Power Up: அஜித் குமார் ரேசிங் உடன் கூட்டணி! 9 புதிய பிஸ்கட் வகைகளை அறிமுகப்படுத்...
₹1 கோடி இலக்கு: 2027 முதல் நீங்கள் அடைவதற்கான செயல்முறை வழிகள் என்னென்ன?
38 வயதாகும் கார்த்திக், சென்னையில் ஒரு IT நிறுவனத்தில் மேலாளர். கண்ணாடி முன்னாடி நின்று தலைமுடியைச் சீவும்போது எட்டிப்பார்க்கும் நரை, "அப்பா, எனக்கு புது ஐபோன் வேணும்" என்று கேட்கும் மகனின் குரல், கூடவே "இன்னும் ஒரு கோடி கூட சேர்க்கலையே..." என்று உள்ளுக்குள் ஓடும் ஒரு மெல்லிய பயம்.
35-லிருந்து 45 வயதில் இருக்கும் நம் எல்லாருக்குமே இந்த உணர்வு ஏதோ ஒரு இரவில் வந்திருக்கும்.
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை 'ஒரு கோடி' என்பது பெரிய விஷயமா தெரிஞ்சிருக்கலாம். ஆனா இன்னைக்கு இருக்கிற விலைவாசியில், நாற்பதைத் தாண்டிய ஒரு குடும்பத்துக்கு அது பெரிய ஆடம்பரம் இல்லை; நம்ம குடும்பத்துக்கான ஒரு நிம்மதியான பாதுகாப்பு வலை, அவ்வளவுதான்.
அதை அடைகிற வழிகளை ஒன்றன் பின் ஒன்றாக எப்படிச் செய்யப்போறோம் என்பதைப் பார்க்கலாம்.
1. மாதம் ஒரு தொகை... கூடவே கொஞ்சம் வேகம்
பெரிய கோபுரம் கட்ட முதல்ல அஸ்திவாரம் வேணும். அதுதான் நம்ம மாதாந்திர முதலீடு.
2027 ஜனவரியிலிருந்து மாதம் ₹20,000 சேமிக்கத் தொடங்குங்க. 12% லாபம் தந்தா கூட, 15 வருஷத்தில் ஒரு கோடி வந்துடும். ஆனா, 40 வயசுல நமக்கு 15 வருஷம் காத்துக்கிட்டு இருக்க நேரம் இல்லையே!
அதனால் ஒரு சின்ன ட்ரிக்: வருஷம் தோறும் சம்பளம் உயரும்போது, இந்த ₹20,000 முதலீட்டையும் ஒரு 10% கூட்டுங்க. அதாவது அடுத்த வருஷம் ₹22,000. இப்படிச் செஞ்சா 10 வருஷத்திலேயே அந்த ஒரு கோடியைத் தொட்டுடலாம்.
2. சம்பளத்தைத் தாண்டிய ஒரு சின்ன வருமானம்
ஒரே மரத்தை நம்பித் தோட்டம் போட முடியாது.
உங்களுக்கு 15-20 வருஷ அனுபவம் இருந்தால், அதை வச்சு கன்சல்டிங், ஃப்ரீலேன்சிங் அல்லது கோச்சிங் மூலமா மாதம் ஒரு ₹20,000 கூடுதல் வருமானம் பார்க்க முடியுமானு பாருங்க.
முக்கியமான விஷயம், அந்தப் பணத்துல புது காரோ ஃபோனோ வாங்கக் கூடாது. அதை அப்படியே உங்க முதல் படி முதலீட்டுக்குள் கொண்டு வரணும். உங்க மெயின் சம்பளம் குடும்பத்தைக் காப்பாற்றும்; இந்த ரெண்டாவது வருமானம் உங்களை வேகமா கோடீஸ்வரர் ஆக்கும்.
3. உங்கள் உழைப்பை ஒரு அமைப்பாக மாற்றுவது
நீங்களே இறங்கி உழைக்கிற வரைக்கும் அந்தக் கூடுதல் வருமானத்துக்கு ஒரு எல்லை இருக்கும். அதனால, நீங்க பண்ணின அந்தச் சின்ன வேலையை, 2-3 பேரை வச்சு ஒரு சின்ன ஏஜென்சி மாதிரி மாத்துங்க.
