செய்திகள் :

வங்கியில் ரூ.36 கோடி பணம், தங்கம் கொள்ளை; 17 கிமீ விரட்டிச்சென்று கொள்ளையர்களைப் பிடித்த மக்கள்

post image

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் அருகில் உள்ள போகர் என்ற கிராமத்தில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குள் மாலை 2.45 மணிக்கு ஹெல்மெட் அணிந்த நான்கு கொள்ளையர்கள் திடீரென நுழைந்தனர்.

அவர்கள் நுழைந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் யாரும் வங்கியில் இல்லை. 4 பேரும் தங்களிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துக்காட்டி வங்கி ஊழியர்களை மிரட்டினர். அந்நேரம் கேசியர் எச்சரிக்கை அலாரத்தை அழுத்தினார்.

இதனால் கோபம் அடைந்த கொள்ளையர்கள் கேசியரிடம் சென்று அலாரத்தை அணைக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் அலாரத்தை அணைக்க மறுத்தார். இதனால் கேசியரை மரக்கட்டையால் அடித்தனர். அதனைத் தொடர்ந்து வங்கி மேலாளரிடம் பணம் மற்றும் நகைகள் இருக்கும் அறையின் சாவியைக் கொடுக்கும்படி கேட்டனர்.

மேலும் வங்கி ஊழியர்கள் 4 பேரையும் வாயில் டேப் ஒட்டி கை, கால்களைக் கட்டி தரையில் அமர வைத்தனர். இதற்கு வங்கி ஊழியர்கள் ஒத்துழைக்காததால் அவர்களை அடித்து உதைத்தனர்.

வங்கி மேலாளர் மற்றும் கேசியரை கட்டாயப்படுத்தி நகை மற்றும் பணம் இருந்த அறைக்குள் கொள்ளையர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் பாதுகாப்பு பெட்டகத்தைத் திறக்க மறுத்தனர். இதனால் வேறு ஒரு ஊழியரை அழைத்து வந்து பாதுகாப்பு பெட்டகத்தைத் திறக்க செய்தனர். உள்ளே இருந்த 12 லட்சம் பணம் மற்றும் பொதுமக்கள் அடமானம் வைத்திருந்த தங்க நகைகளை பேக்கில் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர். தங்க நகைகள் மொத்தம் 27 கிலோ இருந்தது. பணம் மற்றும் தங்க நகைகளின் மொத்த மதிப்பு ரூ.36 கோடியாகும்.

கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்துடன் பைக்கில் தப்பிச்சென்றனர். அதற்குள் கிராம மக்களுக்கு தகவல் கிடைத்து அவர்கள் ஒன்று திரண்டனர். கொள்ளையர்களை பொதுமக்களும், உள்ளூர் போலீஸ் உதவியாளரும் சேர்ந்து வாகனங்களில் விரட்டி சென்றனர். கிராம சாலை மிகவும் மோசமாக இருந்ததால் கொள்ளையர்களால் வேகமாகத் தப்பிச்செல்ல முடியவில்லை. கொள்ளையர்களை பொதுமக்கள் 17 கிலோமீட்டர் தூரத்திற்கு விரட்டிச்சென்று அவர்களைப் பிடித்தனர்.

அவர்களிடம் இருந்த நகை மற்றும் பணம் முழுமையாகப் பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு கொள்ளையர்களையும் பிடித்து பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டவர்களில், பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் அடங்கும். இவர் இதே போன்றதொரு வங்கி கொள்ளை வழக்கில் சமீபத்தில்தான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

கொள்ளை
கொள்ளை

இது குறித்து ஜல்காவ் தாலுகா இன்ஸ்பெக்டர் சஷிகாந்த் பாட்டீல் கூறுகையில், “ராய்காட் மாவட்டக் காவல்துறையில் பணியாற்றிய சங்கர் ஜசாக், முன்னதாக ஜல்காவ் மாவட்டத்தில் பணம் மற்றும் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் சில மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார். இவர்கள் நால்வருமே குற்றப் பின்னணி கொண்ட, தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் ஆவர்” என்று தெரிவித்தார்.

ஜெம் வீரமணி வழக்கு: எத்தனை பேர் கைது? அடையாள அணிவகுப்பு, LoC நோட்டீஸ் - காவல்துறையின் முழு விளக்கம்

சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்குகளில் ஜெம் வீரமணி உள்ளிட்டவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. யார் யார் கைது? "சென்னை பெருநக... மேலும் பார்க்க

ஆந்திரா: பள்ளிக்குள் புகுந்து மாணவிகள் மீது தாக்குதல்: துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்த போலீஸ்!

நேற்று முன்தினம் (அக்டோபர் 31) ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராப்தாடு ஜே.பி. உயர்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.ஆசிரியர் பாடம் எடுத்த... மேலும் பார்க்க

IVF: `சட்டவிரோதமாக பெண்களின் கருமுட்டையை பிரித்தெடுத்த கும்பல்' - 8 பேர் கைது; 43 பெண்கள் மீட்பு!

ஹைதராபாத்தின் பிரகாஷ் நகர், எர்ரகட்டா, கோபாலபுரம் ஆகிய இடங்களில் மல்காஜ்கிரி கமிஷனரேட்டின் சிறப்பு நடவடிக்கைக் குழு (SOT) மற்றும் உள்ளூர் காவல்துறை இணைந்து கருத்தரிப்பு மையங்களில் சோதனை நடத்தினர். அப்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம் வந்தவரிடம் 900 மதுபாட்டில்கள் பறிமுதல்!

தூத்துக்குடி, லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர், லெவிஞ்சிபுரத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், இவரது வீட்டில் 1,000 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த... மேலும் பார்க்க

ரூ.3 லட்சம் கடனால் நெருக்கடி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்!

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்ஙனாச்சேரி எஸ்.பி. கல்லூரி அருகே கரிங்கடயில் பகுதியில் வசித்து வந்தவர் ஸாஜூ (64). இவரது மனைவி அனு (59). இவர்களுக்கு சவின் (33) என்ற மகன் இருந்தார். வழக்கமாக காலையில்... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்கில் விசிக முன்னாள் நிர்வாகி படுகொலை; தூத்துக்குடியில் பதற்றம்... போலீஸார் குவிப்பு!

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலாளர். மேலும் இந்த பகுதியில் காய்கற... மேலும் பார்க்க