செய்திகள் :

`அவங்க முகத்துல வர சந்தோசம்தான்.!' - உடைந்த சிலைக்களுக்கு புத்துயிர் ஊட்டும் கலைஞர்

post image

ஒன்று உடைந்துவிட்டால், தூக்கி எறிந்துவிட்டு இன்னொன்றை தேடிச் செல்லும் காலத்தின் ஓட்டத்தில், உடைந்த சிலைகளுக்கும் புத்துயிர் ஊட்டி வருகிறார் கந்தன் (46).

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் அமைந்துள்ள இவரின் எளிமையான தெருவோரக் கடையில் பரபரப்பாகச் சிலைகளுக்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்தவரிடம் மெள்ளப் பேசத் தொடங்கினோம்.

"நான் என்னோட பதினான்கு வயசு இருக்கும்போது பெயிண்ட் அடிக்கிற வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அப்ப இந்த இடத்துல எங்க சொந்தக்காரங்கதான் செருப்புக் கடை வச்சிருந்தாங்க. அப்பப்ப நானும் அந்தக் கடைக்குப் போவேன். அப்படி போகும்போதுதான் ஒரு அம்மா உடைஞ்சு போன சிலையை எடுத்துட்டு வந்து, ஒட்டி கலர் அடிச்சுத் தர முடியுமான்னு கேட்டாங்க.

கந்தன்
கந்தன்

உடைந்த சிலையால் விளைந்த முயற்சி

எங்களுக்கும் புதுசுதான் இருந்தாலும் பரவாயில்லை, பண்ணிடலாம்னு ஒரு நம்பிக்கையில வாங்கிட்டோம். அப்ப கையில பெயிண்ட் வாங்கக்கூட காசு இல்ல. அவங்க கொடுத்த அட்வான்ஸ் பணத்துலயே பெயிண்ட் வாங்கித்தான் அடிச்சுக் கொடுத்தோமே. அந்த அம்மா எங்களைப் பத்திச் சொல்லி, ஒரு சிலர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இப்படித்தான் என்னோட பிசினஸ் ஆரம்பமாச்சு. இப்போ பதிமூணு வருசம் ஆகப்போகிறது" என்றார்.

"ஒரு கட்டத்துல பெயிண்ட் அடிக்க மட்டும் போயிட்டு இருந்த நானு, சிலைகள் புதுப்பிக்கிற வேலையும் சேர்த்துப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். இந்தக் கடையை வச்சிருந்த என்னோட சொந்தக்காரரும் ஒரு கட்டத்துல இறந்து போயிட்டாரு. சுத்தி உள்ள எல்லாரும் நீயே இங்க கடை வைன்னு சொன்னாங்க. சரின்னு நானும் வேலைக்குப் போறதை விட்டுட்டு இங்கேயே கடை வச்சிட்டேன்.

ஆரம்பத்துல நாலு மாசம் வீட்ல தெரியாது. அவங்க பெயிண்டர் வேலைக்குப் போறேன்னுதான் நினைச்சிட்டு இருந்தாங்க. என் கூட வேலை பார்த்த ஒரு பையன் போன் பண்ண, தவறுதலா எங்க வீட்டம்மா எடுக்க, அவங்களுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சு.

கந்தன்
கந்தன்

தொடக்கத்தில் வராத சிலைகளும் விடாத முயற்சியும்

அவங்க பெயிண்ட் அடிக்கிற வேலையே வேணாம், நாலு காசு கிடைக்க மாட்டேங்குதுன்னுதான் சொல்லுவாங்க. இந்த வேலைன்னு தெரிஞ்சதும், சுத்தம் வேணாம்னுதான் சொன்னாங்க. சுத்தி இருந்த ஒரு சிலரும் ரோட்டோரத்துல கடை வச்சிருக்கன்னுலாம் பேசுனாங்க.

அதெல்லாம் எனக்குப் பெருசா தெரியல. நான் என்னோட வேலையைத் தொடர்ந்து செஞ்சேன். ஆரம்பத்துல மூணு மாசம் பெருசா சிலைகள் எதுவும் வரல. அடுத்தடுத்த மாசம் கொஞ்சம் கொஞ்சமா வர ஆரம்பிச்சிது. இந்தப் பதிமூணு வருசத்துல அஞ்சு அடியிலிருந்து பத்து அடி வரைக்கும் ஐயாயிரத்துக்கும் அதிகமான சிலைகளுக்குப் புது உருவம் கொடுத்திருக்கேன். 2,500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும் இருக்காங்க" எனும்போதே அவரின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது.

கந்தன்
கந்தன்

நினைவுச் சின்னமும்! பழைமையின் அருமையும்!

"வர வாடிக்கையாளர்கள் எல்லாருமே ஒரு தலைமுறை, ரெண்டு தலைமுறையின்னு தலைமுறை தலைமுறையா வச்சி வழிபடுற சிலைகள், நினைவுச் சின்னங்களைத்தான் பெரும்பாலும் எடுத்துட்டு வராங்களே. அதைச் சரி பண்ணிக் கொடுக்கும்போது அவங்க முகத்துல வர சந்தோசம்தான் என்னோட உழைப்புக்குக் கிடைக்கிற மிகப்பெரிய மதிப்பே. இருக்கிறவங்க கேட்கிறதைக் கொடுப்பாங்க. இல்லாதவங்க கொடுக்கிறதை வாங்கிப்பேன்.

