புதுச்சேரியில் கல்லறை திருநாள்: கல்லறை தோட்டங்களில் கிறிஸ்துவர்கள் சிறப்பு வழிபா...
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: "வேலை நிறுத்தம் செய்ய மூளை சலவை செய்கின்றனர்" - அமைச்சர் விக்னேஷ்
டாஸ்மாக் கடைகளில் திரும்பப்பெறப்படும் காலி மதுபாட்டில்களுக்கு ரூ.10 திரும்பக் கொடுக்கும் நடைமுறை நேற்று (நவ.1) அமலுக்கு வந்தது. ஆனால், டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த உத்தரவை ஏற்க மறுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், "20 வருடமாக டாஸ்மாக் ஊழியர்கள் பழக்கப்படுத்தி ரூ.10 கூடுதலாக வாங்க வைத்துள்ளனர். அதை உடனடியாக நிறுத்தும் போது அவர்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாகத் தனியாக வாங்குகிறார்கள், அதை எம்.ஆர்.பியில் சேர்த்தால் அந்த 10 ரூபாய் அரசு கஜானாவில் சேர்ந்துவிடும்.

அதற்காக இந்த முயற்சியைச் செய்கிறோம். கடந்த திமுக ஆட்சியில் 99.9 சதவீதம் காலி பாட்டில்களைத் திரும்ப வாங்கிவிட்டோம் என நீதிமன்றத்தில் அறிக்கை சமர்த்திருக்கிறார்கள். ஆனால், 50 சதவீதம் பாட்டில்தான் திரும்ப வந்திருக்கிறது. இதுதான் கடந்த ஆட்சியாளர்கள் செய்த மிகப்பெரிய ஊழல்.
இதைத் தடுக்கத்தான் நாங்கள் முயற்சித்து வருகிறோம். ஆனால் நாங்கள் என்ன நோக்கத்துடன் கொண்டு வருகிறோம் என்பதை புரியாமல் விமர்சனம் செய்வதுதான் கஷ்டமாக இருக்கிறது.
நமது அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.14,000 சம்பளத்தில் இருந்து ரூ.33,000 வரைக்கும் கொண்டு வந்திருக்கிறோம். யூன்பார்ம், வார விடுமுறை, மாதம் இரண்டு நாள் விடுமுறை கொடுக்கிறோம். மெடிக்கல் இன்சூரன்ஸ், லோன் கொடுக்கிறோம். இவ்வளவு செய்தும் நாங்கள் செய்யும் முயற்சிகளுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இத்துறையில் கூடுதல் பணியாளர்கள் விரைவில் பணி அமர்த்தப்படுவார்கள். தனியாருக்கு மதுக்கடைகள் கொடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். டாஸ்மாக் துறையைக் கண்ணியமான துறையாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யாமல் பணிக்குத் திரும்ப வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பெரிய குழுவினர் மூளை சலவை செய்து வேலை நிறுத்தம் செய்யத் தூண்டுகின்றனர்" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb














