செய்திகள் :

மகாராஷ்டிராவில் கடும் வறட்சி: தமிழகத்திற்கு படையெடுத்த கரும்புவெட்டும் தொழிலாளர்கள்

post image

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு போதிய அளவு பருவ மழை பெய்யவில்லை. எனவே மாநிலத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளை மாநில அரசு வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து இருக்கிறது. வழக்கமாக மகாராஷ்டிராவின் மராத்வாடாவில் உள்ள பீட் மாவட்டத்தை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் மேற்கு மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் கரும்பு வெட்டுவதற்காக செல்வது வழக்கம். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை சொந்த ஊரில் தீபாவளியை கொண்டாடிவிட்டு செல்வதுதான் வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு மகாராஷ்டிராவில் போதிய அளவு மழை பெய்யாததால் கரும்பு விளைச்சல் குறைந்துவிட்டது. அதேசமயம் இந்த ஆண்டு தமிழகத்தில் கரும்பு முன்கூட்டியே அறுவடைக்கு தயாராகிவிட்டது. இதையடுத்து பீட் மாவட்டத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் தமிழகத்திற்கு இப்போதே குடியெயர ஆரம்பித்துள்ளனர்.

அவர்களில் சிலர் தங்களது குழந்தைகளையும் உடன் அழைத்து சென்றுள்ளனர். மற்றவர்கள் வீட்டில் உள்ள வயதானவர்களின் பாதுகாப்பில் குழந்தைகளை விட்டு சென்றுள்ளனர்.

பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது பார்வையற்ற பாட்டியுடன் வசிக்கும் அஸ்வினி இது குறித்து கூறுகையில்,'' கிராமத்திற்கு தினமும் வரும் தண்ணீர் டேங்கரில் இருந்து ஐந்து தொட்டிகளில் குடிநீர் நிரப்புகிறேன். நான் போதுமான தண்ணீர் இருப்பதை உறுதிசெய்கிறேன். வீட்டு வேலைகளில் உதவுகிறேன். அதோடு என் பள்ளி வேலைகளை கேட்காமல் செய்கிறேன்," என்று அவர் தனது கடமைகளை பட்டியலிடுகிறார். தீபாவளிக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு,"எனக்கு என் பெற்றோர்கள் திரும்பி வர வேண்டும். அவர்கள் முடிந்தால் என்னுடன் பேசுகிறார்கள். எனக்கு ஒரு வடா-பாவ் வேண்டும்." என கண்ணீர் சிந்தினாள்.

அஸ்வினி படிக்கும் வகுப்பு ஆசிரியர் மகேஷ் புல்சல்கே இது குறித்து கூறுகையில், கிராமம் வேலைக்காக காலியாகும்போது குழந்தைகள் பருவகால இடம்பெயர்வுக்குப் பழக்கப்படுகிறார்கள். மேலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மட்டுமே தங்கி இருக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டு பெற்றோர் நான்கு மாதங்களுக்கு முன்பே சென்றுவிட்டனர்.

குழந்தைகள் எடை குறைந்துள்ளனர். இந்த ஆண்டு போதிய பணம் இல்லாததால், பலரிடம் நோட்டு புத்தகங்கள் மற்றும் பென்சில்கள் இல்லை. வேலைக்காக புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுடன் பேச அடிக்கடி என் தொலைபேசியில் அழைக்கிறார்கள், அவர்கள் பள்ளிக்குச் சென்றிருக்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ளக்கூட என்னை அழைக்கிறார்கள்''என்றார். அவர் புலம்பெயர்ந்த பெற்றோர்களுக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பாக மாறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் சுமார் 15 லட்சம் பருவகால கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களில் சுமார் 10 லட்சம் பேர் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்திற்கு கரும்பு வெட்டுவதற்காக ஆகஸ்ட் மாதமே புலம்பெயர்ந்த நவ்நாத் சவான் இது குறித்து கூறுகையில்,''இங்குள்ள(சொந்த ஊர்) சோயாபீன் மற்றும் பருத்தி பயிர்களில் விளைச்சல் இல்லை, அதனால் என்னைப் போன்றவர்களுக்கு வேலை இல்லை. கடந்த ஆண்டு ஒப்பந்ததாரரிடம் ரூ.3 லட்சம் முன்பணம் வாங்கி இருக்கிறேன். எனவே அதற்கு வேலை செய்ய ஒப்பந்ததாரர் கூப்பிடும் இடத்திற்கு நான் செல்ல வேண்டியிருந்தது. எனக்கு மொழி தெரியாததால் தமிழ்நாட்டில் எனக்கு கடினமாக உள்ளது" என்கிறார்.

