செய்திகள் :

விழுப்புரம்: மது போதையில் மனைவியுடன் தகராறு - ஆறு வயது மகனை கிணற்றில் வீசி கொலைசெய்த தந்தை கைது!

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்திருக்கும் நல்லான் பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் - தேவி தம்பதி. இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். கடைசிக் குழந்தையான சஞ்சய், அதே பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். மதுப்பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ், சுய உதவிக் குழுவில் கட்டுவதற்காக மனைவி வைத்திருந்த பணத்தை அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் நேற்று மது குடித்திருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட சஞ்சய்

அதையடுத்து வீட்டிற்கு வந்த அவரிடம், `குழுவுக்குக் கொடுக்க வைத்திருந்த பணம் எங்கே?' என்று கேட்டிருக்கிறார் தேவி. அதற்கு, `அதெல்லாம் பொறுமையாக் கட்டிக்கலாம். அந்தப் பணத்துலதான் நான் சாப்பிட்டு வந்திருக்கேன்' என்று கூற, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து இன்று காலை, `குழுவுக்கு இன்னைக்குப் பணம் கட்டனும். நான் எப்படிக் கட்டுறது?' என்று செல்வராஜிடம் கேட்டிருக்கிறார் தேவி.

அப்போது மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து யாரிடமாவது பணம் கடன் வாங்குவதற்காகச் சென்ற தேவி, திரும்பி வந்து காலை உணவுக்காக மகன் சஞ்சயைத் தேடியிருக்கிறார். சஞ்சய் வீட்டில் இல்லாததைக் கண்ட அவர், அக்கம்பக்கத்தில் தேடியிருக்கிறார். எங்கும் சஞ்சய் இல்லாததால் கணவரிடம் கேட்டிருக்கிறார். அப்போது, `அவனை அந்தக் கெனத்துல தூக்கிப் போட்டுட்டேன்' என்று கூலாகக் கூறிவிட்டு, மதுபோதையில் படுத்திருக்கிறார். பதறிப்போன தேவி, அழுதுகொண்டே கிணற்றை நோக்கி ஓடியிருக்கிறார்.

சடலமாக சஞ்சய்

தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் அந்தக் கிணற்றில் குதித்து சிறுவனைத் தேடினார்கள். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை. இதற்கிடையில் தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் மூன்று மணி நேரம் தேடி கிணற்றில் இருந்த சிறுவனின் சடலத்தை மீட்டனர். மது போதையில் தந்தையே மகனைக் கொலை செய்த சம்பவம், அந்த கிராமத்தை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

திருவள்ளூர்: இளைஞர் கொலை; கடற்கரையில் சடலம் புதைப்பு - துப்பு துலங்கியது எப்படி?

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி எழில்செல்வி. இவர் சென்னையில் உள்ள பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் வேலை செய்து வருகிறார். இந்தத் தம்பதியின் மகன... மேலும் பார்க்க

சிவகங்கையில் மீண்டும் கொலை: மானாமதுரையில் பட்டப்பகலில் காதுகளை அறுத்து 8 பவுன் நகை கொள்ளை!

சுள்ளான் மதன் விவகாரம் மற்றும் ரவுடி கும்பலின் அடுத்தடுத்த தொடர் கொலைகளால் சிவகங்கை மாவட்டமே நிலைகுலைந்து போயுள்ளது. இதன் பரபரப்பும் அச்சமும் பொதுமக்கள் மனதிலிருந்து இன்னும் அகலாத நிலையில், சிவகங்கையி... மேலும் பார்க்க

விழுப்புரம்: `கழுத்தை நெரித்து போட்டுட்டேன்' - தந்தையால் பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த சோகம்

விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்திருக்கும் வி.பரங்கனி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான சிவசாத்திரிக்கு, இரண்டு மகள்கள். இளைய மகள் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் இருக்கும் தன்னுடைய பாட்டி வீட்டில... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்கு லிஃப்ட் கொடுத்து பாலியல் தொல்லை அளித்த வழக்கு; த.வெ.க நிர்வாகி சிறையிலடைப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரிமாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்எம்.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடன் பக்கத்து ஊரான மூலச்சல்பகுதியைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரசு வேலை என்று போலி நியமன ஆணை; 4 பேரிடம் ரூ.16 லட்சம் மோசடி - மருத்துவர் உட்பட இருவர் மீது வழக்கு!

நாமக்கல் மாவட்டம், முத்துகாட்டுப்பட்டியில் 28 வயது பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், அவர் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனக... மேலும் பார்க்க

வெள்ளை உடும்பு, 16 மலைப்பாம்பு; பாங்காக் டு திருச்சி; ஏர்போர்ட்டில் சிக்கிய 45 அறிய வகை உயிரினங்கள்!

வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரிய வகை வனவிலங்குகள் மற்றும் ஊர்வன உயிரினங்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்க... மேலும் பார்க்க