செய்திகள் :

கோவை: கைதி தப்பியோடிய விவகாரம் – எஸ். ஐ உட்பட 4 போலீஸார் சஸ்பெண்ட்!

post image

தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற பரபரப்பு அடங்காத நிலையில், கோவை சிறை வளாகத்தில் இருந்து ஒரு கைதி தப்பியோடிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு வழிப்பறி வழக்கு தொடர்பாக ராகவன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் அழைத்து வந்தனர்.

அப்போது கோவை மத்திய சிறை வளாகத்தில் பாதுகாப்பிற்காக வந்த காவலர்களை தள்ளிவிட்டு விட்டு ராகவன் தப்பியோடினார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பந்தயசாலை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ட்ரோன் கண்காணிப்பு, சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் வாகனச் சோதனைகள்  உதவியுடன் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் ராகவனை தேடி வருகின்றனர். இந்த நிலையில் அன்னூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அப்துல் முத்தலிப், தலைமை காவலர் ரஞ்சித் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் உட்பட 4 பேர் பணியின் போது கவனக்குறைவாக இருந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

IVF: `சட்டவிரோதமாக பெண்களின் கருமுட்டையை பிரித்தெடுத்த கும்பல்' - 8 பேர் கைது; 43 பெண்கள் மீட்பு!

ஹைதராபாத்தின் பிரகாஷ் நகர், எர்ரகட்டா, கோபாலபுரம் ஆகிய இடங்களில் மல்காஜ்கிரி கமிஷனரேட்டின் சிறப்பு நடவடிக்கைக் குழு (SOT) மற்றும் உள்ளூர் காவல்துறை இணைந்து கருத்தரிப்பு மையங்களில் சோதனை நடத்தினர். அப்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம் வந்தவரிடம் 900 மதுபாட்டில்கள் பறிமுதல்!

தூத்துக்குடி, லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர், லெவிஞ்சிபுரத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், இவரது வீட்டில் 1,000 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த... மேலும் பார்க்க

ரூ.3 லட்சம் கடனால் நெருக்கடி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்!

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்ஙனாச்சேரி எஸ்.பி. கல்லூரி அருகே கரிங்கடயில் பகுதியில் வசித்து வந்தவர் ஸாஜூ (64). இவரது மனைவி அனு (59). இவர்களுக்கு சவின் (33) என்ற மகன் இருந்தார். வழக்கமாக காலையில்... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்கில் விசிக முன்னாள் நிர்வாகி படுகொலை; தூத்துக்குடியில் பதற்றம்... போலீஸார் குவிப்பு!

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலாளர். மேலும் இந்த பகுதியில் காய்கற... மேலும் பார்க்க

மது போதையில் போலீஸாரை தாக்கிய போதை கும்பல்; சிகிச்சையிலிருந்த ஊர்காவல் படை வீரர் உயிரிழப்பு!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் காவல் நிலையத்தில், ராஜாகண்ணு போலீஸாகவும், வெங்கடேசன் (47) ஊர்க்காவல் படை வீரராகவும் பணி புரிந்தனர். இருவரும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம... மேலும் பார்க்க

திருப்பூர்: முத்தம் கேட்டு டார்ச்சர் செய்த போலீஸ் ஏட்டு; ரௌடியின் புகாரால் சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம், மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 35 நபர் மீது மங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய அந்த ... மேலும் பார்க்க