கரும்பு வெட்டுபவர்கள் இந்த ஆண்டு இரட்டை குடியேற்றத்தை மேற்கொள்ள வேண்டும். முதலில் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை கரும்பு வெட்டுவார்கள். பின்னர் கர்நாடகா அல்லது மேற்கு மகாராஷ்டிராவில் டிசம்பர் வரை கரும்பு வெட்டுவார்கள். பொதுவாக, மகாராஷ்டிராவில் கரும்பு வெட்டும் பருவம் அக்டோபர் முதல் மார்ச்-ஏப்ரல் வரை 5-6 மாதங்கள் நீடிக்கும். ஆனால், மகசூல் மிகக் குறைவாக இருப்பதால், டிசம்பரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 5-6 ஆண்டுகளில், ஒரு சில கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் மட்டுமே தமிழகம் முழுவதும் கரும்பு வெட்ட செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 30% உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு இந்த வேலையைச் செய்யாதவர்களும் கூட இதைச் செய்ய ஆரம்பித்துள்ளனர். கரும்பு வெட்டி முடித்த பிறகு அவர்கள் மும்பை, புனே மற்றும் குஜராத்தில் கட்டுமானப் பணிகளுக்காக செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

”125 நாள் வேலைக்கான சம்பளம் 80 நாட்களாக வரவில்லை” - தீபாவளிக்கு முன்பு வழங்க விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், ஆதனுார் கிராமத்தில், தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கரும்புக்கான ஊக்கத்தொகையை தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. வி... மேலும் பார்க்க

பூ புத்தரி: பழங்குடிகளின் பாரம்ர்ய முறைப்படி கூடலூரில் தொடங்கிய நெல் அறுவடைத் திருவிழா! | Photos

புது நெல் அறுவடைத் திருவிழா புது நெல் அறுவடைத் திருவிழா புது நெல் அறுவடைத் திருவிழா புது நெல் அறுவடைத் திருவிழா புது நெல் அறுவடைத் திருவிழா புது நெல் அறுவடைத் திருவிழா புது நெல் அறுவடைத் திருவிழா புது... மேலும் பார்க்க

ஈரோடு: 'Beggar Free India'- 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உலக சாதனை விழிப்புணர்வு நிகழ்ச்சி|Photos

ஈரோட்டில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றதுஈரோட்டில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றதுஈரோட்டில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றதுஈரோட்டில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றதுஈரோட்டில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது... மேலும் பார்க்க

`ஏ.சி அறையில் நவீன விவசாயம்; 7 நாள்களில் அறுவடை..!' - மைக்ரோ கிரீன்ஸ் விற்பனையில் அசத்தும் இளைஞர்

துரித உணவுகளின் ஆதிக்கத்தால் ஆரோக்கியத்தைச் தொலைத்துவிட்டு நிற்கும் நகர்ப்புற மக்களுக்கு, 'மைக்ரோ கிரீன்ஸ்' எனப்படும் நுண்கீரைகள் ஒரு வரப்பிரசாதமாகும். ரசாயனக் கலப்பற்ற, சத்துக்கள் நிறைந்த இந்த சூப்பர... மேலும் பார்க்க

`மழையில் நெல் மூட்டைகளை பாதுகாப்பதை விட என்ன வேலை?' - அலட்சிய அதிகாரிகளை கடிந்த அமைச்சர் வினோத்!

டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில், அமைந்துள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் ... மேலும் பார்க்க

பசுமை சந்தை..!

விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர... மேலும் பார்க்க