செய்திகள் :

`பள்ளியில் சிக்கன் பிரியாணி: அதுவரைஅசைவம் சாப்பிடுவதில்லை என அமைச்சர் ராஜ்மோகன் முடிவு' - லயோலா மணி!

post image

அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிகளிலேயே சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் வரை தாம் அசைவ உணவை உட்கொள்ளப் போவதில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உறுதியேற்றுள்ளதாகத் லயோலா மணி தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் ராஜ் மோகன், லயோலா மணி, இயக்குநர் விக்ரமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டர். அப்போது பேசிய பள்ளி பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி, ``திரைப்பட இயக்குநர் விக்ரமன், அரசுப் பள்ளிகளில் வாரந்தோறும் மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

விஜய் ராஜ் மோகன்
விஜய் ராஜ் மோகன்

இந்த மேடையில் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அசைவ உணவை விரும்பிச் சாப்பிடக்கூடியவர். இருப்பினும், அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டத்தைக் தளபதி தலைவர் எந்நாளில் முறைப்படி தொடங்கி வைக்கிறாரோ, அதுவரை தாம் அசைவ உணவைத் தொடப் போவதில்லை என்ற தீவிர முடிவில் இருக்கிறார். தற்போது வரை அவர் சைவ உணவை மட்டுமே உட்கொண்டு வருகிறார்." எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"குடிநீர், கழிவறைகூட இல்லை!" - முதல்வர் விஜய்யைச் சந்திக்க வந்த கே.எம்.செரீப் பூட்டி வைப்பு

புதுக்கோட்டை தவெக கூட்டணிக் கட்சி வேட்பாளர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முதல்வரைச் சந்திக்கத் தடை. கலெக்டர் அலுவலக அறைக்குள் வைத்து பூட்டிய அதிகாரிகள்.புதுக்கோட்டையில் இன்று பல்வேறு அரசு நலத்திட்டத்... மேலும் பார்க்க

"தவெக அரசின் அலட்சியத்தால் கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன" - ஸ்டாலின் குற்றச்சாட்டு

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில், கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளதாக முன்னாள் நிதியமை... மேலும் பார்க்க

'விஜய் அண்ணா, நீங்கதான் என் பிள்ளையைக் காப்பாத்தனும்.!' - தாயின் கண்ணீர் போராட்டம்

புதுக்கோட்டையில் இன்று புதிய பேருந்து நிலையம் மற்றும் உள் விளையாட்டரங்கத்தைத் திறந்து வைப்பதற்காகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும் வருகை தந்த தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யைச் சந்தி... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: "வேலை நிறுத்தம் செய்ய மூளை சலவை செய்கின்றனர்" - அமைச்சர் விக்னேஷ்

டாஸ்மாக் கடைகளில் திரும்பப்பெறப்படும் காலி மதுபாட்டில்களுக்கு ரூ.10 திரும்பக் கொடுக்கும் நடைமுறை நேற்று (நவ.1) அமலுக்கு வந்தது. ஆனால், டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த உத்தரவை ஏற்க மறுத்து தமிழகம் முழுவதும... மேலும் பார்க்க

"அரசுப் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது ஏன்?" - தவெக அரசுக்கு சீமான் கேள்வி

அரசுப் பணிகளில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்... மேலும் பார்க்க

சிறைவாசி பெட்ரோல் பங்க்: ``தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்?" - எஸ்.ரகுபதி

``சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையங்களை மூடிவிட்டு தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்? என திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்... மேலும் பார்க்க