்படையில் அண்டை நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது எனப் பேசியுள்ளனர்.

ஈரான் போர் குறித்து...

போரை முடிவுக்குக் கொண்டுவர நாட்டின் அதிகாரிகள் விதித்துள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தற்போது நிலவும் ‘போரும் இல்லாத, அமைதியும் இல்லாத’ நிலையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று மொஜ்தபா வலியுறுத்தியுள்ளார்.

'பனையூரில் ஆனந்த் நடத்திய நள்ளிரவு கூட்டம்!' - காரணம் தவெக உட்கட்சி பஞ்சாயத்துகள்?

தவெகவின் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் பனையூரில் நேற்று நள்ளிரவில் நிர்வாகிகள் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார். அத்தனை அவசரமாக நள்ளிரவில் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கி... மேலும் பார்க்க

சென்னை இளைஞர் வெட்டிக்கொலை: "தவெக ஆட்சி இருக்கும்வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை"- ஸ்டாலின் கண்டனம்

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் மைத்ரேயன். இன்று காலை அடையாறு இந்திரா நகர் வாட்டர் டேங்க் அருகே மைத்ரேயனை வழிமறித்த கும்பல் ஒன்று ஆயுதங்களால் தாக்கி இருக்கிறது. மைத்ரேயனைக் கொலை செய்துவிட்டு 3 பேர் தப... மேலும் பார்க்க

"ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்புதான் காரணமா?" - தவெக அமைச்சருக்கு அன்புமணி கண்டனம்

திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடுதான் காரணம் என்று அமைச்சர் வி.கே. இராஜிவ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சரின் இ... மேலும் பார்க்க

பத்திரிக்கையாளர்களை புகைப்படம் எடுத்த விஐடி துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம்!

விஐடி துணைத் தலைவரும் வேலூர் சர்வதேசப் பள்ளி (VIS) சென்னையின் தலைவருமான முனைவர் ஜி.வி.செல்வத்துக்கு பிறந்த நாள் விழா 26.10.2026 அன்று வேலூரில் நடைபெற்றது. பிறந்த நாளினையொட்டி வேலூரில் மருத்துவ முகாம்க... மேலும் பார்க்க

JIO: தாத்தா திருபாய் பற்றிய பேசிய அனந்த் அம்பானி; கண்கலங்கிய முகேஷ் அம்பானி; வீடியோ வைரல்

பங்குசந்தையில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகள் இன்று காலை பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தலைமையில் அவரின் மகன் ஆகாஷ் அம்பானி, மகள் இஷா அம்பானி இதனைத் தொடங்கி வைத்திர... மேலும் பார்க்க

முதல்வர் விஜய் பற்றி சர்ச்சை கருத்து - தப்பிஓடிய வேலூர் திமுக கவுன்சிலர் விழுப்புரத்தில் சிக்கினார்!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று முன்தினம் அதிரடியாக கைது ச... மேலும் பார்க்க