செய்திகள் :

இந்தியா கூட்டணி பேரணி: ``நீங்கள் கூறிய 10 லட்சம் மக்கள் எங்கே? " - விமர்சிக்கும் பாஜக

post image

தேர்தல் நடைமுறைகளில் "வாக்குத் திருட்டு" (Vote Chori) நடைபெறுவதாகக் குற்றம் சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியை ராஜினாமா செய்யக் கோரி 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நேற்று பிரம்மாண்ட போராட்டப் பேரணியை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் இல்லத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி, சி.பி.ஐ.(எம்) தலைவர் எம்.ஏ. பேபி, சி.பி.ஐ. தலைவர் டி. ராஜா, சி.பி.ஐ.(எம்.எல்) பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் பி.டி.பி. தலைவர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஒன்று திரண்டனர்.

இந்தியா கூட்டணி பேரணி
இந்தியா கூட்டணி பேரணி

அங்கிருந்து புறப்பட்டு மின்டோ சாலைக்கு வந்து, டெல்லி மின்டோ சாலை - கான்ஃபாட் பிளேஸ் சந்திப்பிலிருந்து திறந்தவெளி வாகனத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ராம்லீலா மைதானத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். "வாக்கைக் காப்போம், தேசத்தைக் காப்போம்" என்ற முழக்கத்துடன் தொடங்கிய இந்த எதிர்ப்புப் பேரணியில், 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் கொடிகளையும் பேனர்களையும் ஏந்தியபடி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் இளைஞர் அமைப்பினர் திரளாகக் கலந்துகொண்டனர்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து முன்கூட்டியே டெல்லிக்கு வந்து சேர்ந்த தொண்டர்களின் கூட்டத்தால், பிற்பகல் 1:30 மணியளவில் ராம்லீலா மைதானப் பகுதி மக்கள் வெள்ளமாக மாறியது. மோடி அரசுக்கும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும் எதிராக அவர்கள் தீவிர முழக்கங்களை எழுப்பினர். இந்தப் பேரணிக்கு முந்தைய நாள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் இல்லத்தில் நாடாளுமன்ற வடிவிலான கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இந்தியா கூட்டணி பேரணி
இந்தியா கூட்டணி பேரணி

முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார் தலைமை தாங்கிய அக்கூட்டத்தில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகக் குறியீட்டு முறையில் "மக்களின் நம்பிக்கையில்லா தீர்மானம்" (Public Impeachment) கொண்டு வந்தனர். தேர்தலில் வாக்குகளை நீக்கி முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டிய தலைவர்கள், அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடதக்கது.

இந்தப் பேரணி குறித்து பா.ஜ.க எம்பி சம்பித் பாத்ரா, ``ராகுல் காந்தி பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் நாற்காலிகள் காலியாகக் கிடக்கின்றன. 50,000 பேர் மட்டுமே கொள்ளளவு கொண்ட ராம்லீலா மைதானத்தைக் கூட காங்கிரஸால் முழுமையாக நிரப்ப முடியவில்லை. இது ஒரு சூப்பர் பிளாப் பேரணி. நேற்று காலை முதலே நாங்கள் இந்தப் பேரணியையும், ராகுல் காந்தியின் உரையையும் கவனித்து வருகிறோம். ஆனால் இறுதியாக இது ஒரு 'முழுமையான நேர விரயம்' என்றே தோன்றுகிறது. அவர்கள் கூறிய 10 லட்சம் மக்கள் எங்கே? எங்களுக்குக் காட்டுங்கள். இதுபோன்ற தந்திரங்களால் யாரும் தலைவரோ அல்லது பிரதமரோ ஆகிவிட முடியாது.

'PM' என்றால் வெறும் 'Prime Minister' (பிரதமர்) மட்டும் அல்ல. P என்றால் 'Paseena' (வேர்வை), M என்றால் 'Mehnat' (உழைப்பு). வேர்வையினாலும் கடின உழைப்பினாலும்தான் ஒரு பிரதமர் உருவாகிறார். இத்தனை கட்சிகளையும் கொடிகளையும் ஒன்று திரட்டியும் கூட அவர்களால் 10 லட்சம் பேரைச் சேர்க்க முடியவில்லை. எதிர்க்கட்சியினர் கூட்டத்தைப் பெரிதாகக் காட்டுவதற்காகக் கேமரா கோணங்களை பயன்படுத்தி புகைப்படத் தந்திரங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ராகுல் ஜி, இந்துஸ்தான் ஒன்றும் உங்கள் முப்பாட்டனாரின் சொத்து அல்ல. இந்துஸ்தான் என்பது இந்தியர்களுக்குச் சொந்தமானது. இங்கே ஒரு டீ விற்பவரால் கூட பிரதமராக முடியும் அதுதான் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது" என்றும் சாடியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

முரசுப் புயல்: "மின் அமைப்புகளைச் சீரமைக்க உதவி செய்யுங்கள்" - விஜய்யிடம் பேசிய சந்திரபாபு நாயுடு

தமிழ்நாட்டைப் போல ஆந்திரப் பிரதேசத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இன்னொருபுறம், அர்னாப் புயலின் தாக்கம் ஆந்திரப் பிரதேசத்தில் கடுமையாக இருந்தது. ஆந்திராவின் கடலோரப் பகுதிகளைத் தாண்டி, உள்நாட்டு ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா; திமுக கொண்டாட்டம்; லட்டுகளை தட்டோடு பறிமுதல் செய்த போலீஸ்

புதுக்கோட்டையில் ரூ.19 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் ரூ.8 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள உள் விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழாவை ஒட்டி, அப்பகுதி முழுவதும் வி... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டுக்கென தனிக்கொடி" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைப் போல, தமிழை முதன்மைப்படுத்தி தமிழ்நாட்டிற்கும் ஒரு தனிக்கொடியை உருவாக்க வேண்டும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூர... மேலும் பார்க்க

பெருந்துறை: அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க ஜெயக்குமார் யார்? ஆதரவு அமைச்சர்களால் சிக்கலில் அதிகாரிகள்!

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயக்குமார். அடுத்த சில தினங்களில் தன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செ... மேலும் பார்க்க

"அன்பில் கைதுக்கு காரணமானவரோடு தருமபுரி எம்.பி காட்டும் நெருக்கம்!" - கொந்தளிக்கும் திமுக-வினர்!

"தி.மு.க ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் புகார் கொடுத்தவரின் நிறுவனம் நடத்திய விழாவில் கலந்துகொண்ட எம்.பி மீது நடவடிக்கை எடுங்கள்" என்று தருமபுரி மாவட்ட தி.மு.க-வினர் தலைமைக்கு புகார் அனுப்ப... மேலும் பார்க்க

``பொது இடத்தில் மது குடித்த இளைஞர்கள்: தட்டிக்கேட்ட ஊர்க்காவல்படை வீரர் அடித்துக்கொலை" - அன்புமணி

மது குடித்ததைத் தட்டிக்கேட்ட ஊர்க்காவல் படை வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அன்புமணி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அரியலூர் மாவட்... மேலும் பார்க்க