செய்திகள் :

நெல்லை: குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரௌடி கொலை; நண்பர்களே தீர்த்துக் கட்டினார்களா என போலீஸ் விசாரணை

post image

கொலை, கொலை முயற்சி, மிரட்டல் உள்பட ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சாலமன் சாம் பிரபாகரை பாளையங்கோட்டை போலீஸார் ரௌடி பட்டியலில் வைத்திருந்தனர். அவருக்கு நிறைய எதிரிகள் இருந்துள்ளனர்.

​நெல்லை, பாளையங்கோட்டை மனகாவலம் பிள்ளை நகரைச் சேர்ந்தவர் டேவிட் ராஜ் மகன் சாலமன் சாம் பிரபாகர். 34 வயதான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் நேற்றிரவு தனது வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்தபோது இரண்டு பைக்குளில் சிலர் வந்துள்ளனர். அவர்கள், சாலமன் சாம் பிரபாகருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இரவில் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு உறங்கச் சென்றுவிட்டனர்.

காவல்துறையினர் விசாரணை
காவல்துறையினர் விசாரணை

அந்தச் சமயத்தில், சாலமன் பிரபாகரிடம் பேசிக்கொண்டிருந்தவர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில், இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போது சாலமன் பிரபாகரிடம் வாக்குவாதம் செய்தவர்களில் இருவர், தாங்கள் ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே சாலமன் பிரபாகர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் ஓடிவந்ததால் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் சம்பவத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அத்துடன், பாளையங்கோட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ், நெல்லை மாநகர நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து சாலமன் சாம் பிரபாகர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், "கொலை செய்யப்பட்ட சாலமன் பிரபாகர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். அவருக்கு நிறைய எதிரிகள் உள்ளனர். அத்துடன் அவரது கும்பலைச் சேர்ந்த சிலருக்கும் அவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகத் தெரிகிறது.

நேற்று இரவு அவர் பைக்கில் வந்த போது அவரைப் பின்தொடர்ந்து இரண்டு பைக்குகளில் சிலர் வந்துள்ளனர். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்திலேயே கொலை நடந்திருக்கிறது. கொலையாளிகள் யார் என்பது கண்டுபிடிக்க பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள்" என்று தெரிவித்தனர்.

கொலை
கொலை

எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் பாளையங்கோட்டை நகரில் இரவு நேரத்தில் நடந்த இந்தக் கொலைச் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்திருக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் போலீஸார் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1.5 ஏக்கர் நிலத்திற்காக நடந்த கொடூரம்; மருமகளை கழுத்தை அறுத்துக் கொன்ற மாமனார்; தெலங்கானாவில் பகீர்

தெலங்கானா மாநிலத்தில் உள்ள மெஹ்பூப் நகர் மாவட்டத்தில் உள்ள ஓபுலயபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுனிதா(28), இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு, சிந்தல் தண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்த பல்ராம் என்பவரை திருமணம் செ... மேலும் பார்க்க

Ooty: பட்டாவில் பெயர் மாற்ற ரூ.1.25 லட்சம் லஞ்சம்; VAO கைது; சிக்கியது எப்படி?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட எடக்காடு, நடுஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் வசந்த். இவரின் தந்தை பெயரில் உள்ள 3 ½ சென்ட் நிலத்தைத் தானமாக வழங்கியிருக்கிறார். பட்டா பெயர் மா... மேலும் பார்க்க

இலங்கைக்குக் கடத்த இருந்த 198 கிலோ கஞ்சா பிசின் பறிமுதல்; சிக்கிய நபரிடம் போலீஸார் தீவிர விசாரணை

பாசிப்பட்டினம் பாசியம்மன் கோவில் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாக எஸ்.பி.பட்டினம் காவல் ஆய்வாளர் டேவிட் ரவிராஜனுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து காவல் ஆய்வாளர் தலைமையிலான தன... மேலும் பார்க்க

கேரளம்: இன்ஸ்டாவில் பெண் குரலில் பேசி வரவழைத்து மாணவன் கொலை; காதல் விவகாரமா எனப் போலீஸ் விசாரணை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பாங்கப்பாறை சங்கீத நகர் நேதாஜி லேன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் மது. ஆட்டோ ஓட்டுநரான இவரது மகன் அபிராம் (17). இவரது தாய் தர்மஜா மற்றும் சகோதரி ஆகிய... மேலும் பார்க்க

கோவை சிறை வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதி; பவானியில் கைது; பின்னணி என்ன?

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற பரபரப்பு அடங்காத நிலையில், கோவை சிறை வளாகத்தில் இருந்து ஒரு கைதி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் அன்னூர... மேலும் பார்க்க

வங்கியில் ரூ.36 கோடி பணம், தங்கம் கொள்ளை; 17 கிமீ விரட்டிச்சென்று கொள்ளையர்களைப் பிடித்த மக்கள்

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் அருகில் உள்ள போகர் என்ற கிராமத்தில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குள் மாலை 2.45 மணிக்கு ஹெல்மெட் அணிந்த நான்கு கொள்ளையர்கள் திடீரென நுழைந்தனர். அவர்கள் நுழைந்த நேரத... மேலும் பார்க்க