செய்திகள் :

`பலரும் விமர்சனம் செய்த என் செய்தி வாசிப்புதான் முதல்வர் முன் நிற்க வைத்தது!' - 'பாலிமர்' ரஞ்சித்

post image

'பார்ப்பதற்கு அப்பாவி போலிருக்கும் இவர்தான்..'

- டிவியில் இந்த வார்தைகளைக் கேட்டாலே இப்போதெல்லாம் எந்த வேலையிலிருந்தாலும் ஒரு நிமிடம் டிவி முன் ஓடி வந்து விடுகின்றனர் பலரும். இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் ரஞ்சித்.

கடந்த வாரம் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்ட குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவைத் தொகுத்து வழங்கிய ரஞ்சித், அரசு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது இது இரண்டாவது முறை என்கிறார்.

முதன்முதலாக கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

''பள்ளிக்கூடத்துல படிக்கிறப்ப அசெம்ப்ளியில செய்தி வாசிக்கறதுல ஆரம்பிச்சது செய்திக்கும் எனக்குமான தொடர்பு. உடனெ ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குற பையன்னு நினைச்சுடாதீங்க. செய்தி வாசிச்ச அளவுக்கு புத்தகத்தை வாசிச்சது கிடையாது. அதனால் பிளஸ் டூவுல ஒரு பாடத்துல ஃபெயில். இதுக்கு மேல அந்தக் கதைக்குள் போக வேண்டாம்னு நினைக்கிறேன்.

படிச்சு முடிச்சதும் பல இடங்கள்ல வேலை பாத்திருக்கேன். ஆனாலும் டிவி அதுலயும் செய்தி மேல ஒரு கண் இருந்துட்டே இருந்தது. சன் டிவியில ஆடிஷன்னு தெரிஞ்ச ஒருத்தர் சொல்லி போனேன். வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டா செலக்ட் பண்ணினாங்க.

பொதுவா எனக்கு ஒரு பழக்கம் இருக்கு. எந்தவொரு நிகழ்ச்சி எங்க நடந்தாலும் போயிடுவேன். தொடர்புகளை வளர்க்கணும்கிறதுல பெரிய ஆர்வம். அந்த தொடர்புகளே அடுத்தடுத்த வாய்ப்புகளை உருவாக்குச்சு. சன் டிவியில இருந்து பாலிமர் டிவிக்கு வந்தேன்.

'பாலிமர்' ரஞ்சித்

அங்க எனக்கு கிடைச்ச சுதந்திரம் ரொம்ப பெரிசு. பொதுவா சேனல்கள்ல செய்தி வாசிப்பு ஃப்ளாட்டா வாசிச்சா போதும்னுதான் நினைப்பாங்க. அந்த மீட்டரைத் தாண்டி ஏத்தியோ இறக்கியோ வாசிக்க முடியாது. ஆனா எனக்கு அந்தக் கட்டுப்பாடு இல்லை. நான் சில மாடுலேஷன்கள்ல வாசிச்சப்ப 'வித்தியாசமா இருக்கே'னு அதை அனுமதிச்சாங்க.

இன்னைக்கு நீங்க பாக்குற செய்தித் தொகுப்புகள் அப்படி ஆரம்பிச்சதுதான். ஒருகட்டத்துல அந்த செய்திகள் நல்ல வரவேற்பைப் பெறவே, அதையே ஃபாலோ செய்யச் சொல்லிட்டாங்க" என்றவரிடம்,

`செய்தின்னா ஒரு சீரியஸ் இருக்க வேண்டாமா, உங்க செய்தி வாசிப்பு சமயங்கள்ள ட்ரோல் ஆகுதே' என்ற கேள்வியை வைத்தோம்.

''சீரியஸ் செய்தின்னா ஓ.கே. அதை வாசிக்கிறப்ப அதுக்கு ஏத்த மாதிரி மாடுலேஷன்லதான் இருக்கும். அதுல கவனமா இருப்போம். அதேநேரம் சில செய்தியே கொஞ்சம் ஃபன்னா இருக்குமில்லையா, அந்த மாதிரியான செய்திகளை வாசிக்கிறப்பதான் இன்ட்ரஸ்ட்டைக் கூட்டி கூடுதலா கொஞ்சம் ஃபன் டோன் சேர்க்கறோம்.

அந்த மாதிரியான செய்திகளை ட்ரோல் மெட்டீரியல் ஆக்கிடுறாங்க சிலர். ஆனாலும் செய்தி ரீச் ஆகிடுதில்லையா... அது போதும்ல எங்களுக்கு.

