செய்திகள் :

``இந்திய கூட்டணி பேரணியில் ஏன் பங்கேற்கவில்லை" - சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே விளக்கம்!

post image

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்திய கூட்டாணி தலைவர்கள் சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்த சிஜேபி அதில் கலந்துக்கொள்ளப்போவதில்லை எனவும் அறிவித்தது. சனிக்கிழமை மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே, ``இந்தியா கூட்டணியின் போராட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவையும், தோழமையையும் தெரிவிக்கிறோம். ஆனால், காக்ரோச் ஜனதா கட்சி என்பது ஒரு சுயசார்புடைய அமைப்பு. இது ஒரு நடுநிலையான தளம்.

அபிஜித் தீப்கே
அபிஜித் தீப்கே

அதை அப்படியே நிலைநிறுத்தவே நாங்கள் விரும்புகிறோம். வாக்காளர் பட்டியலின் உண்மைத் தன்மையை மீட்கப் போராடும் அனைத்து அமைப்புகளுக்கும் நாங்கள் ஆதரவளிப்போம்," என்று தெளிவுபடுத்தினார். அதைத் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில், ``SIR மூலமாக வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை சீர்குலைக்கப்பட்டுள்ளது. சுதந்திரமான தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டது. எனவே, தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும் சுதந்திரத்தையும் மீட்டெடுக்க அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்." எனவும் பதிவிட்டிருந்தார்.

’ஒருவேளை நான் செந்தில் பாலாஜியாக, கடந்த கால அமைச்சர்களாக இருந்திருந்தால்.!’ – அமைச்சர் விக்னேஷ்

கோவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 480 கோடி பாட்டில்கள் விற்பனையாகின்றன. காலி பாட்டில்களை திர... மேலும் பார்க்க

``ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில் 5 கோடி பேரமா?" - டிடிவி தினகரன் காட்டம்

சென்னையில் நடந்த தமிழ்நாடு நாள் விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்கு கொடுக்க சொல்லுங்கள்... அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ.5 கோடி தரு... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இரவோடு இரவாக மாற்றபட்ட முதல்வர் விழா மேடை! - நலத்திட்டப் பயனாளிகள் ஏமாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் முதலமைச்சர் விஜய் கலந்துகொள்ளும் அரசு விழாவின் இடம் திடீரென இரவோடு இரவாக மாற்றப்பட்டிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முடிவுற்ற பணிகள் திறப்புகட... மேலும் பார்க்க

GST: "கேரளா, ஆந்திரா, கர்நாடகா இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி; தமிழகம் 3% மட்டுமே!" - தங்கம் தென்னரசு

கடந்த சில மாதங்களாக, பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது தமிழ்நாடு. இதைச் சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. "பொருளாதார வளர்ச... மேலும் பார்க்க

முரசுப் புயல்: "மின் அமைப்புகளைச் சீரமைக்க உதவி செய்யுங்கள்" - விஜய்யிடம் பேசிய சந்திரபாபு நாயுடு

தமிழ்நாட்டைப் போல ஆந்திரப் பிரதேசத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இன்னொருபுறம், அர்னாப் புயலின் தாக்கம் ஆந்திரப் பிரதேசத்தில் கடுமையாக இருந்தது. ஆந்திராவின் கடலோரப் பகுதிகளைத் தாண்டி, உள்நாட்டு ... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணி பேரணி: ``நீங்கள் கூறிய 10 லட்சம் மக்கள் எங்கே? " - விமர்சிக்கும் பாஜக

தேர்தல் நடைமுறைகளில் "வாக்குத் திருட்டு" (Vote Chori) நடைபெறுவதாகக் குற்றம் சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியை ராஜினாமா செய்யக் கோரி 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நேற்று பிரம... மேலும் பார்க்க