செய்திகள் :

2027-ல் 200-க்கும் மேற்பட்ட AI நிறுவனங்களுக்கு ஆபத்து? எச்சரிக்கும் எலான் மஸ்க்

post image

2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏ.ஐ.யின் வளர்ச்சியும் தாக்கமும் அதிகமாக இருந்தது.

ஆனால், பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, ஏ.ஐ.யின் ஆதிக்கம் உலகச் சந்தைகளில் இருந்து குறைந்து, போரின் தாக்கங்கள் தென்பட்டன… இன்னமும் தென்பட்டு வருகின்றன.

ஆனால், கடந்த சில நாள்களாக, ஏ.ஐ. சந்தை சரிவைச் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க-கனடா தொழிலதிபர் சாமத் பாலிஹாபிட்டியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவை க்ரோக்-ன் உரிமையாளர் எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.

சாமத் பாலிஹாபிட்டியா
சாமத் பாலிஹாபிட்டியா

சாமத் பாலிஹாபிட்டியாவின் பதிவு:

“மின்சார வசதியுடன் கூடிய டேட்டா சென்டர் நிலங்களை வைத்திருப்பவர் என்ற முறையில், தற்போதைய AI மற்றும் கிளவுட் சந்தையை ஆராயும்போது சில முக்கியமான சிக்கல்களும் வாய்ப்புகளும் தெரிகின்றன.

நியோகிளவுட்கள்: சிறிய கிளவுட் நிறுவனங்களிடம் போதுமான நிதியும் சரியான திட்டமிடலும் இல்லை. இதைத் தாண்டி, சில நிறுவனங்கள் மட்டும் இதில் சிறப்பாகச் செயல்படுகின்றன.

(நியோகிளவுட்கள் என்பவை அமேசான் (AWS), மைக்ரோசாஃப்ட் (Azure), கூகுள் (Google Cloud) போன்ற பாரம்பர்ய ஹைப்பர்ஸ்கேலர்களை விட முற்றிலும் வேறுபட்டு, குறிப்பிட்ட சிறப்புத் தேவைகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட புதிய தலைமுறை கிளவுட் சேவை நிறுவனங்கள் ஆகும்.)

ஹைப்பர்ஸ்கேலர்கள்: இவை அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளுடனும், மெதுவாகவும் இயங்குகின்றன. ஒரு சிறிய ஒப்பந்தத்திற்கே 3 மாதங்கள் வரை எடுத்துக்கொள்கின்றன.

எங்களைப் போன்ற சுறுசுறுப்பான நிறுவனங்கள் விரைவாகச் செயல்பட்டு இடங்களைக் கைப்பற்றுவது, எதிர்காலத்தில் பெரிய போட்டியாக மாறும்.

திட்டங்களில் தாமதம்: ஏற்கெனவே தொடங்கி நிலுவையில் இருக்கும் டேட்டா சென்டர் திட்டங்கள் தாமதமாவதால், 2027-ஆம் ஆண்டில் மிகப்பெரிய நெருக்கடி உருவாகும்.

திட்டங்கள் தாமதமாகும்போது, பெரிய கிளவுட் நிறுவனங்கள் தங்களுக்கு வரும் கணினித் திறனைத் தங்களது சொந்தத் தேவைகளுக்கே முதலில் பயன்படுத்திக்கொள்வார்கள்.

பிற ஏ.ஐ. மாடல் நிறுவனங்களுக்குத் தர மறுப்பார்கள் அல்லது தங்களிடமே பிற ஏ.ஐ. மாடல் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை வரவழைத்து அதிகக் கட்டணத்தை வசூலிப்பார்கள்.

Artificial Intelligence
செயற்கை நுண்ணறிவு (AI)

2027-ஆம் ஆண்டில்…

2027-ஆம் ஆண்டில், நாம் நினைப்பதை விட மிக அதிக அளவிலான கணினித் திறன்கள் (GPUs / Data Center Power) பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும்.

பல கோடிகள் செலவழித்து வாங்கப்பட்ட தொழில்நுட்பக் கருவிகள், தங்களுக்கு ஆன முதலீட்டுச் செலவை விடக் குறைந்த வருமானத்தையே தரும் அல்லது பயன்பாடின்றித் தூசி படிந்து கிடக்கும்.

சந்தையில் உள்ள ஒரே ஒரு முன்னணி நிறுவனத்தைத் தவிர, மற்ற அனைத்து AI நிறுவனங்கள், ஹைப்பர்ஸ்கேலர்கள் மற்றும் நியோகிளவுட்களுக்கு இது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.

