செய்திகள் :

சித்தராமையா மீதான ஸ்டிங் ஆபரேஷன் சர்ச்சை: முன்னாள் பொதுச் செயலாளர் கிருபா ஆல்வாவை நீக்கிய காங்கிரஸ்!

post image

கர்நாடக காங்கிரஸ் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 'ஸ்டிங் ஆபரேஷன்' ஒன்றில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கிருபா ஆல்வாவை ஆறு ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி (KPCC) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

KPCC துணைத் தலைவர் எம். நாராயணசாமி வெளியிட்ட நீக்க உத்தரவில், இந்த சர்ச்சை ஊடகங்களில் எதிர்மறையான விளம்பரத்தையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தி கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை உருவாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா
சித்தராமையா

"இந்த ஸ்டிங் ஆபரேஷன் வழக்கில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதாலும், இது தொடர்பான உங்கள் நடத்தை கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சமம் என்பதாலும், மாண்புமிகு KPCC தலைவரின் அறிவுறுத்தலின் பேரில், நீங்கள் உடனடியாக கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறீர்கள்," என்று அந்த உத்தரவில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு கிருபா ஆல்வாவுக்கு அனுப்பப்பட்ட 'ஷோ-காஸ்' நோட்டீஸுக்கு அவர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் கட்சித் தலைமை கூறியுள்ளது.

முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, தனக்கு எதிரான இந்த 'அவதூறு வீடியோ'வின் பின்னணியில் கிருபா ஆல்வா இருப்பதாக வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இந்த வீடியோவை ஊடகங்கள் ஒளிபரப்பவோ அல்லது இது தொடர்பான செய்திகளை வெளியிடவோ கூடாது என்று நீதிமன்றத்தில் இருந்து அவர் தடை உத்தரவையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், சித்தராமையாவுக்கு எதிரான அவதூறு உள்ளடக்கங்களைக் கொண்டதாகக் கூறப்படும் இந்த ஸ்டிங் ஆபரேஷன் குறித்து விசாரணை நடத்திய பெங்களூரு காவல்துறை, வீடியோவில் உள்ள பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு ஒரு "புனையப்பட்ட மற்றும் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட கதை" என்று வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்கள், வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி எந்தவொரு சம்பவமும் நடந்ததை உறுதிப்படுத்தவில்லை என்றும் காவல்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

"இனி சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத்தானேதான் செய்துகொள்ள வேண்டும்" - உதயநிதி

இந்த வாரத்தின் தொடக்கத்தில் தேனி தேக்கம்பட்டி துணைச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பி ஓடினர். நேற்று கோவையிலிருந்து ராகவன் என்னும் விசாரணைக் கைதி தப்பி ஓடியுள்ளார். இவர்களைப் போலீசார் தேடி வர... மேலும் பார்க்க

ஈரான் போர்: `ஐரோப்பாவுக்கு மட்டும் 100 பில்லியன் யூரோவுக்கும் அதிகமான செலவு' - இந்தியாவின் நிலை?

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்திலேயேதான் இருக்கிறது.தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பா WTI எண்ணெய் 104 டாலருக்கும், Brent கச்சா எண்ணெய் 112 டாலருக்கும் வர்த்தகமாகிக் கொண்ட... மேலும் பார்க்க

'மருத்துவமனையில் 50 நாட்களை கடந்த வி.எஸ்.பாபு!' - அப்டேட் கொடுக்காத அரசு!

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 50 நாட்களை கடந்துவிட்டது. ஆனால், மருத்துவமனை தரப்பிலோ அரசு தரப்பிலோ அவரின் உடல்நிலை குறித்து முறையான அறிக்க... மேலும் பார்க்க

``சதி... முறைகேடு... தொடர் நிதியிழப்பு” - சீர்குலைக்கப்படுகிறதா வட ஆற்காடு வன்னியர் சங்கம்?

வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு 1917-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது வட ஆற்காடு மாவட்ட வன்னிய குல சத்திரிய சங்கம். அரசியல் சார்பில்லாமல், வன்னியர் சமூக மக்கள் மற்றும் மாணவர்களின் நலன்களைக் காப்பதற்... மேலும் பார்க்க

`சிறை சோதனைக்காகக் காத்திருந்த வேளை.!' - கோவை மத்திய சிறையில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி யார்?

கோவை சிறையில் இருந்து ஒரு விசாரணைக் கைதி தப்பி ஓடியுள்ளார்.கோவை அன்னூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு ஒன்றில் நேற்று (அக்டோபர் 30) கைது செய்யப்பட்டவர் ராகவன். இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர்... மேலும் பார்க்க