செய்திகள் :

``என்னை முடக்கப்பாக்குறாங்க; ஜெயலலிதா அம்மாவைப் போல மீண்டு வருவேன்" - அமைச்சர் கீர்த்தனா

post image

சிவகாசியில் நடைபெற்ற ‘வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் கீர்த்தனா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``பெண்கள் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கி பிராண்டுகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக, அரசு இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

பெண்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டு வருவதில் அரசு தீவிரமாக உள்ளது. என் வீடு தொடர்பான குற்றச்சாட்டு, ரூ.3 கோடி பெற்றதாக எழுந்தக் குற்றச்சாட்டு என அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்டது.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே என் மீது இப்படியான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதற்குக் காரணம் எதிர்க்கட்சிகளின் பயமே.பல தடைகளுக்கு நடுவேயும் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்தல், கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூரு பயணங்கள் எனத் தொழிற்துறை வளர்ச்சிப் பணிகளை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.

ஹூண்டாய் திட்டம் தூத்துக்குடிக்குத்தான் வரவுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிடும் என்று விமர்சித்தவர்கள், தற்போது உண்மை வெளிவந்ததும் அதைப் பற்றிப் பேசுவதில்லை.

எனக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அதை விடுத்து வீண் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் தேட முடியாது. பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, பொய்க் குற்றச்சாட்டுகளால் ஒருவரை முடக்கப் பார்க்காதீர்கள்.

ஜெயலலிதா அம்மாவுக்கும் இதேபோலத்தான் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு முடக்கப்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் வெகுண்டெழுந்து மீண்டு வந்தார்கள். அதேபோல் நானும் மீண்டு வருவேன்” என்றார்.

நடிகர் தனுஷ் அரசியல் வருகை? "நாமலே ஏன் படம் வரைஞ்சி கண்ணு மீசை எல்லாம் வைக்கணும்" - கருணாஸ்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா பசும்பொன்னில் யாக வேள்வியுடன் தொடங்கி நடந்து வருகிறது. நிறைவு நாளான இன்று (30-ந்தேதி) பசும்பொன்னில் அனைத்து அரசியல் கட்ச... மேலும் பார்க்க

முதல்வர் விஜய் புதுக்கோட்டை பயணம்: 'தனி விமானம், ரோடு ஷோ, திறப்பு விழா...' - விழா ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக முதலமைச்சர் விஜய், வரும் நவம்பர் 2-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதன்முறையாக அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக புதுக்கோட்டைக்கு வருகை தரு... மேலும் பார்க்க

`ரூ.5,000 கோடி நிதி மோசடி செய்த பிரேம் குமாருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு?' - உதயநிதி கேள்வி!

ரூ.5,000 கோடி நிதி மோசடி செய்த பிரேம் குமாருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில... மேலும் பார்க்க

`முதல்வர் அப்படி உத்தரவிட்டிருக்க மாட்டார்..!' - பேராசிரியர் கலையரசன் கைது குறித்து திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பேராசிரியர் கலையரசன் விடியற்காலை 5 மணிக்குக் கைதுசெய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அது ஏற்புடையதல்ல. தமிழ்நாடு அர... மேலும் பார்க்க

`மின்வெட்டால் மீனாட்சி அம்மனிடம் நிம்மதியாக பிரார்த்தனைகூட செய்ய முடியாது'- எடப்பாடி பழனிசாமி வேதனை

முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு மதுரைக்கு வந்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாலை 5:30 மணிக்கு மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்றார். அவர் சென்ற சில நிமிட... மேலும் பார்க்க

``பசும்பொன்னில் சசிகலாவைச் சந்திக்க திட்டமா?" - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``முன்னாள் அமைச்சர்கள் கைது மற்றும் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புச் சோதனை, என்ன வழக... மேலும் பார்க்க