செய்திகள் :

ஆந்திரா: பள்ளிக்குள் புகுந்து மாணவிகள் மீது தாக்குதல்: துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்த போலீஸ்!

post image

நேற்று முன்தினம் (அக்டோபர் 31) ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராப்தாடு ஜே.பி. உயர்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது வகுப்பறைக்குள் புகுந்த 21 வயதான நபர் ஒருவர் இரு மாணவிகளைச் சங்கிலி ரம்பத்தால் தாக்கிவிட்டு, தப்பி ஓடிவிட்டார்.

அவரை ஆந்திரா போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

ஹேமந்த்
ஹேமந்த்

சுட்டுப்பிடிப்பு

இதுவரை வெளியாகி உள்ள தகவலின்படி, நேற்று (நவம்பர் 1) ஹேமந்த் (என்கிற ‘டும்மு’) என்ற அந்தச் சந்தேக நபர் காட்டுப் பகுதி ஒன்றில் தலைமறைவாக இருப்பதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

ஹேமந்த்தைக் கைது செய்யப் போலீசார் சென்றபோது, கையில் கத்தியுடன் தப்பித்துச் செல்ல முயன்றிருக்கிறான். போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளான். இதில் பல போலீசார் காயமடைந்துள்ளனர்.

இதனால், போலீசார் அவனை நோக்கி 6 சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்திருக்கின்றனர்.

ஆசிரியர் என்ன சொல்கிறார்?

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஆசிரியர், “குற்றவாளி சங்கிலி ரம்பத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழையும்போது, அது என்னவென்று சரியாகத் தெரியவில்லை.

பள்ளியில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்ததால், அது சம்பந்தமான எந்திரம் என்று நினைத்துக்கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

IVF: `சட்டவிரோதமாக பெண்களின் கருமுட்டையை பிரித்தெடுத்த கும்பல்' - 8 பேர் கைது; 43 பெண்கள் மீட்பு!

ஹைதராபாத்தின் பிரகாஷ் நகர், எர்ரகட்டா, கோபாலபுரம் ஆகிய இடங்களில் மல்காஜ்கிரி கமிஷனரேட்டின் சிறப்பு நடவடிக்கைக் குழு (SOT) மற்றும் உள்ளூர் காவல்துறை இணைந்து கருத்தரிப்பு மையங்களில் சோதனை நடத்தினர். அப்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம் வந்தவரிடம் 900 மதுபாட்டில்கள் பறிமுதல்!

தூத்துக்குடி, லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர், லெவிஞ்சிபுரத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், இவரது வீட்டில் 1,000 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த... மேலும் பார்க்க

ரூ.3 லட்சம் கடனால் நெருக்கடி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்!

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்ஙனாச்சேரி எஸ்.பி. கல்லூரி அருகே கரிங்கடயில் பகுதியில் வசித்து வந்தவர் ஸாஜூ (64). இவரது மனைவி அனு (59). இவர்களுக்கு சவின் (33) என்ற மகன் இருந்தார். வழக்கமாக காலையில்... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்கில் விசிக முன்னாள் நிர்வாகி படுகொலை; தூத்துக்குடியில் பதற்றம்... போலீஸார் குவிப்பு!

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலாளர். மேலும் இந்த பகுதியில் காய்கற... மேலும் பார்க்க

மது போதையில் போலீஸாரை தாக்கிய போதை கும்பல்; சிகிச்சையிலிருந்த ஊர்காவல் படை வீரர் உயிரிழப்பு!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் காவல் நிலையத்தில், ராஜாகண்ணு போலீஸாகவும், வெங்கடேசன் (47) ஊர்க்காவல் படை வீரராகவும் பணி புரிந்தனர். இருவரும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம... மேலும் பார்க்க

திருப்பூர்: முத்தம் கேட்டு டார்ச்சர் செய்த போலீஸ் ஏட்டு; ரௌடியின் புகாரால் சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம், மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 35 நபர் மீது மங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய அந்த ... மேலும் பார்க்க