இதில் யாருக்கு லாபம்?

இந்தக் குழப்பத்திலும் நெருக்கடியிலும் 2 அமைப்புகளுக்கு மட்டுமே மிகப்பெரிய வெற்றி…

1. தேவையில்லாத சட்டத் தடைகள் இல்லாமல், வேகமாக உள்கட்டமைப்பை உருவாக்கக் கூடிய பெரிய நிறுவனங்கள்,

2. அவர்களுக்குத் தேவையான நிதி மற்றும் நில வசதிகளை உடனுக்குடன் தந்து உதவும் சுறுசுறுப்பான பின்னணி நிறுவனங்கள்.”

எலான் மஸ்க் பதிவு

இந்தப் பதிவைப் பகிர்ந்து எலான் மஸ்க், “கடந்த சில வாரங்களாக, ஏ.ஐ. டேட்டா சென்டர்களைத் தவிர்த்து, சொந்தமாக நிலையான வருமானம் இல்லாத நிறுவனங்களுக்குக் கடன் கொடுக்க வங்கிகளும் நிதி நிறுவனங்களும் மறுத்து வருகின்றன.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏ.ஐ. கணினித் திறனுக்காக (GPUs) $40 பில்லியன் டாலர் மிகப்பெரிய கடனை மிக எளிதாகப் பெற்றுவிட்டது. காரணம், கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு ஸ்டார்லிங்க் இணைய சேவை மற்றும் விண்கல ஏவுதல் மூலம் ஏற்கனவே நிலையான, வலுவான வருமானம் வருகிறது என்பதைக் காட்டினோம்.

ஆனால், எந்தவொரு சொந்த வருமானமும் இல்லாமல் வெறும் ஏ.ஐ. அலை மற்றும் GPU-க்களை மட்டும் நம்பி உருவான 200-க்கும் மேற்பட்ட நியோகிளவுட் நிறுவனங்கள் கடன் கிடைக்காமல் மிகக் கடுமையான நெருக்கடியைச் சந்திக்கப் போகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.

இதனால், 2027-ஆம் ஆண்டு ஏ.ஐ. தொழில்நுட்பமும், ஏ.ஐ. சந்தையும் சிறிய சறுக்கலைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

ரூ.3 லட்சம் போன்… சில நாள்களிலேயே திரையில் விரிசல்! iPhone Duo-வுக்கு என்ன ஆச்சு?

மடிப்புப் பகுதியில் கோளாறா? புகார்கள் எதிரொலி… பாதிக்கப்பட்ட போன்களை மாற்றித் தரும் Apple!ரூ.3 லட்சத்துக்கும் மேல் கொடுத்து வாங்கிய புதிய போன். பயன்படுத்தத் தொடங்கிய சில நாள்களிலேயே திரையில் விரிசல் ஏ... மேலும் பார்க்க

Microsoft: 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம்! ஏன் இந்த முடிவு? இந்தியாவில் எத்தனை பேர்?

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், உலகளவில் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பணியிலிருந்து வெளியேறும் திட்டத்தை அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்... மேலும் பார்க்க

“Good science should end up in a glass of water!” - INTERVIEW WITH PROF. THALAPPIL PRADEEP

New Member of the VinFuture Prize CouncilVinFuture Special Prize Laureate 2022Prof. Thalappil Pradeep of IIT Madras has spent three decades turning nanoscience into something people can drink. His low... மேலும் பார்க்க

பழைய பொருட்களைத் தூக்கி எறியும் காலம் முடியப்போகிறது! – வணிகத்தில் AI-ன் அடுத்தகட்டப் பாய்ச்சல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

“10 கிராம் மண் வேணும்” – ஏன்? செவ்வாயின் நிலவுக்கு உலகின் முதல் ஆய்வுப் பயணத்தைத் தொடங்கிய ஜப்பான்!

ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான JAXA தலைமையில் உருவாக்கப்பட்ட ‘MMX’ (Martian Moons Exploration) விண்கலம், அக்டோபர் 20-ம் தேதி அதிகாலையில் தனேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து H3 ராக்கெட் மூலம் விண்ணில... மேலும் பார்க்க

Apple-ன் ரேர் மாஸ்டர்பீஸ்… கோடிகளில் விலை பேசும் 50 ஆண்டு பழைமை!

Hatfield Apple-1, ஆப்பிள் நிறுவனத்தின் ஆரம்ப காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட தனித்துவமான டெஸ்க்டாப் கணினி (Desktop Computer), இன்று தொழில்நுட்ப வரலாற்றில் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது.... மேலும் பார்க்க