செய்திகள் :

``இந்த வாதத்தை ஏற்க முடியாது' ; கே.என் நேரு மீது FIR பதிவு செய்ய தடையில்லை' - உச்ச நீதிமன்றம் அதிரடி

post image

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் வேலை வாய்ப்பு முறைகேடு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த உத்தரவின் மூலம், அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான தடைகள் நீங்கியுள்ளன.

நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அமலாக்கத்துறை பகிர்ந்து கொண்ட ஆதாரங்களின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் நேரு(அப்போது அவர் அமைச்சர்) மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி நேரு தாக்கல் செய்த மனுவையும் அக்டோபர் 26-ஆம் தேதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த இரண்டு உத்தரவுகளிலும் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, உச்ச நீதிமன்ற அமர்வு நேருவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இருப்பினும், "இந்த வழக்கின் தீர்வுக்குத் தேவையான வரையில் மட்டுமே உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் கருதப்பட வேண்டும். இந்த கருத்துகள், உரிய சட்டரீதியான நடைமுறைகளின்போது மனுதாரர் தனது தரப்பு வாதங்களை முன்வைப்பதற்கு எந்த வகையிலும் தடையாக இருக்காது," என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

முன்னாள் அமைச்சர் நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், "இந்த வழக்கில் தனது தரப்பு வாதங்களைக் கேட்காமலேயே உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது அடிப்படை சட்ட விதிகளுக்கு முரணானது. ஒருவேளை, நீதிமன்றம் வெறுமனே விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தால் கூட அதை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், எங்கள் தரப்புக்கு நோட்டீஸ் முறையாக வழங்கப்படாத நிலையில், எங்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை நீதிமன்றம் பதிவு செய்துள்ளது," என்று வாதிட்டார்.

மேலும், வழக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்ட நாளில்தான் நோட்டீஸ் கைக்கு கிடைத்தது, எனவே பதிலளிக்க போதுமான அவகாசம் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கே.என் நேரு

ஆனால், இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் நீங்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று சுட்டிக்காட்டினர். உயர் நீதிமன்றம் எந்தவிதமான தீர்ப்பையும் வழங்கவில்லை, பதிவில் இருந்த அவதானிப்புகளை மட்டும் பதிவு செய்துள்ளது என்றும் நீதிபதி தத்தா குறிப்பிட்டார்.

மேலும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் பதிவு செய்யப்பட்ட மூலக் குற்றம் தொடர்பான வழக்கு ரத்து செய்யப்பட்ட பிறகு, அமலாக்கத்துறையால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை மாநில காவல்துறையுடன் பகிர்ந்து கொள்ள முடியாது என்றும் ஷியாம் திவான் வாதிட்டார். ஆனால், இந்த வாதங்களையும் உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கவில்லை.

வழக்கின் பின்னணி:

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடுகள் நடந்ததாகவும், இதற்காக சுமார் ₹634 கோடி வரை கையூட்டு பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை திரட்டிய ஆதாரங்களை, கடந்த அக்டோபர் 2025-ல் தமிழக டிஜிபி-க்கு அனுப்பி, அமைச்சர் மற்றும் தொடர்புடையவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கோரியது. அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பத்துரை மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தனர். அமலாக்கத்துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சர் நேரு மீது FIR பதிவு செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

`இப்படிச் சொல்வது கூட தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாகிவிடுமா?' - சட்டம் சொல்வது என்ன? - 8

சட்டம் உங்கள் கையில்!“நீயெல்லாம் இன்னும் எதுக்கு உயிரோட இருக்க?” என்று கோபத்திலோ, விளையாட்டாகவோ யாரிடமாவது சொல்லியிருக்கலாம். ஆனால், இப்படிச் சொல்வதெல்லாம் தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாகிவிடுமா? ஒருவர... மேலும் பார்க்க

``பிரேக்அப் ஆனதும், சம்மத உறவுக்கு பாலியல் வன்கொடுமை முத்திரை குத்தாதீர்கள்" - சுப்ரீம் கோர்ட்

காதல் உறவு கசக்கும்போது ஆண்களுக்கு எதிராக பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் கொடுப்பது சில நேரங்களில் நடக்கிறது. இதனால் ஆண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் சம்பவங்களும் நடக்கிறது. இருவரும் உ... மேலும் பார்க்க

`வீட்டு உரிமையாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்பு என்ன?' - சட்டம் சொல்வது என்ன? - 8

"சட்டம் சொல்வது என்ன?" 6-வது பகுதியில், வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்களின் உரிமைகள் என்னவென்று எழுதியிருந்தோம். இந்தப் பகுதியில், வீட்டின் உரிமையாளருக்கான சட்டவிதிகள் என்ன சொல்கின்றன என்பதைப் பார... மேலும் பார்க்க

குடும்ப வன்முறை: அடிப்பது மட்டும்தான் வன்முறையா? சட்ட பாதுகாப்பும், உதவியும்! சட்டம் சொல்வது என்ன?-7

குடும்பம் என்றால் அன்பும் அரவணைப்பும் இருக்க வேண்டும். ஆனால், சில வீடுகளுக்குள் அன்புக்குப் பதிலாக அவமானங்களும், அரவணைப்புக்குப் பதிலாக அடிகளும், ஆறுதலுக்குப் பதிலாகக் கண்ணீரும்தான் மிஞ்சுகின்றன. வெளி... மேலும் பார்க்க

வாடகை வீட்டில் இருக்கிறீர்களா? உரிமையாளர் – வாடகைதாரர் உரிமைகள் என்ன? சட்டம் சொல்வது என்ன? - 6

“அடுத்த மாசத்துக்குள்ள வீட்டைக் காலி பண்ணிடுங்க!”வீட்டு உரிமையாளர் இப்படிச் சொல்லிவிட்டால், ஏற்கெனவே கொடுத்த முன்பணத்தைத் திரும்பப் பெறுவது முதல் அடுத்த வீட்டைத் தேடுவது வரை பல குழப்பங்கள் ஏற்படும். த... மேலும் பார்க்க

போலீஸ் கிட்ட இருந்து `ஆஜராகச் சொல்லி' நோட்டீஸ் வந்தால், பயப்படாதீங்க.! | சட்டம் சொல்வது என்ன? - 5

“போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து உங்களை விசாரிக்க வரச் சொல்லி நோட்டீஸ் வந்திருக்கு…”இந்த ஒரு வார்த்தையே பலரையும் பதற வைக்கும். “என்னை அரெஸ்ட் பண்ணப் போறாங்களா?”, “போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாமா?”, “வக்கீலைக் கூ... மேலும் பார்க்க