செய்திகள் :

Finance with Harish: சமூக வலைத்தளப் பக்கத்தை முடக்கிய மெட்டா; ஹரிஷ் எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி

post image

‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்கிற சமூக வலைத்தளங்களில் நிதி சம்பந்தமான வீடியோ, டிப்ஸ், அறிவுரைகளை வழங்கி வந்தார் ஹரிஷ்.

இவர், உரிய உரிமம் இல்லாமலும், SEBI நிதி ஆலோசகர் (RIA) உரிமம் பெறாமலும் முன்பு வீடியோ செய்திருந்திருக்கிறார்.

சமீபத்தில் ARN எண்ணைப் பெற்றுவிட்டு, முன்னரே AMFI உரிமம் வைத்திருந்ததாகப் பொய்யாகக் கூறி SEBI மற்றும் AMFI அமைப்புகளை ஏமாற்றியிருக்கிறார் என்று ஜேசன் சாமுவேல் என்பவர் வீடியோ வெளியிட்டிருந்தார்.

தற்கொலை

இதன் பிறகு, ஹரிஷின் சமூக வலைத்தளப் பக்கங்கள் மெட்டாவால் முடக்கப்பட்டது.

இதையடுத்து, ஹரிஷ் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஜேசன் சாமுவேல்
ஜேசன் சாமுவேல்

ஜேசன் சாமுவேல் பதிவு

ஹரிஷின் தற்கொலை குறித்து ஜேசன் சாமுவேல், “நடந்த சம்பவத்தைக் கேட்டு நான் அதிர்ச்சியில் இருக்கிறேன்.

என் மனம் ஆழ்ந்த துயரத்திலும் சோகத்திலும் உள்ளது. உயிரிழப்பு ஏற்பட்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

நான் அவரை இணைய வழியில் அச்சுறுத்தவோ அல்லது துன்புறுத்தவோ இல்லை.

அவர் நிதி ஆலோசனை வழங்க உரிய SEBI RIA உரிமம் பெறாதது, மற்றும் சமீபத்தில் தான் ARN எண்ணைப் பெற்றிருந்தும் முன்னரே AMFI உரிமம் வைத்திருப்பதாகப் பொய்யாகக் கூறி SEBI மற்றும் AMFI அமைப்புகளை ஏமாற்றியது மட்டுமே நான் சுட்டிக்காட்டினேன்.

உண்மையில், எனது வீடியோவில் கூட அவர் முறையான SEBI உரிமத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் வந்து பணிகளைத் தொடருமாறு தான் நான் கேட்டுக்கொண்டேன்.

இப்படி ஒரு விபரீதமான முடிவு நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவோ எதிர்பார்க்கவோ இல்லை. இந்த இழப்பிற்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

‘அப்புறம் பாத்துக்கலாம்...’ - உங்களை ஏழையாக்கும் இந்தப் பழக்கத்திலிருந்து தப்பிப்பது எப்படி?

நாம் யாருமே, “ஐயையோ, நான் முதலீடே பண்ண மாட்டேன்டா சாமி”ன்னு அடம் பிடிக்கிறதே இல்லை. “அடுத்த மாசம் சம்பளம் வரட்டும்”, “தீபாவளி போனஸ் வரட்டும்”, “இன்சென்டிவ் கைக்கு வரட்டும்”, “மார்க்கெட் கொஞ்சம் கீழ இற... மேலும் பார்க்க

Retirement: கோடி டு நடுத்தெரு... ஏழையான பிரபலங்கள் கற்றுத் தரும் ரிட்டைர்மென்ட் பாடம் என்ன?

கோடிகளில் சம்பளம், லட்சக்கணக்கான ரசிகர்கள்... உச்சத்தில் இருந்த பிரபலங்களே கடைசியில் நடுத்தெருவுக்கு வந்த கதைகள் உங்களுக்குத் தெரியுமா?இந்த 'செலிப்ரிட்டி டவுன்ஃபால்' கதைகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்... மேலும் பார்க்க

Silver: சரியான நேரம் இது! 2025-ல் செய்த தவறுக்கு இப்போது 'நோ' இடம்; 'நியூ கோல்டு' வெள்ளியை கவனிங்க!

தங்கத்திற்கு எப்போதுமே நமது குடும்பங்களில் தனி இடம் உண்டு. ஆனால், வெள்ளியை அவ்வளவாகக் கண்டுக்கொள்ளமாட்டோம்.ஆனால், ‘இது தவறு’ என்பதைக் கடந்த ஆண்டு வெள்ளியின் ‘கிடுகிடு’ விலை உயர்வு நமக்குக் காண்பித்துவ... மேலும் பார்க்க

"இன்னைக்கு ₹80,000 செலவு... அதுவே 15 வருஷம் கழிச்சு?" - NRI-களே, கணக்கு தப்பிடுச்சுனா கஷ்டம்!

துபாய் மாதிரி ஒரு வளைகுடா ஊரில் இருக்கீங்க... 45 வயசு... கைநிறைய சம்பளம், ஊர்ல சொந்த வீடு, பேங்க்ல நல்ல சேவிங்ஸ்னு கெத்தா சுத்துற ஆளா நீங்க? '60 வயசானதும் பேக்கப் பண்ணிட்டு ஊருக்குக் கிளம்ப வேண்டியதுத... மேலும் பார்க்க

Aadhar-ல் உங்கள் பெயர் 'எப்படி' இடம்பெற வேண்டும்? புதிய நடைமுறைக்கேற்ப பெயர் மாற்றம் செய்வது எப்படி?

2010 காலக்கட்டத்தில் ஆதார் கார்டு நடைமுறைக்கு வந்தபோது, ‘எங்கும்... எதிலும்... அனைத்திலும் ஆதார்’ என்கிற நிலை உருவாகும் என்று யாரும் கற்பனைக்கூடச் செய்து பார்த்திருக்கமாட்டோம்.அதனால், ஆதார் கார்டு எடு... மேலும் பார்க்க

லாபத்துக்கு வரி கட்டத் தேவை இல்லாத GIFT City ஃபண்டுகள்; NRI முதலீட்டாளர்களுக்கு அருமையான வாய்ப்பு!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ரியல் எஸ்டேட், பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் என அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள்... மேலும் பார்க்க