செய்திகள் :

`மறுமணம் செய்து கொள்ளுங்கள்'- கணவருக்கு கடிதம் எழுதிவிட்டு மகனுடன் 18வது மாடியிலிருந்து குதித்த பெண்

post image

புனே அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்த ஏக்தா பங்காட் என்ற பெண், பல வருடங்களாக முதுகுத் தண்டு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது கணவர் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருக்கிறார். அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். ஏக்தாவின் கணவர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், ஏக்தா தனது மகனை அழைத்துக் கொண்டு கட்டடத்தின் 18வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீட்டில் ஏழு முதல் எட்டு பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதிவைத்திருந்தார். போலீசார் அக்கடிதத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அக்கடிதத்தில் ஏக்தா தனது கணவர் மறுதிருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் தனது கணவர் மீது தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக கடிதம் எழுதி இருந்தார்.

சம்பவம் நடந்த கட்டடம்

அவரது மரணத்திற்குப் பிறகு அவரை மறுமணம் செய்து தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புமாறு கேட்டுக் கொண்டார். அவர் தனது மகனின் எதிர்காலம் குறித்த தனது கவலைகளை கடிதத்தில் தெரிவித்து இருந்தார். தான் இல்லாததைப் புரிந்து கொள்ள மகன் மிகவும் போராடக்கூடும் என்றும், எனவே தனது மகனை தன்னுடன் அழைத்துச் செல்வதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தான் இறந்த பிறகு மகன் தனது தாயைப் பற்றி மீண்டும் மீண்டும் கேட்பான் என்று கவலை தெரிவித்து இருந்தார்.

மேலும் குழந்தை இருந்தால் தனது கணவருக்கு மறுமணம் செய்து கொள்வதில் சிரமம் ஏற்படும் என அச்சம் தெரிவித்து இருந்தார். இத்தற்கொலை குறித்து போலீஸார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஏக்தா பல ஆண்டுகளாக முதுகெலும்பு நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவர் குணமடையவில்லை. எனவே மன அழுத்தத்தில் இருந்த ஏக்தா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

48 ஆண்டுகளாகத் தண்ணீரே குடிக்காத வாரன் பஃபெட்: ரகசியம் உடைத்த பில் அக்மேன்!

தினமும் கோக்... கோடிகளில் முதலீடு: வாரன் பஃபெட்டின் விசித்திரப் பழக்கம்!பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவரும் உலகின் தலைசிறந்த முதலீட்டாளருமான வாரன் பஃபெட், கடந்த 48 ஆண்டுகளாகத் தண்ணீரே குடிப்பதில்ல... மேலும் பார்க்க

40 ரிசார்ட், வில்லாக்கள்... பதவியைப் பயன்படுத்தி முறைகேடு; சிக்கிய ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் தம்பதி!

ராஜஸ்தான் மாநிலத்தில் கூடுதல் தலைமை செயலாளராக இருப்பவர் சிகர் அகர்வால். இவரது மனைவி பிரஷகா மாதூர். இவர் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். இவர்கள் இரண்டு பேரும் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ராஜஸ்தானின் ப... மேலும் பார்க்க

மரணத்தையும் கொண்டாடும் மெக்சிகோ: ‘Day of the Dead’! - இறந்தவர்களை வரவேற்கும் திருவிழா!

மரணம் என்றாலே துக்கம் மட்டும்தானா? மறைந்தவர்களை நினைத்து மகிழவும் முடியுமா? இதற்கான பதில்தான் மெக்சிகோவின் ‘Day of the Dead’ திருவிழா.ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும் இத்திரு... மேலும் பார்க்க

`₹114 தினக்கூலி பெற்ற பெண்ணிடம், ₹1,80,692 கோடி சொத்து' - ஐபோனால் சீனாவின் பணக்காரப் பெண்மணி ஆன கதை!

ஒரு காலத்தில் தொழிற்சாலையில் எளிய ஊழியராகப் பணியாற்றி, பள்ளிக் கல்வியை பாதியிலேயே கைவிட்ட சூ குன்ஃபேய் (Zhou Qunfei) என்ற பெண்மணி, இன்று விடாமுயற்சியால் சீனாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணியாக மீண்ட... மேலும் பார்க்க

`இந்தியாவை வென்றுவிட்டீர்கள்' - ஹாங்காங் சிக்ஸர்ஸ் வெற்றிக்கு வாழ்த்து; ட்ரோலில் சிக்கிய பிரதமர்

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும். அது உலகக் கோப்பையோ, ஆசியக் கோப்பையோ இல்லை, ஒரு சாதாரண போட்டியாக இருந்தாலும் இரு நாட்டு ரசிகர்களின் கவனமும் அதன் மீதுதான் இருக்கும். அந்த வ... மேலும் பார்க்க

`10,000 கோடி ரூபாய்! வந்தா போகுமா? ஆனா, போயிடுச்சே..!' - ராஜஸ்தான் இளைஞருக்கு நடந்த ட்விஸ்ட்

ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான சமீர் கான். இவர் அப்பகுதியில் உள்ள நிர்மல் மெடிக்கல் பாயிண்ட் என்ற மருந்தகத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மாதச் சம்பளமே ரூ.10,000 மட்டும்தான்... மேலும் பார்க்க