செய்திகள் :

GST: "கேரளா, ஆந்திரா, கர்நாடகா இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி; தமிழகம் 3% மட்டுமே!" - தங்கம் தென்னரசு

post image

கடந்த சில மாதங்களாக, பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது தமிழ்நாடு. இதைச் சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

"பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து.

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில், கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது.

இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும்,

அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன்". என்றார்.

’ஒருவேளை நான் செந்தில் பாலாஜியாக, கடந்த கால அமைச்சர்களாக இருந்திருந்தால்.!’ – அமைச்சர் விக்னேஷ்

கோவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 480 கோடி பாட்டில்கள் விற்பனையாகின்றன. காலி பாட்டில்களை திர... மேலும் பார்க்க

``ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில் 5 கோடி பேரமா?" - டிடிவி தினகரன் காட்டம்

சென்னையில் நடந்த தமிழ்நாடு நாள் விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்கு கொடுக்க சொல்லுங்கள்... அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ.5 கோடி தரு... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இரவோடு இரவாக மாற்றபட்ட முதல்வர் விழா மேடை! - நலத்திட்டப் பயனாளிகள் ஏமாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் முதலமைச்சர் விஜய் கலந்துகொள்ளும் அரசு விழாவின் இடம் திடீரென இரவோடு இரவாக மாற்றப்பட்டிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முடிவுற்ற பணிகள் திறப்புகட... மேலும் பார்க்க

``இந்திய கூட்டணி பேரணியில் ஏன் பங்கேற்கவில்லை" - சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே விளக்கம்!

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்திய கூட்டாணி தலைவர்கள் சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்த சிஜேபி அதில் கலந்துக்கொள்ளப்போவதி... மேலும் பார்க்க

முரசுப் புயல்: "மின் அமைப்புகளைச் சீரமைக்க உதவி செய்யுங்கள்" - விஜய்யிடம் பேசிய சந்திரபாபு நாயுடு

தமிழ்நாட்டைப் போல ஆந்திரப் பிரதேசத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இன்னொருபுறம், அர்னாப் புயலின் தாக்கம் ஆந்திரப் பிரதேசத்தில் கடுமையாக இருந்தது. ஆந்திராவின் கடலோரப் பகுதிகளைத் தாண்டி, உள்நாட்டு ... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணி பேரணி: ``நீங்கள் கூறிய 10 லட்சம் மக்கள் எங்கே? " - விமர்சிக்கும் பாஜக

தேர்தல் நடைமுறைகளில் "வாக்குத் திருட்டு" (Vote Chori) நடைபெறுவதாகக் குற்றம் சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியை ராஜினாமா செய்யக் கோரி 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நேற்று பிரம... மேலும் பார்க்க