செய்திகள் :

’அம்பாசமுத்திரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியா?’ - மு.வீரபாண்டியன் சொல்வது என்ன?

post image

கோவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழக அரசு கூடுதல் போக்சோ நீதிமன்றங்களை ஏற்படுத்தியது வரவேற்கத்தக்கது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்து சுதந்திரம் இந்தியாவில் இருப்பது போல எங்கும் இல்லை என்பதால், அரசை விமர்சிப்பவர்கள் கைது என்பது இருக்கக் கூடாது.

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. மாநில அரசு தனது அதிகாரத்திற்கு உட்பட்ட உணவுப் பொருட்கள் விலை ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பண்டிகை நாட்களில் பேருந்து கட்டணம் தொடர்பாக அரசு கவனம் செலுத்த வேண்டும். வருகிற 10ஆம் மார்ச் 3ஆம் தேதி சி.பி.ஐ, சி.பி.எம், சி.பி.எம்.எல் ஆகிய கட்சிகள் இணைந்து திருச்சியில் உழைக்கும் மக்களை இணைத்து பெரும் பேரணியை முன்னெடுக்க உள்ளோம்.

அம்பாசமுத்திரம் தொகுதி கம்யூனிஸ்ட் ஆதரவு மிகுந்த தொகுதி. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிப்போம். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் குறித்து கம்யூனிஸ்ட் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்பவர்கள், திருச்சியில் மார்ச் 3ஆம் தேதி பார்ப்பார்கள். அனைத்து தளங்களிலும் எங்களுக்கு வாக்குகள் உள்ளன.

தேர்தல் செலவை அரசே ஏற்கும் நிலை வரும்போது நிலைமை மாறும். ஆட்சிக்கான ஆதரவு என்பது மக்கள் தீர்ப்புக்கு மரியாதை அளிப்பது, தனித்துப் போட்டி என்பது வேறு. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அது குறித்த நிலைப்பாடு தெரிவிக்கப்படும்.

மு.வீரபாண்டியன்
மு.வீரபாண்டியன்

டிவிகே அரசு கார்ப்பரேட் நலன் சார்ந்த அரசாக மாறிவிடக்கூடாது. மத்திய, அரசுடன் நிர்வாக இணக்கம் என்பது சரிதான் என்றாலும், மத்திய அரசைக் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் தமிழக முதல்வர் கண்டிக்காமல் இருந்தது தவறு. கண் முன்னால் நடைபெறும் தவறுகளைச் சுட்டிக்காட்டி கேள்வி கேட்க வேண்டும் இந்திய அரசு செல்வந்தர்களுக்கான அரசாக உள்ள நிலையில், தமிழக அரசு எளிய மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும். அரசை விமர்சிப்பவர்கள் யார் என்ற பார்வை இல்லாமல் எளியவர்கள் மீதும் பார்வை இருக்க வேண்டும்.

நாங்கள் வீழ்ந்தால் அயல்நாட்டவர் கொண்டாட வேண்டும், ஆனால் அண்டை வீட்டார் கொண்டாடுகிறார்கள். கம்யூனிஸ்டுகள் எப்போதுமே வன்மத்துடன் ஒரு வார்த்தையைக் கூட பேச மாட்டோம். பெண்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் வரும் கருத்துக்களைப் பார்க்கும்போது அந்தந்தக் கட்சியின் தலைவர்கள் வெட்கப்பட வேண்டும், விமர்சனங்கள் பெண்கள் சார்ந்து வைக்கப்படும்போது கட்சியின் தலைவர்கள் அவற்றைக் கண்டிக்க வேண்டும். இன்று வாக்களிக்காதவர்கள் எங்களுக்கு நாளை வாக்களிப்பார்கள். இன்னும் மக்களை நாங்கள் நெருங்கிச் செல்லவில்லை என்பது எங்கள் பிழைதான். வாக்கு சீட்டு நடைமுறை மீண்டும் வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பஞ்சாப்: வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி; ஆம் ஆத்மியிலிருந்து விலகியவுடன் பாஜகவில் இணைந்த 3 MLAக்கள்!

பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. தற்போது அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இத்தேர்தலுக்காக 40 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்... மேலும் பார்க்க

`வாரத்துக்கு ஒருநாள் வேட்டி சட்டை' - தவெக அரசின் முடிவை விமர்சிக்கும் சிபிஎம்! - என்ன காரணம்?

சென்னை எழும்​பூரில் உள்ள அரசு அருங்காட்​சி​யகத்​தில் தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்தித் துறை சார்​பில் தமிழ்​நாடு நாள் விழா நேற்று நடைபெற்​றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன்,... மேலும் பார்க்க

தீபாவளியை ஜொலிக்கவைக்கும் GRT ஜுவல்லர்ஸ் - தங்கத்துக்கு வெள்ளி இலவசம் மற்றும் பல சலுகைகள்!

ஐஸ்வர்யம், சந்தோஷம் மற்றும் ஒளியின் அடையாளமாகத் திகழும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, GRT ஜுவல்லர்ஸ் வழங்குகிறது "தங்க தீபாவளி". கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி, குடும்பத்தினருடன் இணைந்திருக்கும் அ... மேலும் பார்க்க

``சட்டம் ஒழுங்கு பிரச்னையைப் போராட்டம் மூலம் ஊதிப் பெரிதாகக் காட்டுகிறார்கள்" - அமைச்சர் வன்னி அரசு

அரசுக் கல்லூரி மாணவர்கள், ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் மாநில உரிமைப் பாதுகாப்பு ஆகிய அனைத்துத் தளங்களிலும் இந்த அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்... மேலும் பார்க்க

"குடிநீர், கழிவறைகூட இல்லை!" - முதல்வர் விஜய்யைச் சந்திக்க வந்த கே.எம்.செரீப் பூட்டி வைப்பு

புதுக்கோட்டை தவெக கூட்டணிக் கட்சி வேட்பாளர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முதல்வரைச் சந்திக்கத் தடை. கலெக்டர் அலுவலக அறைக்குள் வைத்து பூட்டிய அதிகாரிகள்.புதுக்கோட்டையில் இன்று பல்வேறு அரசு நலத்திட்டத்... மேலும் பார்க்க

"தவெக அரசின் அலட்சியத்தால் கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன" - ஸ்டாலின் குற்றச்சாட்டு

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில், கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளதாக முன்னாள் நிதியமை... மேலும் பார்க்க