Vijay: 'அடிக்கல் நாட்டு விழா முதல் திறப்பு விழா வரை' - முதல்வர் விஜய் புதுக்கோட்...
"பாசிசத்திற்கு அப்படி ஒரு ராஜவிசுவாசம்" - 'இந்தியா' கூட்டணி பேரணியில் பங்கேறாத தவெகவைச் சாடிய ஆ.ராசா
டெல்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நேற்று நடந்த இந்தியா கூட்டணி பேரணியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, சஞ்சய் ராவத், சுப்ரியா சுலே, முதலமைச்சர்கள் வி.டி. சதீசன், ரேவந்த் ரெட்டி, டி.கே. சிவகுமார் மற்றும் பிற தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இந்தியா கூட்டணியின் இந்தப் பேரணியில் தவெக சார்பில் முதல்வர் விஜய்யோ அல்லது பிற தலைவர்களோ கலந்துகொள்ளவில்லை. இதனை திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ. ராசா கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், "‘வாக்குத் திருட்டு'க்கு எதிராக தலைநகரில் களமாடும் இந்தியா கூட்டணியில் 'தொடை நடுங்கி' வெற்றிக் கழகம் தடம் பதிக்கவில்லை! பாசிசத்திற்கு 'வாலாட்டும்' அப்படி ஒரு ராஜவிசுவாசம்! இருந்துவிட்டுப் போகட்டும். காலந்தோறும் மதச்சார்பின்மைக்கு 'காப்பிரைட்' கோரும் காங்கிரசுக்குமா சூனியமானது சுயமரியாதை? பாவம்-காந்தியும் நேருவும்தான் கலங்கி நிற்கிறார்கள்" என்று விமர்சித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb













