செய்திகள் :

பஞ்சாப்: வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி; ஆம் ஆத்மியிலிருந்து விலகியவுடன் பாஜகவில் இணைந்த 3 MLAக்கள்!

post image

பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. தற்போது அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இத்தேர்தலுக்காக 40 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

இந்தப் பட்டியல் கட்சி நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து நேற்று ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக இரண்டு எம்.எல்.ஏ.க்கள் அறிவித்தனர். ஆம் ஆத்மி அரசு பஞ்சாப் போதைப்பொருள் பழக்கம், மாநிலத்தின் கடன் பிரச்னைக்குத் தீர்வு காண தவறிவிட்டதாக இரண்டு பேரும் குற்றம் சாட்டி இருந்தனர்.

இன்று காலை முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான எம்.எல்.ஏ விஜய் பிரதாப் சிங் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் ஆம் ஆத்மி கட்சி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்து இருக்கிறது.

இந்நிலையில் இன்று அமிர்தசரஸ் வடக்கு தொகுதி எம்எல்ஏ குன்வர் விஜய் பிரதாப் சிங், ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய சமனாவைச் சேர்ந்த சேத்தன் சிங் ஜூரமஜ்ரா, பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள சனூரில் இருந்து ஹர்மீத் சிங் பதான்மஜ்ரா ஆகியோர் டெல்லியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்திற்குச் சென்று தங்களை முறைப்படி பா.ஜ.கவில் இணைத்துக்கொண்டனர்.

அவர்கள் பா.ஜ.க-வில் இணைந்தது ஆம் ஆத்மி கட்சிக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. மூன்று பேரின் பதவியைப் பறிக்கும்படி சபாநாயகருக்குப் பரிந்துரைக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் குல்தீப் சிங் கூறுகையில்,''பா.ஜ.க ஒரு பழைய இரும்புக்கடை. நிராகரிக்கப்படும் தலைவர்களைத் தங்களது கட்சியில் சேர்த்துக்கொண்டிருக்கிறது''என்று தெரிவித்தார்.

'பால் விலையை ரூ.5 உயர்த்த திட்டமா?; ஆவின் நிறுவன பரிந்துரையை அரசு ஏற்கக் கூடாது'- அன்புமணி ராமதாஸ்

"ஆவின் நிறுவனத்துக்கும் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும். பால் விலையை உயர்த்த வேண்டும் என்ற ஆவின் நிறுவன பரிந்துரையை ஏற்கக் கூடாது ” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மேலு... மேலும் பார்க்க

திமுக முன்னாள் MLA இராமச்சந்திரன் மரணம்: "அரசியல்வாதிகளுக்கு பாடமாக இருந்தார்" - பகிரும் நிர்வாகிகள்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.இராமச்சந்திரன் வயது 80. இவரது மனைவி பூமணி. இவர்களுக்கு திருந்தையன், அபிராமி என இரு பிள்ளைகள் இருவருமே டாக்டர். முன்னாள் தி... மேலும் பார்க்க

`வாரத்துக்கு ஒருநாள் வேட்டி சட்டை' - தவெக அரசின் முடிவை விமர்சிக்கும் சிபிஎம்! - என்ன காரணம்?

சென்னை எழும்​பூரில் உள்ள அரசு அருங்காட்​சி​யகத்​தில் தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்தித் துறை சார்​பில் தமிழ்​நாடு நாள் விழா நேற்று நடைபெற்​றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன்,... மேலும் பார்க்க

தீபாவளியை ஜொலிக்கவைக்கும் GRT ஜுவல்லர்ஸ் - தங்கத்துக்கு வெள்ளி இலவசம் மற்றும் பல சலுகைகள்!

ஐஸ்வர்யம், சந்தோஷம் மற்றும் ஒளியின் அடையாளமாகத் திகழும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, GRT ஜுவல்லர்ஸ் வழங்குகிறது "தங்க தீபாவளி". கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி, குடும்பத்தினருடன் இணைந்திருக்கும் அ... மேலும் பார்க்க

``சட்டம் ஒழுங்கு பிரச்னையைப் போராட்டம் மூலம் ஊதிப் பெரிதாகக் காட்டுகிறார்கள்" - அமைச்சர் வன்னி அரசு

அரசுக் கல்லூரி மாணவர்கள், ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் மாநில உரிமைப் பாதுகாப்பு ஆகிய அனைத்துத் தளங்களிலும் இந்த அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்... மேலும் பார்க்க

’அம்பாசமுத்திரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியா?’ - மு.வீரபாண்டியன் சொல்வது என்ன?

கோவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசு கூடுதல் போக்சோ நீதிமன்றங்களை ஏற்படுத்தியது வரவேற்கத்தக்கது. பெண்க... மேலும் பார்க்க