செய்திகள் :

IND Vs NZ: "கொஞ்சம் அலட்சியமாகச் செயல்பட்டுவிட்டோம்!" – தோல்வி குறித்து ஷ்ரேயஸ் ஐயர் ஓபன் டாக்!

post image

முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, கடைசி இரண்டு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. குறிப்பாக, கடைசி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 191 ரன்கள் எடுத்தும் நியூசிலாந்தின் அதிரடியைச் சமாளிக்க முடியாத நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்துப் மனம் திறந்திருக்கிறார் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்.

இந்தத் தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் செயல்பாட்டில் இருந்த குறைகளைச் சுட்டிக்காட்டிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், "உண்மையில், நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம். இஷான் கிஷனும் நானும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினோம். அணியின் ரன் வேகத்தையும் உயர்த்தினோம். ஆனால், அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இதனால் புதிதாகக் களமிறங்கிய வீரர்களுக்குத் திடீரென அழுத்தம் ஏற்பட்டது. அந்தச் சூழலை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்க வேண்டும்.

IND vs NZ

ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதாக இல்லை. பந்துகள் சில நேரங்களில் வேகம் குறைந்தும், சில நேரங்களில் வேகமாகவும் வந்தன. திலக் வர்மாவும் நானும் ஒரே மாதிரியான பந்துகளில் ஆட்டமிழந்தோம். குறிப்பாக, கடினமான நீளத்தில் வீசப்பட்ட பந்துகளை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. இருப்பினும், 194 ரன்கள் என்பது ஓரளவுக்கு நல்ல ஸ்கோர்தான். ஆனாலும், இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம்" என்றார்.

"பீல்டிங்கில் முன்னேற்றம் தேவை!"

தொடர்ந்து அணியின் பந்துவீச்சு, பீல்டிங் குறித்துப் பேசியவர், "பந்துவீச்சிலும் பீல்டிங்கிலும் நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். கொஞ்சம் அலட்சியமாகச் செயல்பட்டுவிட்டோம். குறிப்பாக, பீல்டிங் என்பது நாங்கள் முன்னேற்றம் காண வேண்டிய ஒரு பகுதி. இதுகுறித்து அணியினர் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்து, சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

IND vs NZ

இந்தியாவுக்கு வெளியே விளையாடும்போது வெவ்வேறு மைதானங்கள், சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. முதல் மூன்று போட்டிகளிலும் எங்களுக்குச் சாதகமான சூழல் அமைந்தது. கடைசி இரண்டு போட்டிகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு எங்களை நாங்களே சவாலுக்கு உட்படுத்திக்கொள்ள விரும்பினோம். இன்றைய போட்டியில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இருப்பினும், இது எங்களுக்குச் சிறந்த கற்றல் அனுபவம்.

IND vs NZ

இந்தியாவில் அதிகம் கிடைக்காத இரவு நேர வெளிச்சம், தெளிவான வானம் போன்ற சூழல்களில் விளையாடுவது எளிதல்ல. அதுவும் எங்களுக்கு ஒரு புதிய அனுபவம்தான். மைதானத்துக்கு வந்த ரசிகர்களின் ஆதரவு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்தது. அவர்களின் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது" என்று ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.

`யார் சாமி இவன்?'- கிங் கோலியையே வலைப்பயிற்சியில் திணறடித்த இளம் வீரர் அகிப் நபி!

டாப் கிளாஸ் பிளேயர் என்றால் அது நம்ம கிங் கோலிதான்! விராட் கோலி பேட்டிங் ஆட ஆரம்பித்தாலே எதிரில் பந்து வீசுபவர்களுக்கே ஒரு பயம் இருக்கும். எப்படி பந்து வீசுவது என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு விராட் க... மேலும் பார்க்க

“காயம் ஏற்பட்டால்தான் வாய்ப்பா?” – வைபவை வீட்டுக்கு அனுப்பச் சொன்ன ஆகாஷ் சோப்ரா!

கிரிக்கெட்டில் திறமை மட்டும் போதுமா? அந்தத் திறமையை வெளிப்படுத்தத் தொடர்ந்து வாய்ப்பும் கிடைக்க வேண்டுமல்லவா! அப்படித் தனக்குக் கிடைத்த வாய்ப்பில் திறமையை நிரூபித்தும், அடுத்த போட்டியிலேயே அணியிலிருந்... மேலும் பார்க்க

NZ v IND: `அவர்களால் எப்படி இது முடிந்தது? எனக்குப் புரியல.!" - பாராட்டிய ஷ்ரேயாஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ், அபிஷேக் ஷர்மா - வைபவ் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய பிறகு பேசிய கேப்டன் ஷ... மேலும் பார்க்க

“யுவி சார், அது அவ்ளோ ஈஸி இல்ல!” -யுவராஜின் ஜாலியான கிண்டலுக்கு அபிஷேக் ஷர்மாவின் கூல் பதில்

தனது அதிரடி ஆட்டத்தால் மைதானத்தை அதிரவைத்த கையோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்ற அபிஷேக் ஷர்மா, தனது கிரிக்கெட் ஆசான் யுவராஜ் சிங்கின் சமூக வலைதள நகைச்சுவைக்கு கூலாக பதிலளித்திருக்கிறார். யுவராஜ... மேலும் பார்க்க

NPL: ஒப்பந்தம் போட்டாச்சு... விளையாட அனுமதி கிடைக்குமா? பாகிஸ்தான் வீரர்களுக்கு வந்த சிக்கல்!

நேபாளத்தில் நடைபெறவுள்ள நேபாள பிரீமியர் லீக் (NPL) டி20 தொடரில் பங்கேற்கப் பல பாகிஸ்தான் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், வீரர்களுக்குத் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்குவதற்கு பாக... மேலும் பார்க்க

"'உடற்தகுதி பெறுங்கள்; அணியில் இடம் உண்டு' என்றார்; ஆனால்...''- கோலி மீது அமித் மிஸ்ரா குற்றச்சாட்டு

காயத்துக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பலாம் என நம்பியிருந்த அமித் மிஸ்ராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாகக் கூறுகிறார். உடற்தகுதியைப் பெற்றால் அணியில் இடம் கிடைக்கும் என்று விராட் கோலி உறுதியளி... மேலும் பார்க்க