செய்திகள் :

JIO: உக்கிரமாகும் முகேஷ் அம்பானி... பங்குச் சந்தையில் முதல் நாளே ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளிய ஜியோ!

post image

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி இன்று அந்த இடத்தை இன்னும் வலுவாகத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். அவருடைய ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் இன்று பங்குச் சந்தையில் பட்டியலாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

மிகப்பெரிய ஐபிஓக்களில் ஒன்றாகப் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ சமீபத்தில் முடிந்தது. இந்நிலையில் இன்று அதன் பங்குகள் மும்பை பங்குச்சந்தையிலும், தேசிய பங்குச்சந்தையிலும் அதிகாரப்பூர்வமாகப் பட்டியலாயின. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் ஐபிஓ விலையான ரூ.1,119 ஐ விட சுமார் 21.36 சதவிகிதம் அதிக விலையில் அதாவது ரூ.1,358-க்குப் பங்குச்சந்தையில் பட்டியலாகி உள்ளது.

இதன்மூலம், ஐபிஓவில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு பட்டியலான அடுத்த நொடியே 21% லாபம் கிடைத்துள்ளது. மேலும், இன்று சந்தை சரிவில் இருக்கும் நிலையிலும் இந்தப் பங்கு ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. இதன்மூலம் மெகா ஐபிஓக்களில் அதிக லாபம் கொடுத்த நிறுவனமாகவும் இது உள்ளது.

முகேஷ் அம்பானி குடும்பம்

மிக முக்கியமாக, பங்குச் சந்தையில் பட்டியலான முதல் நாளே இந்தியாவிலேயே அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ரூ.10.3 லட்சம் கோடி மதிப்பீட்டில் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில் 21 சதவிகித விலை உயர்வில் பட்டியலானதால் ஜியோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.12.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பட்டியாவதற்கு முன் சந்தை மதிப்பில் இரண்டாம் இடத்தில் இருந்த ஏர்டெல் நிறுவனம் தற்போது ரூ.11.8 லட்சம் கோடி மதிப்பீட்டில் உள்ளது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி அதன் இடத்தை பங்குச் சந்தையில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பிடித்துள்ளது. மேலும், இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாகவும் ஜியோ உயர்ந்துள்ளது.

இது, சந்தையில் பட்டியலாகும் முகேஷ் அம்பானியின் 12-வது நிறுவனமாகும். அதுமட்டுமல்லாமல் ரூ.15.8 லட்சம் கோடி என்ற மதிப்பில் பங்குச் சந்தையின் முதல் இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளது. இப்போது இரண்டாம் இடத்தை ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களையும் தன் வசம் வைத்துள்ள முகேஷ் அம்பானியின் ஆட்டம் இனி அசுர வேகம் பிடிக்கும் என்கிறார்கள்!

Financial Plan: சம்பாத்தியம் மட்டும் போதுமா? உங்கள் குடும்பத்திற்கு ‘ஃபினான்சியல் பிளான்’ இருக்கா?

மாதம் ₹50000 - ₹1 லட்சம் சம்பளம். கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கிறீர்கள். EMI, வீட்டுச் செலவு, குழந்தைகள் ஃபீஸ் போக, எஞ்சிய பணத்தைச் சேமிக்கிறீர்கள்; அவ்வப்போது மியூச்சுவல் ஃபண்ட்ஸ்/NPS போன்ற ... மேலும் பார்க்க

`பணக் கஷ்டம், கடன் சுமை வராமல் இருக்க... எலி கற்றுத்தந்த பாடம்!' - நீங்கள் செய்ய வேண்டிய ஒரு விஷயம்!

மாதம் 30,000 சம்பாதிப்பவர்களும் சரி, 3 லட்சம் சம்பாதிப்பவர்களும் சரி, எவ்வளவு சம்பளம் என்பதற்கு அப்பாற்பட்டுதான் பெரும்பாலானோர் மாத கடைசியில் கையில் பணமில்லை என்ற சூழலுக்கு ஆளாகிறார்கள். நாம் ஏன் இந்த... மேலும் பார்க்க

அமெரிக்க இடைத்தேர்தல்தான் பங்குச்சந்தை இறக்கத்திற்கு மிக முக்கியக் காரணமா?

இந்தியப் பங்குச்சந்தை மட்டுமல்ல, உலகம் முழுக்கவும் உள்ள பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் கடந்த இரு ஆண்டுகள் பார்த்த லாபம் எல்லாம் கரைந்துபோய், நஷ்டம் அடையும் நி... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை... இந்தியாவில் 2-வது வருமானம்; NRI-களுக்கான மாஸ்டர் பிளான்!

வெளிநாட்டில் நல்ல சம்பளம், மாதக் கடைசியில் கணிசமான சேமிப்பு. குடும்பத்துக்காக பணம் அனுப்புவது, குழந்தைகளின் எதிர்காலத்துக்குச் சேமிப்பது, சொந்த ஊரில் வீடு கட்டுவது என எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்... மேலும் பார்க்க

Finance with Harish: சமூக வலைத்தளப் பக்கத்தை முடக்கிய மெட்டா; ஹரிஷ் எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி

‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்கிற சமூக வலைத்தளங்களில் நிதி சம்பந்தமான வீடியோ, டிப்ஸ், அறிவுரைகளை வழங்கி வந்தார் ஹரிஷ்.இவர், உரிய உரிமம் இல்லாமலும், SEBI நிதி ஆலோசகர் (RIA) உரிமம் பெறாமலும் முன்பு வீடியோ செ... மேலும் பார்க்க

‘அப்புறம் பாத்துக்கலாம்...’ - உங்களை ஏழையாக்கும் இந்தப் பழக்கத்திலிருந்து தப்பிப்பது எப்படி?

நாம் யாருமே, “ஐயையோ, நான் முதலீடே பண்ண மாட்டேன்டா சாமி”ன்னு அடம் பிடிக்கிறதே இல்லை. “அடுத்த மாசம் சம்பளம் வரட்டும்”, “தீபாவளி போனஸ் வரட்டும்”, “இன்சென்டிவ் கைக்கு வரட்டும்”, “மார்க்கெட் கொஞ்சம் கீழ இற... மேலும் பார்க்க