செய்திகள் :

DMK: மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிடும் ஸ்டாலின்... டென்ஷனில் உதய்... பரபரக்கும் அறிவாலயம்!

post image

திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் விரைவில் வெளியிடவுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் 'இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்' என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எதிர்பார்ப்பதால் அறிவாலயமே பரபரப்பாகியிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

‘2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோற்றது ஏன்?’ என்பதை அறிய 36 பேர் கொண்ட கள ஆய்வுக்குழுவை அமைத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அதன்படி, தொகுதிவாரியாகப் பயணித்து, தி.மு.க தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்து, அவர்கள் சொன்ன கருத்துகளைத் தொகுத்து சமர்ப்பித்திருக்கிறார்கள் ஆய்வுக்குழு நிர்வாகிகள்.

`கட்சியின் உள்கட்டமைப்பில் ஏகப்பட்ட மாற்றங்கள் தேவை’ எனத் தொண்டர்கள் பெரும்பாலானோர் கருத்து சொல்லவே, மறுசீரமைப்புக் குழு ஒன்றையும் அறிவித்தார் ஸ்டாலின்.

நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், "தி.மு.க மறுசீரமைப்பு குழுவின் பரிந்துரையை ஏற்று கட்சி மாவட்டங்களை மாற்றியமைத்து 78 மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 110-ஆக உயர்த்தினார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ஆகஸ்ட் 28-ம் தேதி 110 மாவட்டங்களை அறிவித்தாலும் அதற்கான செயலாளர்களை இன்னும் அறிவிக்காமல் வைத்திருக்கிறது தி.மு.க. தேர்தல் நடத்துவோம்.. நியமிப்போம்.. என மாறி மாறி சொல்லப்பட்டாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

 ஸ்டாலின்
ஸ்டாலின்

இதனால் வெகுண்டெழுந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 'கட்சி மாவட்டங்களை அறிவித்துவிட்டு மாவட்டச் செயலாளர்களை அறிவிக்காமல் வைத்திருப்பது பவள விழா கண்ட கட்சிக்கு நல்லதல்ல' என அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

பலமுனைகளிலிருந்து அழுத்தம்வர நவம்பர் இறுதிக்குள் 110 புதிய மாவட்டச் செயலாளர்களையும் அறிவித்துவிடலாம் என முடிவெடுத்திருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்'' என்றனர்.

நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், "மாவட்டச் செயலாளர் பட்டியலை ஸ்டாலின் வெளியிடாமல் வைத்திருப்பதற்கும் உதயநிதி அழுத்தம் கொடுப்பதற்கும் சில பின்னணி காரணங்கள் இருக்கின்றன.

யாரை மாவட்டச் செயலாளராக நியமிக்கலாம் என ஆலோசனை வருகிறபோது மறுசீரமைப்புக் குழு ஓர் ஆலோசனையைச் சொல்லியிருக்கிறது, அதேநேரம் இளைஞரணி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் வேண்டும் என உதயநிதி பரிந்துரை கடிதத்தை நீட்டியிருக்கிறார்.

உதயநிதி, கனிமொழி
உதயநிதி, கனிமொழி

'தென்மாவட்டங்களில் என்னைக் கேட்காமல் யாரையும் நியமிக்க வேண்டாம்' எனக் கனிமொழியும் அழுத்துகிறார், இதற்கிடையில் 'நாங்கள் சொல்பவர்களைக் கணக்கில் கொள்ளுங்கள்' எனச் சீனியர்களும் வரிந்து கட்டுகிறார்கள். இதில், இளைஞரணி நிர்வாகிகள் கணிசமானோரை மாவட்டச் செயலாளர் ஆக்கியே தீரவேண்டும் என உதயநிதி கருதுவதால் அறிவாலயமே பரபரப்பாகி கிடைக்கிறது. யார் கை ஓங்கியிருக்கிறது என்பதை விரைவில் வெளிவரும் மா.செ பட்டியல்தான் சொல்லும்" என்றனர்.

அமெரிக்க மிட் டேர்ம் தேர்தல்: ட்ரம்பிற்கு ஆரம்பத்திலேயே பின்னடைவு; மக்கள் அதிருப்தியின் எதிரொலியா?

அமெரிக்காவில் நேற்று (நவம்பர் 3) மிட் டேர்ம் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இது அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் தேர்தல் ஆகும். எத்தனை இடங்கள் பெரும்பான்மை?இதில் கீழ்சபை (US House of Representatives)... மேலும் பார்க்க

`ஓரிடத்தை எல்லா நேரமும் ஆக்கிரமிக்க முடியாது; மக்கள் வாழ்வாதாரமும் முக்கியம்..!’ - உச்ச நீதிமன்றம்

போராட்டம் நடத்துவதற்காக ஓர் இடத்தைக் காலவரையின்றி யாரும் ஆக்கிரமிக்க முடியாது என்றும், போராட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில்கூட குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம்... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு; லாக்கப்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். பின்னர் கோவை கிளம்பிய முதலமைச்சர் விஜய், செல்லும் வழியில் கரு... மேலும் பார்க்க

பெரிய குரும்பத்தெரு: தொடர் போராட்டம்; சுட்டிக்காட்டிய விகடன்; டாஸ்மாக்கை அகற்றிய மாவட்ட நிர்வாகம்!

சொன்ன வாக்குறுதிகள் நிறைவேறவில்லை... கொடுத்த மனுக்களுக்கும் தீர்வு கிடைக்கவில்லை... ஆனால், தங்களின் கோரிக்கையில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து போராடிய பெரியகுரும்பத் தெரு மக்களுக்கு இப்போது தீர்வு க... மேலும் பார்க்க

ஈரோடு: சுய உதவிக் குழுக்களுக்கு நிதி இணைப்பு வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் விஜய் | Album

ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோட... மேலும் பார்க்க

"இது என்ன சினிமாவா, Cut சொல்லிவிட்டு அடுத்த Take போவதற்கு?" - தவெக அரசை விமர்சித்த எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசைக் கண்டித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், "வெளிசந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ... மேலும் பார்க்க