CM Vijay
CM Vijay

ஆனா இந்த துறையில முன்னோடியா இருந்த சில செய்தி வாசிப்பாளர்கள் நான் செய்தி வாசிக்கும் முறையை விமர்சனமும் செய்தார்கள். 'இதெல்லாம் நல்லாவா இருக்கு' என்பதுதான் அவர்களுடைய கருத்து.

ஆனா செய்தி போக வேண்டியவங்களுக்குப் போய்ச் சேர்ந்தா போதும்கிறதுதான் என்னுடைய நோக்கம்'' என்றவர், அரசு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது குறித்து,

``பொதுவா தொகுப்பாளர்களுக்குத்தான் நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிற வாய்ப்புகள் அமையும். நான் செய்தி வாசிப்பாளர். ஆனா என்னுடைய செய்தி வாசிப்புதான் அரிய இந்த வாய்ப்புகளை வாங்கித் தந்ததுனு உரக்கச் சொல்வேன்.

முதலமைச்சர் கலந்து கொள்கிற மேடையில பங்கேற்கிற வாய்ப்புங்கிறது சாதாரணமில்லை. நம்பிக்கை வச்சு கூப்பிட்டாங்க. முழு உழைப்பைப் போட்டேன். நிகழ்ச்சி முடிஞ்சதும் அதுக்கான பாராட்டும் கிடைச்சது" என்கிறார்.

"இப்படியான ஒரு டிவி நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை!"-'மாஸ்டர் செஃப்' குறித்து சமந்தா

தமிழில் புதிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலாக, 'சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா' நிறுவனத்தின், 'சோனி விழா' அக்டோபர் 19 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டது. இதில் பிரபலமான 'செலிப்ரிட்டி மாஸ்டர் செஃப... மேலும் பார்க்க

BB Tamil 10: கடவுள் பாதி, மிருகம் பாதி ஜேசன்; வாசன் செய்த சம்பவம்! - 6வது வார ஹைலைட்ஸ்!

‘ஒண்ணுமே தெரியாதவனும் கிடையாது, எல்லாம் தெரிஞ்சவனும் கிடையாது’ என்கிற பழமொழி மீண்டுமொருமுறை நிரூபணமாகிறது. வாசனின் இந்த வெற்றி ‘ஒன் டைம் வொண்டரா?’ அல்லது மேலும் தொடருமா?ஒரேயொரு டாஸ்க்கில் வென்றவருக்கு... மேலும் பார்க்க

BB Tamil 10: ஷமாவைக் காப்பாற்ற முயல்கிறதா, பிக் பாஸ் டீம்? பிக் பாஸில் இந்தவாரம் என்ன நடந்தது?

செலிபிரிட்டி போட்டியாளர்களை விடவும் காமன்மேனிலிருந்து வந்தவர்கள் கலக்குகிறார்கள் என்று ஒவ்வொரு வாரமும் சொல்ல வேண்டிய அளவிற்கு அது தொடர்கிறது. ஷமாவைத் தொடர்ந்து ‘எவிக்ஷன் ஃப்ரீ பாஸை’ ஜேசன் வென்றிருக்கி... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 10: எவிக்‌ஷனில் அரங்கேறிய கடைசி நேர ட்விஸ்ட்... நடந்தது என்ன?

முதல் நாளிலேயே எவிக்‌ஷன், எவிக்‌ஷனில் சென்றவர்கள் ரீ எண்ட்ரி, ஏகப்பட்ட வைல்டு கார்டு எண்ட்ரி என விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.முன்னதாக 19 போட்டியாளர்களுடன் கட... மேலும் பார்க்க

Bigg Boss 10: மூன்று Tier-ல் சம்பளம்... யாருக்கு எவ்வளவு தெரியுமா?!

விஜய் டிவியில் ஒரு மாதத்தைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 10. நிகழ்ச்சியின் பத்தாவதாண்டு என்பதால் எவிக்ஷன், வைல்டு கார்டு என்ட்ரி எதையெடுத்தாலும் டபுள், ட்ரிபுள் என நிக... மேலும் பார்க்க

BB Tamil 10: அலைப்பறை செய்த ஜோடி; சிக்ஸர் அடிக்கும் முனியம்மாள் - 4வது வாரம் எப்படி? | சுரேஷ் கண்ணன்

அதிக அளவிலான எவிக்ஷன்களும் அதிக அளவிலான வைல்ட் கார்ட் என்ட்ரிகளும் கொண்ட சீசனாக இது இருக்கும் போல தெரிகிறது. என்ன குறளி வித்தையாவது காட்டி சீசனை உசுப்பேற்ற முயல்கிறார்கள். ஏதாவதொரு மாற்றத்தை செய்து கொ... மேலும் பார்க்க