செய்திகள் :

ஜெம் வீரமணி வழக்கு: எத்தனை பேர் கைது? அடையாள அணிவகுப்பு, LoC நோட்டீஸ் - காவல்துறையின் முழு விளக்கம்

post image

சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்குகளில் ஜெம் வீரமணி உள்ளிட்டவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

யார் யார் கைது?

"சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சாரத் தடுப்புப் பிரிவில், சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகளில் தொடர்புடைய எதிரிகள்

1) வீரமணி,

2) சாந்தி,

3) மகேந்திர சிம்ஹன்,

4) லாசர்,

5) கணேசன்,

6) பாபு,

7) பார்த்திபன் மற்றும்

8) சக்திவேல் ஆகிய 8 நபர்கள் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அறிக்கை
அறிக்கை

சம்பிரதாயக் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்து அதன் பேரில் பதிவு செய்திருந்த எட்டு வழக்குகளில்,

மூன்று வழக்குகளில் வீரமணியும் மேலும் ஒரு வழக்கில் சாந்தி, மகேந்திர சிம்ஹன் மற்றும் லாசர் ஆகியோர் 28.10.2026-ம் தேதி அன்று சம்பிரதாயக் கைது (Formal Arrest) செய்யப்பட்டு சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அடையாள அணிவகுப்பு

ஏற்கெனவே, ஜெம் வீரமணி மீது எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், குற்ற வழக்கு எண்-11/2026-ல் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் எதிரியை அடையாளம் காட்ட அடையாள அணிவகுப்பு புழல் மத்திய சிறையில் நடைபெற்றது.

மேலும், இந்த வழக்குகள் தொடர்பாக எதிரி கணேசன் என்பவருடைய சென்னை, கொளத்தூரில் உள்ள வீடு மற்றும் நீலாங்கரையில் நடத்தி வந்த எதிரி சாந்தியின் நாட்டியப் பள்ளியிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வழக்கு தொடர்பான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது
கைது

லுக் அவுட் நோட்டீஸ்

வீரமணி மீதான வழக்குகளில் தொடர்புடைய எதிரிகள் அயல்நாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க Look Out Circular (LOC) Notice வழங்கப்பட்டுள்ளது.

வீரமணி தனது குற்றங்களை மறைக்க முயற்சித்தபோது அவருக்கு உதவிய பிரகாஷ் என்பவர் வெளிநாட்டிற்குத் தப்பி ஓடியுள்ளதால் அவருடைய Passport-ஐ முடக்கி அவரை வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் விரைவில் புலன் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது". எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா: பள்ளிக்குள் புகுந்து மாணவிகள் மீது தாக்குதல்: துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்த போலீஸ்!

நேற்று முன்தினம் (அக்டோபர் 31) ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராப்தாடு ஜே.பி. உயர்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.ஆசிரியர் பாடம் எடுத்த... மேலும் பார்க்க

IVF: `சட்டவிரோதமாக பெண்களின் கருமுட்டையை பிரித்தெடுத்த கும்பல்' - 8 பேர் கைது; 43 பெண்கள் மீட்பு!

ஹைதராபாத்தின் பிரகாஷ் நகர், எர்ரகட்டா, கோபாலபுரம் ஆகிய இடங்களில் மல்காஜ்கிரி கமிஷனரேட்டின் சிறப்பு நடவடிக்கைக் குழு (SOT) மற்றும் உள்ளூர் காவல்துறை இணைந்து கருத்தரிப்பு மையங்களில் சோதனை நடத்தினர். அப்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம் வந்தவரிடம் 900 மதுபாட்டில்கள் பறிமுதல்!

தூத்துக்குடி, லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர், லெவிஞ்சிபுரத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், இவரது வீட்டில் 1,000 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த... மேலும் பார்க்க

ரூ.3 லட்சம் கடனால் நெருக்கடி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்!

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்ஙனாச்சேரி எஸ்.பி. கல்லூரி அருகே கரிங்கடயில் பகுதியில் வசித்து வந்தவர் ஸாஜூ (64). இவரது மனைவி அனு (59). இவர்களுக்கு சவின் (33) என்ற மகன் இருந்தார். வழக்கமாக காலையில்... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்கில் விசிக முன்னாள் நிர்வாகி படுகொலை; தூத்துக்குடியில் பதற்றம்... போலீஸார் குவிப்பு!

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலாளர். மேலும் இந்த பகுதியில் காய்கற... மேலும் பார்க்க

மது போதையில் போலீஸாரை தாக்கிய போதை கும்பல்; சிகிச்சையிலிருந்த ஊர்காவல் படை வீரர் உயிரிழப்பு!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் காவல் நிலையத்தில், ராஜாகண்ணு போலீஸாகவும், வெங்கடேசன் (47) ஊர்க்காவல் படை வீரராகவும் பணி புரிந்தனர். இருவரும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம... மேலும் பார்க்க