செய்திகள் :

‘தனுஷ்காக காத்திருக்கும் அதிமுக, சீமானுக்காக காத்திருக்கும் திமுக’ – காங்கிரஸ் விமர்சனம்

post image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், “தமிழ்நாட்டு அரசியலில் நாளுக்கு நாள் தி.மு.க-வின் நிலை மிக மோசமான மாறி வருகிறது என்பதை தனது புலம்பல் அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தி வரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொடுத்த பிரஸ் மீட் தி.மு.க-வின் நிலையை குலைய செய்துள்ளது. அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானுக்கு தி.மு.க ஆதரவளிக்குமா என கேட்டதற்கு நீங்கள் சொன்ன பதில் தான் அதற்கு காரணம்.  

நீங்கள் என்ன சொன்னீர்களோ, அதை தெரிந்து தான் சொன்னீர்களா என தி.மு.க-வின் தொண்டர்களே கன்ஃபியூஸ் ஆகி நிற்கிறார்கள். ஒரே வார்த்தையில் இல்லை, தி.மு.க வேட்பாளரை களமிறக்கும் என சொல்வீர்கள் என பார்த்தால், இப்படி ‘தேர்தல் வரட்டும் பார்க்கலாம்’ என சொல்வது நகைப்பாக உள்ளது. ஒருபக்கம் தனுஷ்காக காத்திருக்கும் அ.தி.மு.க பொதுச்செயலாளர், மறுபக்கம் சீமானுக்காக காத்திருக்கும் தி.மு.க தலைவர். இது என்ன கொடுமை சார் இது என கேட்கும் வகையில் உள்ளது.

கணபதி சிவக்குமார்
கணபதி சிவக்குமார்

போகிற போக்கை பார்த்தால் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி ஆட்சியில் பல கட்சிகளின் சாயம் வெளுத்து திரைமறைவு நாடகங்கள் வெளிப்படும் போலவே. என்னதான் அவதூறு பரப்பினாலும், அறிக்கைகள் மூலம் புலம்பி அழுதாலும் மக்களுக்கான இந்த கூட்டணி ஆட்சியை அசைத்துக்கூட பார்க்க முடியாது ஸ்டாலின் சார். அரசியல் லாபத்திற்காக அ.தி.மு.க-வுடனான உங்கள் ரகசிய கூட்டு எப்படி வெளிப்பட்டதோ, அதேபோல தற்போது நா.த.க-வுடனான தங்கள் கரிசனமும் வெளிப்படத்தொடங்கியுள்ளது.இதேபோல விரைவில் பா.ஜ.க-வுடனான தங்களது திரைமறைவு நாடகங்களும் அம்பலப்படும். அதையும் தமிழ்நாட்டு மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள் ஸ்டாலின் சார்” எனத் தெரிவித்துள்ளார்.

'சாப்பாடு சரியில்லை என்பதற்காக ஜாமீனா?'- அன்பில் மகேஸ் குறித்து மரிய வில்சன் பேசியதென்ன?

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கோடிக்கணக்கில் லஞ்சமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்... மேலும் பார்க்க

TNPSC தேர்வுக்கு வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை உயர்த்த முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். போட்டித் தேர்வுகளின் கோரிக்கையை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை 5 ஆண்ட... மேலும் பார்க்க

'போலீஸ் கஸ்டடி வேண்டாம்; வீட்டு சாப்பாடு வேணும்!' - புன்னகையோடு புழலுக்கு திரும்பிய அன்பில்!

தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்கிய வழக்கில் நீதிமன்றத்தில் காவலில் புழல் சிறையில் இருக்கும் அன்பில் மகேஸை விசாரணைக்காக காவலில் எடுக்க போலீஸார் மனு போட்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு ம... மேலும் பார்க்க

'சட்டமன்றத்தில என் குரல் ஒலிக்கணும்'னு நிறைய பேர் விருப்படுறாங்க.!'- சீமான் கூறியதென்ன?

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "அதிமுகவும், திமுகவும் விலகி இடைத்தேர்தலில் என்னை ப... மேலும் பார்க்க

``இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவு நிலைப்பாடா?" - திமுக தலைவர் ஸ்டாலினின் பதில் என்ன?

பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பசும்பொன்னில் மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``விடுதலைப் போராட்டத்திற்குத் துணைநின்றவர். ஆங்கிலேய அடக்... மேலும் பார்க்க