கோவையில் நடைபெற்ற RSS பேரணி; முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு ...
Daredevil: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு; கதாநாயகியாக கமிட்டான ஸ்ரீலீலா - 'டேர் டெவில்' அப்டேட்ஸ்
'குட் பேட் அக்லி' படதைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.
படத்தின் முதல் அறிவிப்பையே தலைப்போடு அறிவித்திருந்தது படக்குழு.

படத்திற்கு 'டேர்டெவில்' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். அத்தோடு, இப்படத்தின் மூலம் முன்னாள் நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினி தயாரிப்பாளராக உருவெடுக்கிறார்.
புதிய தயாரிப்பு நிறுவனத்திற்கு 'ப்ரேவ் ஹார்ட்' எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
அதனை உறுதி செய்யும் வகையில் இன்று நடிகர் பார்த்திபனும் 'டேர்டெவில்' படம் தொடர்பாக ட்வீட் போட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து படத்தின் பூஜை இன்று நடைபெற்றிருப்பதாக படக்குழுவினர் புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார்கள்.

இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் இப்படத்தின் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
இவர்களோடு பிரபு, பார்த்திபன், சுனில், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இன்று நடைபெற்ற பட பூஜையில் கலந்துகொண்டிருக்கிறார்கள். இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில், 'டேர்டெவில்' படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தைத் தாண்டி அஜித்தின் ரேஸிங் கரியர் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் 'கிளாடியேட்டர்ஸ்' ஆவணப்படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.
















