செய்திகள் :

``பொது இடத்தில் மது குடித்த இளைஞர்கள்: தட்டிக்கேட்ட ஊர்க்காவல்படை வீரர் அடித்துக்கொலை" - அன்புமணி

post image

மது குடித்ததைத் தட்டிக்கேட்ட ஊர்க்காவல் படை வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அன்புமணி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அரியலூர் மாவட்டத்தில் பொது இடத்தில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்டதற்காக தளவாய் காவல் நிலைய வளாகத்தில் ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் என்பவர் போதையிலிருந்த 3 இளைஞர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி
அன்புமணி

காவலர்களுடன் இணைந்து வெங்கடேசன் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆதனங்குறிச்சி என்ற இடத்தில் 3 இளைஞர்கள் பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் கண்டித்து அங்கிருந்து அனுப்பியுள்ளார். அதனால், ஆத்திரமடைந்த அவர்கள், அடுத்த சிறிது நேரத்தில் காவல் நிலையத்திற்கு அருகில் வந்து, சுற்றுக்காவல் முடித்து திரும்பிய வெங்கடேசனை கண்மூடித்தனமாக அடித்து கொலை செய்துள்ளனர்.

கடமையை செய்த ஊர்க்காவல் படைவீரர் குடிகாரர்களால் கொல்லப்பட்டிருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் மாதம் ரூ.2800 என்ற குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில், அவரது இரு குழந்தைகளும் ஆதரவற்றவர்களாகி தவித்து வருகின்றனர். அவர்களின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டும், ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் பணியில் இருந்த போது கொல்லப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டும் அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"அன்பில் கைதுக்கு காரணமானவரோடு தருமபுரி எம்.பி காட்டும் நெருக்கம்!" - கொந்தளிக்கும் திமுக-வினர்!

"தி.மு.க ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் புகார் கொடுத்தவரின் நிறுவனம் நடத்திய விழாவில் கலந்துகொண்ட எம்.பி மீது நடவடிக்கை எடுங்கள்" என்று தருமபுரி மாவட்ட தி.மு.க-வினர் தலைமைக்கு புகார் அனுப்ப... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: 6 மாதம் கிடப்பில்; சி.எம் விசிட்டால் 2 நாளில் அவசரமாக சாலை பணி; கேள்விக்குறியான தரம்!

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் புதுக்கோட்டை வருகை காரணமாக கடந்த 6 மாத காலமாக முடங்கிக் கிடந்த சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது அசுர வேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.தமிழ்நாடு முதலமைச்சர் முத... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆர் துரைமுருகனை தன் கட்சியில் சேர அழைத்தார், ஆனால் அண்ணன்..!" - மு.க.ஸ்டாலின் பகிர்வு

முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனின் இல்லத் திருமண விழா இன்று (நவ.1) சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி ... மேலும் பார்க்க

'திமுக எழுப்பும் கேள்விக்கு தவெக பதில் சொல்லித்தான் ஆகணும்.!'- பாஜக வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது அவரிடம் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.அதற்கு பதில் அளித்த அவர்," சட்டம் ஒழு... மேலும் பார்க்க

ஜெர்மனியில் வெடித்த Gen Z போராட்டம்: 34 நகரங்களின் வீதியில் இறங்கிய இளைஞர்கள்!

ஜெர்மனியில் கல்வி மற்றும் பொதுச் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்க வலியுறுத்தியும், கட்டாய ராணுவ சேவைத் திட்டத்தைக் கைவிடக் கோரியும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 'Gen Z regelt' என்ற அமை... மேலும் பார்க்க