செய்திகள் :

குப்பையோடு போன 5½ பவுன் செயின்: தேடி எடுத்துக் கொடுத்த தூய்மை தேவதைகள்! - திருச்சி நெகிழ்ச்சி

post image

திருச்சியில் இன்று 70 வயது மூதாட்டி குப்பையில் தவறவிட்ட 5 1/2 பவுன் நகையை, தூய்மைப் பணியாளர்கள் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த சம்பவம், நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் சித்திரை வீதியைச் சேர்ந்த சுசீலா என்பவர், வீட்டில் இருக்கும் பெருமாள் படத்திற்கு பூ மாலைகளுடன் தங்கச் செயினையும் போட்டு அலங்கரித்து வைத்திருந்திருக்கிறார். இன்று அவரின் கணவர் பூக்களுடன் நகையையும் தவறுதலாக குப்பையோடு சேர்த்து வீட்டிற்கு வெளியே வைத்துள்ளார். அவற்றை தூய்மைப் பணியாளர்கள் சேகரித்துச் சென்றுள்ளனர். பிறகு தான் அவர்களுக்கு அதில் நகை இருந்தது தெரியவந்துள்ளது. தவித்துக் கொண்டிருந்த மூதாட்டி, தூய்மைப் பணியாளர்களிடம் நடந்ததைச் சொல்லிய பிறகு அவர்கள், நகையைத் தேடிக் கண்டுபிடித்து தந்துள்ளனர்.

இது குறித்து நகையை மீட்டுக் கொடுத்த தூய்மைப் பணியாளர்கள் திவ்யபாரதி மற்றும் பரமேஸ்வரி ஆகியோர் கூறுகையில், "வழக்கம்போல ஒவ்வொரு வீட்டுக்கும் வெளியே உள்ள குப்பையைச் சேகரித்து கொட்டிவிட்டு வரும்போதுதான் அவர்கள் நகை இருந்ததை எங்களிடம் சொன்னார்கள். அவரின் கணவர் மாலையுடன் செயினையும் தெரியாமல் தவற விட்டுள்ளார். திரும்ப நாங்கள் சென்று, குப்பையைக் கிளறிப் பார்த்து செயினைக் கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைத்தோம்" என்றனர்.

இடத்தை மட்டுமல்ல மனதையும் தூய்மையாக வைத்திருக்கும் தூய்மை தேவதைகளின் இந்தச் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எழுத்துகளின் நண்பன்! - பழைய பேனாக்களுக்குப் புத்துயிர் தரும் மதுரை தாத்தா

மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி அம்மன் கோயில் அருகே, நவீன் பேக்கரி பக்கத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பேனா விற்பனை செய்து வருகிறார் எட்டாம் வகுப்பு வரை படித்த சீனிவாசன் தாத்தா. சிறிய அளவில் தொடங... மேலும் பார்க்க

₹250 கடனுக்காகக் கொத்தடிமை... இன்று ஆயிரக்கணக்கானோரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் அலமேலு!

ஒரு காலத்தில் ₹250 கடனுக்காகத் தம்பியுடன் கொத்தடிமையாக வேலை செய்த சிறுமி... இன்று ஆயிரக்கணக்கான குழந்தைகளையும் பெண்களையும் மீட்டு, அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். தான் அனுபவித்த... மேலும் பார்க்க

“Hello Girls; “LM-ஓ AM-ஓ இல்லை”: ஆங்கிலம், செந்தமிழில் கலக்கும் 80 வயது வியாபாரி நாகப்பன் தாத்தா!

டஎன்னதான் ஆங்கிலத்தை அலசி ஆராய்ந்து படித்தும், பேசும்போது தடுமாறுபவர்கள் இங்கு நிறைய பேர். அப்படியே ஆங்கிலத்தை பேசினாலும் பிறகு தமிழ் பேசும்போது அயல் மொழியை கலந்து தமிழை தள்ளாட விடுவார்கள். ஆனால் 11 ஆ... மேலும் பார்க்க

50 ஆண்டு சம்பளத்தை புத்தகங்களுக்கே செலவிட்ட நடத்துனர்: 20 லட்சம் நூல்களுடன் இலவச நூலகம்!

2026 ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ விருது' பெற்ற 75 வயதான அங்கே கௌடாவின் கதை அமைதியான ,அதே சமயம் அசாதாரணமான சான்றாகத் தனித்து நிற்கிறது. கர்நாடகாவின் கிராமப்புறத்தில் ஒரு எளிய தொடக்கத்திலிருந்து, இந்தியாவின் மி... மேலும் பார்க்க

”உன்னோட கஷ்டத்தை நான் போக்குறேன்னு சொன்னான்; இன்னைக்கு அவனே இல்ல” - ஒற்றை மகனை இழந்த தாயின் கண்ணீர்!

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள நாகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி வீரலட்சுமி. வீரலட்சுமி, 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, கந்தசாமி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். ... மேலும் பார்க்க

"பார்வையற்றவர்களின் கனவில் என்ன தெரியும?" - பார்வைசவாலை வென்று RJ-வாக கலக்கும் சண்முகவேல்

“கண்களால் பார்க்க முடியலன்னா என்ன… நம்மால முடியாதுனு நாமளே நினைக்கக்கூடாது!”இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் 50 வயது சண்முகவேலின் வாழ்க்கை இருக்கிறது. பிறந்தது முதலே பார்வையில்லை. ஆனால், அந்தப் பார்வைய... மேலும் பார்க்க