நீங்க நேரடியாக இறங்கி வேலை செய்யலைனாலும், அந்தச் சின்ன பிசினஸ் உங்களுக்கு மாதம் ஒரு ₹50,000 லாபம் தரத் தொடங்கும். இது உங்க பணத்தைச் சேர்க்கும் வேகத்தை மூணு மடங்கு அதிகமாக்கும்.
4. நிலத்தில் போடும் முதலீடு
பங்குச் சந்தை, பிசினஸ்னு பணம் வரத் தொடங்கும் போது, அதை ஒரு நிலையான சொத்தா மாத்தணும்.
நீங்க இருக்குற வீட்டிற்கு 30 வருஷம் தவணை (EMI) கட்டுவது முதலீடு கிடையாது. ஆனா, வளரும் புறநகர்ப் பகுதிகளில் நல்ல மனைகளில் (Plots) போடும் பணம், 10 வருஷத்தில் பல மடங்கு உயரும். பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களில் இருந்து உங்க பணத்தைக் காப்பாற்ற இது ஒரு நல்ல பாதுகாப்பு.
5. பணத்தைச் சிதறவிடாமல் காப்பது
கடைசி விஷயம், கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இழக்காமல் இருக்கிறது. 65% பணத்தை நல்ல மியூச்சுவல் ஃபண்டுகளிலும், 35% பணத்தை EPF/PPF மற்றும் நிலத்திலும் பிரிச்சு வையுங்க.
மியூச்சுவல் ஃபண்ட் பணத்தை வளர்க்கும்; EPF/PPF சந்தை சரிவடையும் போது உங்க பணத்தைப் பாதுகாக்கும்.
நாம செய்யக்கூடாத சில தவறுகள்:
வளர்ச்சிக்கு ஏற்ற செலவு (Lifestyle Inflation): சம்பளம் ₹75,000-லிருந்து ₹1.5 லட்சமாக உயரும்போது, உடனே ₹10 லட்சத்திற்கு புது கார் வாங்கினா பணம் சேராது.
பணவீக்கம்: இன்னைக்கு இருக்குற ₹1 கோடி, 10-15 வருஷம் கழிச்சு அதே மதிப்புடன் இருக்காது. அதனால் ₹1 கோடி என்பது உங்க பயணத்தின் முதல் மைல்கல் மட்டுமே!
வரி கணக்கு: பங்கு சார்ந்த முதலீடுகளில், லாபத்தில் ₹1.25 லட்சத்திற்கு மேல 12.5% வரி கட்ட வேண்டி வரும், அதையும் மனசில் வச்சுக்கணும்.
இறுதியாக...
"கையில் முதல் ஒரு கோடியைச் சேர்ப்பதுதான் கஷ்டம். ஏன்னா அதுவரைக்கும் நீங்க உழைக்கிறீங்க. ஆனா அந்த ஒரு கோடி சேர்ந்த பிறகு, உங்க பணமே உங்களுக்காக உழைக்கத் தொடங்கிடும்!"
35-45 வயதுங்கிறது பயப்பட வேண்டிய காலம் இல்லை; நம்ம அனுபவமும் உழைப்பும் உச்சத்தில் இருக்குற காலம். 2027 ஜனவரியிலிருந்து இந்த வழியை ஒழுங்கா பின்பற்றினா, 50-வது பிறந்தநாளை ஒரு கோடீஸ்வரரா கொண்டாடலாம்!

நீங்க ₹1 கோடி சேர்க்கணுமா?
முதலீடு மூலம் உங்களின் ₹1 கோடி கனவை நனவாக்குவது எப்படி? 2027 ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அதற்கான வேலைகளைத் தொடங்குங்கள்! உங்களுக்கென்று ஓர் நிதி அத்தியாயத்தை உருவாக்க அக்டோபர் 04, 2026, புதன் மாலை 7 மணிக்கு நடைபெறும் 'லாபம்' வழங்கும் நிதி வழிகாட்டல் ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்!
100 பேருக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு செய்ய:https://labham.money/events/webinar-nov04-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_nov04_2026




