இந்தக் காலத்துல பெரும்பாலும் ஒண்ணு ஒடஞ்சா உடனே தூக்கிப் போட்டுட்டு புதுசு வாங்குறாங்க. ஆனால், ஒடஞ்ச சிலையைத் தூக்கிப் போட்டுட்டு புதுசு வாங்குனா செலவுதான் இரண்டு மடங்காகும். அந்தக் காலத்துல உள்ள மாதிரி டிசைன் கிடைச்சாலும் அதே தரத்துல இப்போலான் கிடைக்குறது இல்ல. எங்களைப் போல கலைஞர்கள்கிட்ட கொடுத்துச் சரி பண்ணும்போது உங்களுக்கு விலையும் கம்மி, அதே தரத்தோடவும் கிடைக்கும்" என்றார்.

புத்துயிர் பெற்ற சிலைகள்
புத்துயிர் பெற்ற சிலைகள்

அடையாளமே சிம்மாசனம்

"நூறு ரூபாய் கொடுத்தாலும், கோடி ரூபாய் கொடுத்தாலும், யாரு முன்னாடி வராங்களோ, அவங்களுக்கு முதல்ல செஞ்சிக் கொடுப்பேன். நிறைய பேர் வீட்ல வந்து ரெடி பண்ணித் தரலாம்னு சொல்லுவாங்க. பெரிய சிலையா இருந்தா போய்ச் செஞ்சிக் கொடுப்பேன். மத்தபடி எல்லாமே இங்கேயேதான். இப்ப எங்க வீட்டுலகூட வாடகைக்குக் கடை புடிச்சுத் தரேன், கடையில வச்சுப் பண்ணுன்னு சொன்னாங்க. நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன்.

எனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த இடம்தான். இந்த இடத்துலேயே கடைசி வரைக்கும் சிலைகளை ஒட்டி, பெயிண்ட் அடிச்சுக் கொடுத்துட்டு இருக்குறது மட்டுமில்லாம, என்னுடைய பசங்களுக்கும் இதைச் சொல்லிக் கொடுத்து அடுத்த தலைமுறைக்கும் கொண்டு போகணும்" என்றபடியே மீண்டும் வர்ணம் பூசும் வேலையைத் தொடங்கினார்.!

வெடியை மறந்த கிராமம்: பறவைகளுக்காக 50 ஆண்டு தியாகம் - இனிப்பு கொடுத்து வனத்துறை நெகிழ்ச்சி!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ளது கொல்லுக்குடிப்பட்டி கிராமம். இங்குள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து சுமார் 25 ஆயிரத... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த 2 பவுன் நகை; காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசுப் பள்ளி மாணவனுக்குப் குவியும் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பிடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 13). இவர் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.2 பவுன் தங்க நகைகள்மாணவன... மேலும் பார்க்க

ஒதுக்கிய சமூகம்; விடாத சுயமரியாதை; உழைப்பை ஆயுதமாக்கிப் போராடும் திருநங்கை ஸ்மிதா

சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ போராடும் திருநங்கை ஸ்மிதா அவர்களிடம் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினோம்.."என்னோட சொந்த ஊரு மதுரை பக்கத்துல உசிலம்பட்டி. எனக்கு அப்பா அம்மான்னு யாரும் இல்லை. நான் திண்டுகல்'ல உ... மேலும் பார்க்க

குப்பையோடு போன 5½ பவுன் செயின்: தேடி எடுத்துக் கொடுத்த தூய்மை தேவதைகள்! - திருச்சி நெகிழ்ச்சி

திருச்சியில் இன்று 70 வயது மூதாட்டி குப்பையில் தவறவிட்ட 5 1/2 பவுன் நகையை, தூய்மைப் பணியாளர்கள் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த சம்பவம், நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீரங்கம் சித்திரை வீதியைச் சேர்ந... மேலும் பார்க்க

எழுத்துகளின் நண்பன்! - பழைய பேனாக்களுக்குப் புத்துயிர் தரும் மதுரை தாத்தா

மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி அம்மன் கோயில் அருகே, நவீன் பேக்கரி பக்கத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பேனா விற்பனை செய்து வருகிறார் எட்டாம் வகுப்பு வரை படித்த சீனிவாசன் தாத்தா. சிறிய அளவில் தொடங... மேலும் பார்க்க

₹250 கடனுக்காகக் கொத்தடிமை... இன்று ஆயிரக்கணக்கானோரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் அலமேலு!

ஒரு காலத்தில் ₹250 கடனுக்காகத் தம்பியுடன் கொத்தடிமையாக வேலை செய்த சிறுமி... இன்று ஆயிரக்கணக்கான குழந்தைகளையும் பெண்களையும் மீட்டு, அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். தான் அனுபவித்த... மேலும் பார்க்க