செய்திகள் :

"'Take Diversion!' முதலீட்டைத் தாரை வார்கிறது தவெக" - 'திருமலை' பட காமெடியை வைத்து இபிஎஸ் விமர்சனம்

post image

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில் தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கி இருப்பதையும், கொரியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குப் பதிலாக ஆந்திராவில் 1,614 கோடி ரூபாய் முதலீடு செய்ததையும் விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தமிழகத்தின் அக்டோபர் மாத GST வருவாய் வளர்ச்சி வெறும் 3%-ஆக, தேசியச் சராசரியை விட மிகக் குறைவாக இருப்பதாக வரும் செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது.

ஒருபுறம், தமிழகத்தின் விலைவாசி உயர்வு தேசிய சராசரியை விட அதிகமாகி, மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

மறுபுறம், நமக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்குச் சென்றுக் கொண்டிருக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இன்று கூட, 3 தென்கொரிய நிறுவனங்கள் தங்கள் 1614 கோடி ரூபாய் முதலீட்டை தமிழ்நாட்டை நிராகரித்துவிட்டு ஆந்திர மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன.

திருமலை படத்தில், நடிகர் விஜய் “Take Diversion“ என்று நடிகர் விவேக்கை திருப்பதியில் இறக்கி விடுவதைப் போல, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில்களை எல்லாம் “Take Diversion” என்று ஆந்திர மாநிலத்திற்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது இன்றைய தவெக அரசு.

தொழில் வளம் பெருகி, பல வேலைவாய்ப்புகள் வந்து, அதனால் GDP முன்னேறி, Per Capita Income உயர்ந்தால் தானே, GST வருவாய் அதிகரிக்கும்?

தொழில் வளம் எல்லாம் மற்ற மாநிலங்களிடம் தாரை வார்த்துவிட்டு, மக்களுக்கு “Purchasing Power” இல்லாமல் போனால் எப்படி GST வருவாய் உயரும்?

இதையெல்லாம் சொல்லிப் புரிய வைக்கும் ஆட்சியா இன்றைக்கு இருக்கிறது? இந்த லட்சணத்தைச் சுட்டிக் காட்டினால் இன்றைய ஆட்சியாளர்களுக்குக் கோபம் வேறு வருகிறது.

தமிழ்நாட்டின் எதிர்கால தொழில்வளத்தைக் கட்டமைக்க மாண்புமிகு அம்மா அவர்கள் துவக்கிய @Guidance_TN அமைப்பைக் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி இருக்கிறது இன்றைய ஆச்சரியக்குறி அரசு. குரங்கின் கையில் கிடைத்த பூமாலைப் போல இந்தக் கூட்டத்திடம் தமிழகத்தில் நிர்வாகம் மாட்டிக் கொண்டு படும் பாடு, வரலாற்றுச் சோகம்!

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தேர்வுக்கு ஒரு வார்த்தை கூட படிக்காமல், இவ்வளவு ஏன், என்ன Subject என்றே தெரியாமல், தேர்வு நாள் அன்று Question Paper-ஐ பார்த்தால் பதில் வந்துவிடுமா? உங்களுக்குத்தான் கேள்வியே என்னவென்று தெரியாதே..!!

அதேபோல், எந்தத் துறை பற்றியும் தெரியாமல், நிர்வாகம் பற்றி கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல், ரீல்ஸ் காண்பித்து முதல்வராகி விட்டால் மட்டும் எல்லாம் தானாக நடந்துவிடுமா முதலமைச்சர் அவர்களே?

தமிழ்நாட்டிற்கென்று ஒரு வளர்ச்சிப் பாதையைக் கஷ்டப்பட்டு கட்டமைத்து, அந்த வளமான பாதையில் பயணிக்கச் செய்திருக்கிறோம். அதைப் பாழாக்கி விடாதீர்கள்" என்று தவெக அரசை விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Vijay: 'அடிக்கல் நாட்டு விழா முதல் திறப்பு விழா வரை' - முதல்வர் விஜய் புதுக்கோட்டை விசிட்! | Photos

"தவெக அரசின் அலட்சியத்தால் கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன" - ஸ்டாலின் குற்றச்சாட்டு மேலும் பார்க்க

ஓட்டுநர், நடத்துநர் கைகளைப் பிடித்து ரிப்பன் வெட்டிய முதல்வர் விஜய்; புதுக்கோட்டையில் சுவாரஸ்யம்!

தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் புதுக்கோட்டையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தைத் திறந்து வைப்பது, உள் விளையாட்டரங்கத்தைத் திறந்து வைப்பது மற்றும் அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிக... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலையில் தவெக அமைச்சரின் காரை மறித்த போராட்டக்காரர்கள்; பரபரப்புக்குள்ளான வேலூர்

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி அருகேயுள்ள நடப்பாறை பகுதியில், 1981-ம் ஆண்டு வீட்டுவசதி வாரியத்துக்காக 485 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அதில், எந்தவிதமான பணிகளும் மேற்கொ... மேலும் பார்க்க

'10 கோடி நிலமோசடி... முதல்வருக்கு மனு' - தவெக வேட்பாளரை அடைத்து வைத்ததன் பின்னணி என்ன?

நலத்திட்டங்கள் வழங்கும் விழாவுக்காக முதல்வர் விஜய் இன்று புதுக்கோட்டை சென்றிருந்தார். அங்கே முதல்வரிடம் மனு கொடுக்க வந்திருந்த புதுக்கோட்டை தவெக வேட்பாளர் கே.எம்.சரீப்பை காவல்துறையினர் தடுத்து ஒரு அறை... மேலும் பார்க்க

"பாசிசத்திற்கு அப்படி ஒரு ராஜவிசுவாசம்" - 'இந்தியா' கூட்டணி பேரணியில் பங்கேறாத தவெகவைச் சாடிய ஆ.ராசா

டெல்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நேற்று நடந்த இந்தியா கூட்டணி பேரணியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், பரூக்... மேலும் பார்க்க